மல்லர் வம்சம்
மல்லர் வம்சம் (Malla Dynasty) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளிப் பகுதிகளை கிபி 1201 முதல் 1769 முடிய ஆட்சி செய்த அரச வம்சமாகும். இவர்களை நேவார் மக்கள் (நேபாள நாட்டவர்) என்றும் அழைப்பர். மல்லர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்
நேபாள நாட்டு மல்லர்கள் தங்களை மகாஜனபதங்களில் ஒன்றான மல்லர்களின் வழி வந்த சத்திரிய குலத்தவர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.[1] மல்லர் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் மற்போர் செய்பவர்கள் எனப் பொருளாகும். காத்மாண்டு சமவெளியில் மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர்.
மல்லர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நேபாள நாட்டில், குறிப்பாக காத்மாண்டு சமவெளியில் கட்டிடக் கலை செழித்தோங்கியது.
வீழ்ச்சி
ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர், காத்மாண்டு மல்லர்களின் இறுதி மன்னரான ஜெயப்பிரகாஷ் மல்லாவையும், மற்ற மல்ல மன்னர்களையும், கி பி 1768- 1769-இல் காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் பக்தபூர் போர்களில் வென்று காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார்.
மல்லர்கள் வீழ்ச்சி அடைந்த போது, எஞ்சியவர்கள் நேபாளத்தின் பல பகுதிகளில் சென்று குடியேறி வாழ்ந்தனர்.[2]
மல்லர்களின் கட்டிடக் கலை
மல்லர்களின் ஆளுகைக்குட்பட்ட காத்மாண்டு, லலித்பூர், பக்தப்பூர் போன்ற நகரங்களில் காத்மாண்டு நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம், பாதன் நகர சதுக்கம் போன்ற அரண்மனை சதுக்ககங்கள் கட்டப்பட்டது. இச்சதுக்கத்தில் பெரிய அளவிலான வணிக மையங்களுடன் கூடிய பௌத்தக் கட்டிடிடக்கலை வடிவில் மரச்சிற்பங்களுடன் கூடிய அழகிய கோயில்களும், விகாரைகளும் எழுப்பப்பட்டது.
மல்லர் மன்னர்கள் காத்மாண்டு சமவெளியில் பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் சுயம்புநாதர் கோயில்கள் எழுப்பினர்.
திபெத்திய வெள்ளி நாணயங்களுக்கு பதிலாக 17-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் செப்பு நாணயங்களை மல்ல மன்னர்கள் புழக்கத்திற்கு வெளியிட்டனர். 1641 முதல் 1674 முடிய காத்மாண்டு சமவெளியை ஆண்ட பிரதாப மல்ல அரசன் அனுமந்துகோ எனும் புதிய அரண்மனை மற்றும் தங்கள் காவல் தெய்வமான துளஜா அம்மனுக்கு கோயிலை கட்டினார். பதான் நகரத்தில் உயரமான பதான் நகரச் சதுக்கத்தைக் கட்டித் தேர்த் திருவிழாக்களை நடத்தினர். மல்ல அரசர்கள் தங்களை விஷ்ணுவின் அம்சமானவர்கள் என்றும்; தெய்வீக அம்சம் பொருந்திய வாழும் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து, குமரி எனப் பெயரிட்டு, தனிக் கோயிலை கட்டி அதில் குடி வைத்த்து தொழுதனர். ஆண்டு விழாவின் போது அந்த தெய்வீகச் சிறுமியிடம் மன்னரும், மன்னர் குடும்பத்தவர்களும், பொது மக்களும் வாழ்த்துப் பெற்றனர்.[3]
-
நியாதபோலோ கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
-
பக்தபூர் நகர சதுக்கம்
-
காத்மாண்டுவின் பழைய அரண்மனை
-
காத்மாண்டு நகர சதுக்கம், கஸ்த மண்டபம்
-
வசந்தபூர் அரண்மனை வளாகம், காத்மாண்டு நகர சதுக்கம்
மல்ல வம்சத்து ஆட்சியாளர்கள்
நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளி பகுதிகளை கி பி 1201 முதல் 1769 முடிய ஆட்சி செய்த மல்ல வம்சத்து மன்னர்கள்;
காத்மாண்டு சமவெளி முழுவதையும் ஆண்டவர்கள்
- அரி தேவன் 1201 - 1216
- அபய மல்லன் 1216 - 1235
- ஜெயதேவ மல்லன் 1235 - 1258
- ஜெயபீமதேவன் 1258 - 1271
- ஜெயசிம்ம மல்லன் 1271 - 1274
- ஆனந்த மல்லன் 1274 - 1310
- ஜெயானந்த தேவன் 1310 - 1320
- ஜெயரி மல்லன் 1320 - 1344
- ஜெயருத்திர மல்லன் 1320 - 1326
- ஜெயராஜா தேவன் 1347 - 1361
- ஜெயார்சுன மல்லன் 1361 - 1382
