மியூசே ஆறு
மியூசே ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | வட கடல் 51°51′59″N 4°1′8″E / 51.86639°N 4.01889°E |
நீளம் | 925 கிமீ(575 மைல்) |
மியூசே (Meuse) ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு. பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு; மோசா, மாய்சே, மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது. தற்கால அளவீட்டின் படி உலகிலேயே மிகப்பழைய ஆறு இதுதான். இன்று 925 கிமீ நீளமுள்ள இவ்வாறு ஏறத்தாழ 380 மில்லியன் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது]][1] . தொன்மாக்கள் பேரழிவுக்கு உட்பட்டு அற்றுப்போவதற்கும் மிக முன்பிருந்தே இயங்கும் ஆறு.