பாலக் பனீர்

பாலக் பனீர்
பாலக் பனீர், கீரையுடன் கூடிய இந்திய உணவு
மாற்றுப் பெயர்கள்பாலக் சேனா
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்பசளி, பனீர்/சேனா, வெங்காயம்

பாலக் பனீர் (Palak paneer- [Paːlək pəniːɾ] அல்லது பாலக் சேனா என்பது ஓர் இந்திய உணவு ஆகும். இது சேனா அல்லது பனீர் கொண்ட கீரை உணவு ஆகும். இந்தி, மராத்தி, குசராத்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் கீரை என்பது பாலக் என்று அழைக்கப்படுகிறது.[1][2][3][4][5][6] 

பாலக் சேனா மற்றும் சாக் சேனா என்ற சொற்கள் சில நேரங்களில் ஆங்கிலத்தில் பேசும் நாடுகளில் உள்ள உணவகங்களில் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சாக் சேனா பாரம்பரிய பாலக் சேனாவிலிருந்து வேறுபட்டது. இதில் கடுகு கீரைகள் போன்ற பிற பச்சை இலை காய்கறிகள் சேர்க்கப்படும். ஆனால் பாலக் பனீரில் கீரை மட்டுமே சேர்க்கப்படும்.[7] தபா உணவகங்கள் பெரும்பாலும் பாலக் சேனாவினைச் சுவை மிகு உணவாகப் பரிமாறுகின்றன.

செய்முறை

பாலக் பனீரைத் தயார் செய்ய முதலில் கீரையினைச் சுத்தப்படுத்தி அவித்து வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பருப்பு, தக்காளி, வெங்காயம் முதலியவற்றைச் சுடு நீரில் வேகவைத்து கலவையாகக் கீரையுடன் சேர்க்கவேண்டும். இதன் பின்னர் வறுத்த பனீர் துண்டுகளைக் கீரைத் தக்காளி கலவையுடன் சேர்க்க வேண்டும். பாலக் பனீர் பொதுவாக இஞ்சி, பூண்டு, தக்காளி, கரம் மசாலா, மஞ்சள், மிளகாய்த் தூள், சீரகம் போன்ற மசாலா பொருட்களுடன் தயார் செய்யப்படுகிறது.[8][7][9][10]

பரிமாறுதல்

பாலக் பனீர் சோறுடன்

ரோட்டி, நான், புரோட்டா, மக்கி கி ரோட்டி அல்லது அரிசிச் சோற்றுடன் துணை உணவாக பாலக் பனீர் சூடாகப் பரிமாறப்படுகிறது. மேலும் இதனுடன் வெங்காயமும் சேர்த்துப் பரிமாறலாம்.

சமீப ஆண்டுகளில், பாலக் பனீரில் மாறுபாடுகள் உள்ளன. சூலை 2020-இல், பெங்களூரைச் சேர்ந்த உணவு பதிவர் ஒருவர் பாலக் பனீருடன் இட்லி சேர்ந்து மாற்றங்களுடன் பாலக் பனீர் தயார் செய்து வெளியிட்டார். இதில் ஒன்றிணைக்கப்பட்ட வட மற்றும் தென்னிந்திய பிரபல உணவுகளின் அசாதாரண கலவை குறித்து டுவிட்டர் மற்றும் இன்சுடாகிராமில் உரையாடல் தொடர்ந்தது.[11][12]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "छेना कॉर्न पालक (Chena Corn Palak recipe in Hindi) रेसिपी बनाने की विधि in Hindi by Rimjhim Agarwal". Cookpad (in இந்தி). 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  2. Pastime, Palatable. "PALAK PANEER (INDIAN FRESH SPINACH WITH PANEER CHEESE)".
  3. Wennakoski-Bielicki, Lakshmi (2015-07-21). Pure Vegetarian: 108 Indian-Inspired Recipes to Nourish Body and Soul (in ஆங்கிலம்). Shambhala Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61180-144-6.
  4. "spinach - Meaning in hindi - Shabdkosh". www.shabdkosh.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  5. "spinach - Meaning in marathi - Shabdkosh". www.shabdkosh.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  6. "spinach - Meaning in gujarati - Shabdkosh". www.shabdkosh.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  7. 7.0 7.1 "Palak Paneer | Easy Palak Paneer Recipe » Dassana's Veg Recipes". Dassana's Veg Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-05-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  8. "Easy, Creamy, Tasty Palak Paneer Recipe Hindi | पालक पनीर रेसिपी". hothindirecipe.in. 12 May 2023. பார்க்கப்பட்ட நாள் 11 May 2023.
  9. "Palak Paneer Recipe | How to Make Palak Paneer | Palak Paneer". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  10. Pitre, Urvashi (September 19, 2017). Indian Instant Pot® Cookbook: Traditional Indian Dishes Made Easy and Fast. Rockridge Press. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1939754547.
  11. "'Palak Paneer Idli' is a North-South Fusion Dish that Twitter Doesn't Want to Have". News18. 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-14.
  12. "There's now a palak paneer idli that has sparked a debate on social media". The Indian Express (in ஆங்கிலம்). 2020-07-30. பார்க்கப்பட்ட நாள் 2020-10-14.