பன்னா இராச்சியம்


பன்னா இராச்சியம்
पन्ना रियासत
மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா
1731–1950
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பன்னா
Location of பன்னா
பிரித்தானிய இந்தியாவின் வரைபடத்தில் பன்னா இராச்சியம்
தலைநகரம் பன்னா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1731
 •  Disestablished 1950
பரப்பு
 •  1931 6,724 km2 (2,596 sq mi)
Population
 •  1931 2,12,130 
மக்கள்தொகை அடர்த்தி 31.5 /km2  (81.7 /sq mi)
பன்னா இராச்சிய நிறுவனர், சத்திரசால் மற்றும் மராத்திய பேஷ்வா பாஜிராவ்
பன்னா இராச்சிய இளவரசியும், திரிபுரா இராச்சிய இராணியுமான கஞ்சன் பிரபா தேவி, (1947 - 1949)[1]

பன்னா இராச்சியம், இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின், புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பன்னா மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது பன்னா இராச்சியம்.

1901ல் புந்தேல்கண்ட் பகுதியில் 6724 சதுர கிமீ பரப்பு கொண்டிருந்த பன்னா இராச்சியத்தில் 1,008 கிராமங்கள் இருந்தது. பன்னா இராச்சியத்தின் தலைநகரமாக பன்னா நகரம் இருந்தது.

வரலாறு

சந்தேல இராசபுத்திர குல மன்னர் சத்திரசால், மராத்திய பேஷ்வா பாஜிராவ் உதவியுடன் முகலாயப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, 1731-இல் பன்னா இராச்சியத்தை நிறுவினார்.

பன்னா இராச்சிய மன்னர் சத்திரசால் 1732-இல் மறைவிற்குப் பின், பன்னா இராச்சியம், அவரது மகன்களுக்கிடையே பிரித்து வழங்கப்பட்டது. மேலும் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு, சத்திரசாலின் மகளான மஸ்தானியை மணந்த மராத்திய பேஷ்வா பாஜிராவுக்கு வழங்கப்பட்டது.[2]

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த பன்னா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பன்னா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையில் கீழ் செயல்பட்டது. பன்னா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

இந்தியப் பிரிவினைக்கு பின்னர், 1 சனவரி 1950-இல் பன்னா இராச்சியம், இந்தியாவின் விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, பன்னா மாவட்டமாக மாறியது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, 1 நவம்பர் 1956-இல் விந்தியப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்