பத்ரா ஆறு

பத்ரா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி தக்காணப் பீடபூமியில் பாய்கிறது. கூட்லி என்னும் இடத்தில் இது துங்கா ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது துங்கபத்ரா ஆறு என அழைக்கப் படுகிறது. பத்ரா ஆற்றின் மீது லக்கவல்லி என்னுமிடத்தில் அணை ஒன்றும் கட்டப் பட்டுள்ளது. பின் துங்கபத்ரா ஆறு கிருஷ்ணா ஆற்றுடன் கலந்து கடைசியில் வங்காள விரிகுடாவில் சேர்கிறது.