அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
மலையாளம்: സൈലന്‍റ് വാലീ നാഷണല്‍ പാര്‍ക്ക്
ஆங்கில மொழி: Silent Valley National Park
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் இருந்து பார்க்கும்போது நீலமலை
அமைவிடம்கேரளம்
அருகாமை நகரம்மண்ணார்க்காடு
ஆள்கூறுகள்11°08′N 76°28′E / 11.133°N 76.467°E / 11.133; 76.467
பரப்பளவு89.52 km2 (34.56 sq mi)
நிறுவப்பட்டது26 திசம்பர் 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-12-26)
நிருவாக அமைப்புகேரள வனத்துறை [1]

அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Silent Valley National Park) என்பது கேரளாவின் இரண்டாவது பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது 89.52 சதுர கிலோமீட்டர்கள் (35 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இது 148 km2 (57 sq mi) இடையக மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. இது தென் இந்தியாவின், கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நீலகிரி மலைகளில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் சில அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. 1847ல்  தாவரவியல் அறிஞர் ராபர்ட் வெயிட்[3] என்பவர் இந்த பகுதியில் ஆராய்ந்தார்.

இந்த பூங்காவானது இந்தியாவிலுள்ள அழிக்கப்படாத தடங்கள் கொண்ட தென் மேற்கு தொடர்ச்சி மலை மழை காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரமான பசுமையான காட்டில் உள்ளது. முன்மொழியப்பட்ட கரிம்புழா தேசியப் பூங்கா (225 km2 (87 sq mi)) வடக்கே தொடர்ச்சியாக மற்றும் முக்கூர்த்தி தேசியப் பூங்கா (78.46 கி. மீ.2) வடகிழக்கில், நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (1,455.4 கி. மீ.2) மையப் பகுதியாக, மற்றும் ஒரு பகுதியாக நீலகிரி துணை கொத்து (6,000+ கி. மீ.2), மேற்கு தொடர்ச்சிமலை உலகப் பாரம்பரியக் களம், அங்கீகாரம் மூலம் யுனெஸ்கோ 2007ல் அங்கீகரிக்கப்பட்டது.[4]

பூங்காவின் பல்லுயிரியலை அச்சுறுத்தும் ஒரு நீர்மின் திட்டத்திற்கான திட்டங்கள் 1970களில் ஒரு சுற்றுச்சூழல் சமூக இயக்கத்தைப் போராடத் தூண்டின. இது "சேவ் சைலண்ட் வேலி இயக்கம்" என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டு 1980 இல் பூங்கா உருவானது. பூங்காவிற்கான பார்வையாளர்களின் மையம் சைரந்திரியில் உள்ளது.

வரலாறு

நீலகிரி உயிர்க்கோள காப்பகம் வரைபடம் காட்டும், அமைதிப்பள்ளதாக்கு தேசிய பூங்கா தொடர்பாக பல தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட பகுதிகள்

சுற்றுச்சூழல் கவலைகள்

சோலை மந்தி

இந்தப் பள்ளத்தாக்கு அதிகளவில் சோலை மந்தி குரங்குகளின் வாழிடமாகும். இது முதனிகளுள் அருகிவரும் இனமாகும். 

குறிப்புகள்

  1. http://www.forest.kerala.gov.in
  2. Protected Planet (2018). "Silent Valley National Park". United Nations Environment World Conservation Monitoring Centre. Archived from the original on 16 January 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  3. Kumar, N. S. (2004). "Silent Valley: Trekking through the Amazon of India". Corporate House Journal of Indian Oil Corporation Limited XXXXI: 15–16. http://www.iocl.com/news1/newnews/IOCNews_August_2004.pdf. பார்த்த நாள்: 2007-07-02. 
  4. "Research: UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris". யுனெசுகோ. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-10-18.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்