பதுளை
6°59′5″N 81°3′23″E / 6.98472°N 81.05639°E
பதுளை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6°59′02″N 81°03′22″E / 6.984°N 81.056°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 680 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
69971 - 40920 |
பதுளை (Badulla, බදුල්ල சிலவேளைகளில் வதுளை) இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். பதுளை என்பது பதுளை மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தினதும் தலைநகரமுமாகும். பதுளை கண்டிக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையின் கடைசி தொடருந்து நிலையமான பதுளை, ஆளிஎலை தொடருந்து நிலையத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகளில் இந்நகரை அடையலாம்.[1][2][3]
புவியியலும் காலநிலையும்
பதுளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 680 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2000-2500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 69971 | 48939 | 3183 | 10921 | 6083 | 135 | 710 |
நகரம் | 40920 | 29960 | 2717 | 1989 | 5519 | 89 | 537 |
கிராமம் | 19790 | 18269 | 359 | 515 | 547 | 46 | 54 |
தோட்டப்புறம் | 9261 | 710 | 107 | 8417 | 17 | 0 | 15 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 69971 | 48191 | 12885 | 6807 | 1320 | 738 | 30 |
நகரம் | 40920 | 29385 | 4051 | 6186 | 878 | 395 | 25 |
கிராமம் | 19790 | 18120 | 752 | 594 | 182 | 142 | 0 |
தோட்டப்புறம் | 9261 | 686 | 8082 | 27 | 260 | 201 | 5 |
கைத்தொழில்
இங்கு மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
குறிப்புகள்
- ↑ "Table 1 Overview of the Köppen-Geiger climate classes including the defining criteria." (in en). Nature: Scientific Data. 23 October 2023. https://www.nature.com/articles/s41597-023-02549-6/tables/1.
- ↑ Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781442255852.
- ↑ [1] பரணிடப்பட்டது செப்டெம்பர் 8, 2006 at the வந்தவழி இயந்திரம்