நிறம் மாறாத பூக்கள்
நிறம் மாறாத பூக்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
கதை | பஞ்சு அருணாசலம் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுதாகர் ராதிகா விஜயன் ரதி |
ஒளிப்பதிவு | பி.எஸ்.நிவாஸ் |
படத்தொகுப்பு | ஆர்.பாஸ்கரன் |
கலையகம் | லேனா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 31, 1979 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிறம் மாறாத பூக்கள் (Niram Maaratha Pookkal) 1979 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை பாரதிராஜா எழுதி இயக்கியுள்ளார். லேனா புரொடக்சன்சு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சுதாகர், ராதிகா, ரதி, விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2]
கதை மாந்தர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "இரு பறவைகள்" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைந்தது.[5][6]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"ஆயிரம் மலர்களே" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, ஜென்சி அந்தோனி | கண்ணதாசன் | 5:13 |
"இரு பறவைகள்" | ஜென்சி | கங்கை அமரன் | 4:24 |
"முதன் முதலாக" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 4:15 |
"நிறம் மாறப் பூக்களே" (தலைப்புப் பாடல்) | ஜென்சி | பஞ்சு அருணாசலம் | 2:48 |
"இரு பறவைகள்" (சோகம்) | எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் | 2:00 |
வெளியீடு
இத்திரைப்படம் 1979 ஆகத்து 31 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ வி. ராம்ஜி (31 அகத்து, 2020). ’மெட்ராஸ் கேர்ள்’, ‘ஃபிப்டி பைஸே’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு; 41 ஆண்டுகளாகியும் மணம் வீசுது பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’. இந்து தமிழ் திசை.
{cite book}
: Check date values in:|date=
(help) - ↑ "Niram Maratha Pookkal (1979)". Raaga.com. Archived from the original on 15 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
- ↑ "Niram Maratha Pookal Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 28 January 2022. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
- ↑ "இளையராஜா 75". தினமணி. 17 June 2018. Archived from the original on 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 23 April 2024.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 133. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.