- ஜெயஸ்திதி மல்லன் 1382 - 1395
- ஜெயஜோதிர் மல்லன் 1395 - 1428
- ஜெயகீர்த்தி மல்லன் 1395 - 1403
- ஜெயதர்ம மல்லன் 1395 - 1408
- ஜெய யட்ச மல்லன் 1428 - 1482
- இரத்தின மல்லன் 1482 - 1520
- சூரிய மல்லன் 1520 - 1530
- அமர மல்லன் 1530 - 1538
- நரேந்திர மல்லன் 1538 - 1560
- மகேந்திர மல்லன் 1560–1574
- சதாசிவ மல்லன் 1574–1583
- சிவசிம்ம மல்லன் 1583–1620
- இலக்குமிநரசிம்ம மல்லன் 1620 - 1641
- பிரதாப மல்லன் 1641–1674
- சக்கரவர்த்தேந்திர மல்லன் 1669
- மகிபாதேந்திர மல்லன் 1670
- ஜெயன் நிபேந்திர மல்லன் 1674–1680
- பார்வதிவேந்திர மல்லன் 1680–1687
- பூபாலேந்திர மல்லன் 1687–1700
- பாஸ்கர மல்லன் 1700–1714
- மகேந்திரசிம்ம மல்லன் 1714–1722
- ஜெகத் ஜெய மல்லன் 1722–1736
- ஜெயப்பிரகாஷ் மல்லா 1736–1746, 1750–1768
- ஜோதி பிரகாஷ் மல்லன்
லலித்பூர் மல்ல அரசர்கள்
- புரந்தர சிம்மன் 1580 - 1600
- ஹரிஹர சிம்மன் 1600 - 1609
- சிவ சிம்மன் 1609 - 1620
- சித்தி நரசிம்மன் 1620 - 1661
- ஸ்ரீனிவாச மல்லன் 1661 - 1685
- யோக நரேந்திர மல்லன் 1685–1705
- லோக பிரகாஷ் மல்லன் 1705–1706
- இந்திர மல்லன் (புரந்தர மல்லன்) 1706–1709
- வீர நரசிம்ம மல்லன் 1709
- வீர மகேந்திர மல்லன் 1709–1715
- ரித்தி நரசிம்மன் 1715–1717
- மகேந்திர சிம்மன் 1717–1722
- யோக பிரகாஷ் மல்லன் 1722–1729
- விஷ்ணு மல்லன் 1729–1745
- இராஜ்ஜிய பிரகாஷ் மல்லன் 1745–1758
- விஷ்வஜித் மல்லன் [1758–1760
- ஜெயப்பிரகாஷ் மல்லன் 1760–1761, 1763–1764
- இரணஜித் மல்லன் 1762–1763
- தால மார்த்தன் ஷா 1764–1765
- தேஜ் நரசிம்ம மல்லன் 1765–1768
பக்தபூர் மல்ல ஆட்சியாளர்கள்
- இராய மல்லன் 1482 - 1519
- பிராண மல்லன் 1519 - 1547
- விஷ்வ மல்லன் 1547 - 1560
- திரிலோக்கிய மல்லன் 1560–1613
- ஜெகத் ஜோதி மல்லன் 1613–1637
- நரேஸ்ஷா மல்லன் 1637–1644
- ஜெகத் பிரகாஷ் மல்லன் 1644–1673
- ஜிதமித்திர மல்லன் 1673–1696
- பூபதிந்திர மல்லன் 1696–1722
- இரணஜித் மல்லன் 1722–1769
இதனையும் காண்க
- காட்மாண்டுப் போர்
- கீர்த்திப்பூர் போர்
- பக்தபூர் போர்
- கிராத இராச்சியம்
- லிச்சாவி நாடு
- கச மல்ல இராச்சியம்
- ஷா வம்சம்
- ராணா வம்சம்
- தாபா வம்சம்
அடிக்குறிப்புகள்
- ↑ P. 58 Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations, 600-1400 By Tansen Sen
- ↑ "Where Have All The Mallas Gone?: The Descendants of the Mallas, Sampada Malla & Dinesh Rai, ECS Nepal, Jul.19.2010". Archived from the original on 2014-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ Bindloss et al. Nepal. p35.
மேற்கோள்கள்
- Bindloss, Joe; Holden, Trent; Mayhew, Bradley. (2009). Nepal. Lonely Planet.
- Savada, Andrea M., ed. (1991). Nepal: A Country Study. Washington: GPO for the Library of Congress.
- Newar, Naresh. (2004). 70 years after. Nepali Times. Issue #178 (09 Jan 2004 - 15 Jan 2004) [1] பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம். Retrieved: 10 Dec, 2011.
- Petech, Luciano. (1984). Mediaeval History of Nepal (ca. 750-1480). 2nd ed. Serie orientale, toma 54. Rome: Institutio Italiano per il Medio ed Estremo Oriente.
- Regmi, D.R. (1965–66). Medieval Nepal. Calcutta: Firma K.L. Mukhopadhyay.
- Shaha, Rishikesh. (1992). Ancient and Medieval Nepal. New Delhi: Manohar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-402-3
- Jing, Anning. (1994). The Portraits of Khubilai Khan and Chabi by Anige (1245-1306), a Nepali Artist at the Yuan Court. Artibus Asiae, Vol. 54, No. 1/2 (1994), pp. 40–86.