பன்னாட்டு ஆற்றல் முகமை

பன்னாட்டு ஆற்றல் முகமை
International Energy Agency (ஐஈஏ)
of International Energy Agency
சின்னம்
ஐஈஏ உறுப்பினர் நாடுகள்.
ஐஈஏ உறுப்பினர் நாடுகள்.
தலைமைச் செயலகம்பாரிஸ், பிரான்சு
அங்கத்துவம்29 உறுப்பினர் நாடுகள்
தலைவர்கள்
• செயல் இயக்குநர்
பெய்த் பிரோல்
• துணை செயல் இயக்குநர்
பவுல் சைமன்சு
உருவாக்கம்1974

பன்னாட்டு ஆற்றல் முகமை (International Energy Agency, IEA; பிரெஞ்சு மொழி: Agence internationale de l'énergie) 1973 எண்ணெய் நெருக்கடியை அடுத்து 1974ஆம் ஆண்டு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) கட்டமைப்பை ஒத்து உருவாக்கப்பட்ட தன்னாட்சியான அரசுகளிடை அமைப்பு ஆகும். இது பாரிசிலிருந்து இயங்குகின்றது. ஐஈஏ துவக்கத்தில் எண்ணெய் வழங்கலில் இருந்த தடங்கல்களை நீக்குவதற்காகவும் பன்னாட்டு எண்ணெய் சந்தை மற்றும் பிற ஆற்றல் துறைகளின் புள்ளிவிவரத் தரவுகளுக்கான மையமாகவும் உருவாக்கப்பட்டது.

தனது உறுப்பினர் நாடுகளுக்கு கொள்கை அறிவுரையாளராக பொறுபாற்றும் ஐஈஏ உறுப்பினர் அல்லாத நாடுகளுடனும், குறிப்பாக சீனா, இந்தியா, மற்றும் உருசியா, வினையாற்றுகின்றது. இந்த முகமையின் உரிமைக்கட்டளை ஆற்றல் காப்பு, பொருளியல் மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றின் பயன்விளைவிக்கும் ஆற்றல் கொள்கைகளில் குவியப்படுத்தப்பட்டுள்ளது.[1] மூன்றாவதின் அங்கமாக வானிலை மாற்றங்களைக் குறைப்பதில் குவியம் கொள்ளப்படுகின்றது.[2] தவிரவும் மாற்று ஆற்றல் மூலங்களை அடையாளம் காணவும், அறிவார்ந்த ஆற்றல் கொள்கைகள், மற்றும் பன்னாட்டு ஆற்றல் தொழில்நுட்பக் கூட்டுறவு ஆகியவற்றிலும் பரந்தளவில் பங்கேற்கின்றது.

ஐஈஏ உறுப்பினர் நாடுகள் முந்தைய ஆண்டின் நிகர இறக்குமதியில் குறைந்தது 90 நாட்கள் இருப்பிற்கு இணையாக எண்ணெய் இருப்புநிலையை பராமரிக்க வேண்டும். சூலை 2009இன் முடிவில் ஐஈஏ உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கிட்டத்தட்ட 4.3 பில்லியன் பீப்பாய்கள் (680,000,000 மீ3) எண்ணெய் இருப்பை வைத்திருந்தன.

செப்டம்பர் 1, 2015இல் பெய்த் பிரோல் புதிய செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக டச்சு பொருளியியல் துறை அமைச்சராகவிருந்த மாரியா வான்டெர் ஊவன் பொறுப்பிலிருந்தார்.[3]

மேற்சான்றுகள்