நியோடிமியம்(III) ஆக்சைடு

நியோடிமியம்(III) ஆக்சைடு
Neodymium(III) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம்(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சைடு, நியோடிமியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
1313-97-9 Y
பண்புகள்
Nd2O3
வாய்ப்பாட்டு எடை 336.48 கி/மோல்
தோற்றம் வெளிர் நீல சாம்பல் அறுகோண படிகங்கள்
அடர்த்தி 7.24 கி/செ.மீ3
உருகுநிலை 2,233 °C (4,051 °F; 2,506 K)
கொதிநிலை 3,760 °C (6,800 °F; 4,030 K)[1]
.0003 g/100 mL (75 °C)
+10,200.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP5
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
வெப்பவேதியியல்
Std enthalpy offormation ΔfHo298 −1807.9 கி.யூ•மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
158.6 யூல்•மோல்−1•K−1
வெப்பக் கொண்மை, C 111.3 J•mol−1•K−1[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(II) குளோரைடு
நியோடிமியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம்(VI) ஆக்சைடு
பிராசியோடிமியம்(III) ஆக்சைடு
புரோமித்தியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

நியோடிமியம்(III) ஆக்சைடு (Neodymium(III) oxide) என்பது Nd2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம் செசுகியுவாக்சைடுஎன்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நியோடிமியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகிறது. வெளிர் சாம்பல்-நீல அறுகோண படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது[1]. முன்னதாக ஒரு தனிமம் எனக்கருதப்பட்ட அரிய-மண் கலவையான டிடிமியத்தில் ஒரு பகுதியாக நியோடிமியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது[2].

பயன்கள்

சூரிய ஒளிக்காப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட கண்ணாடிகளில் கலக்க மாசாக நியோடிமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் திண்மநிலை சீரொளிகள் உருவாக்கவும், வண்ணக்கண்ணாடிகள் தயாரிக்கவும், மிளிர்பூச்சுகள் தயாரிப்பிலும் இதைப்பயன்படுத்துகிறார்கள்[3]. நியோடிமியம் கலக்கப்பட்ட கண்ணாடி மஞ்சள் மற்றும் பச்சை ஒளியை ஈர்த்துக் கொள்வதால் செவ்வூதா நிறத்திற்கு மாறுகிறது. இதனால் பற்றவைப்புக் கண்ணாடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[4]. நியோடிமியக் கலப்பு கண்ணாடிகளில் சில இருநிறங்காட்டிகளாக விளங்குகின்றன. அதாவது ஒளி அமைப்பைப் பொறுத்து இக்கண்ணாடி நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அலெக்சாண்டரைட்டு என்று பெயரிடப்பட்ட கனிமம் சுரிய ஒளியில் நீலமாகவும் செயற்கை ஒளியில் சிவப்பாகவும் தோன்றுகிறது[5]. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7000 டன்கள் நியோடிமியம்(III) ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. பலபடியாக்கல் வினையூக்கியாகவும் நியோடிமியம்(III) ஆக்சைடைப் பயன்படுத்துகிறார்கள்[4].

வினைகள்

நியோடிமியம்(III) ஆக்சைடை நியோடிமியம்(III) நைட்ரைடு அல்லது நியோடிமியம்(III) ஐதராக்சைடு சேர்மத்தை காற்றில் எரித்துத் தயாரிக்கிறார்கள்[6].

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 471, 552, ISBN 0-8493-0594-2
  2. Brady, George Stuart; Clauser, Henry R.; Vaccari, John A. (2002), Materials Handbook (15 ed.), New York: McGraw-Hill Professional, p. 779, ISBN 978-0-07-136076-0, retrieved 2009-03-18
  3. Eagleson, Mary (1994), Concise Encyclopedia of Chemistry, Springer, p. 680, ISBN 978-3-11-011451-5, retrieved 2009-03-18
  4. 4.0 4.1 Emsley, John (2003), Nature's Building Blocks, Oxford University Press, pp. 268–9, ISBN 978-0-19-850340-8, retrieved 2009-03-18
  5. Bray, Charles (2001), Dictionary of Glass (2 ed.), University of Pennsylvania Press, p. 103, ISBN 978-0-8122-3619-4, retrieved 2009-03-18
  6. Spencer, James Frederick (1919), The Metals of the Rare Earths, London: Longmans, Green, and Co, p. 115, retrieved 2009-03-18