முதலாம் குமாரகுப்தன்

முதலாம் குமாரகுப்தன்
குப்த பேரரசர்
குமாரகுப்தன் வெளியிட்ட தங்க நாணயம்
ஆட்சிபொ.ஊ. 414–455
முன்னிருந்தவர்இரண்டாம் சந்திரகுப்தர்
பின்வந்தவர்ஸ்கந்தகுப்தர்
வாரிசு(கள்)
தந்தைஇரண்டாம் சந்திரகுப்தர்
தாய்துருவதேவி
பொ.ஊ. 450-இல் முதலாம் குமாரகுப்தன் காலத்திய குப்தப் பேரரசு

முதலாம் குமாரகுப்தன் என்பவன் குப்தப் பேரரசனாவான். இவனுக்கு சக்ராதித்யா என்ற பெயரும் இருந்தது.[2] இவர் பொ.ஊ. 415-455 வரை பதவியில் இருந்தார். இவர் இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த இரண்டாம் சந்திரகுப்தர், துருவதேவி ஆகியோரின் மகனாவார்.[3]

ஒரு வல்லமையுள்ள ஆட்சியாளனாக இருந்த இப்பேரரசர், வங்காளத்திலிருந்து கத்தியவார் வரையும், இமயத்திலிருந்து நர்மதா வரையும் பரந்திருந்த பெரிய பேரரசைப் பாதுகாத்து வந்தார். இவர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் திறமையாக ஆட்சி செய்தார். எனினும், இவரது ஆட்சியின் இறுத்திப் பகுதி சிறப்பாக அமையவில்லை. மத்திய இந்தியாவைச் சேர்ந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன் நடத்திய கலகங்களும், வெள்ளை ஹூணர்களின் ஆக்கிரமிப்புக்களும், குப்தப் பேரரசுக்கு பிரச்சினைகளை உண்டாக்கின. ஆனால், குமாரகுப்தர், இவ்விரு பகுதியினரையும் தோற்கடித்துத் தனது வெற்றியைக் கொண்டாடுமுகமாக அசுவமேத வேள்வியை நடத்தினார்.

இவர், தனது பெயரைக்கொண்ட குமரக் கடவுளின் உருவம் பொறித்த புதிய நாணயங்களை வெளியிட்டார். இவரைப் பற்றிய குறிப்புகள் ஜூனாகத் பாறைகளில் எழுதப்பட்டுள்ளன.[4]

நாளாந்தா பல்கலைக்கழகம்

முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனெஸ்கோ நிறுவனத்தால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களக்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5][6][7]

தில்லியிலுள்ள தில்லி இரும்புத் தூண். இது குமாரகுப்தன் காலத்தில் உருவாக்கப்பட்டது

சான்றுகள்

  1. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004). A History of India (Fourth ed.). Routledge. pp. 94–97. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
  2. Sukumar Dutt (1962). Buddhist Monks And Monasteries of India: Their History And Contribution To Indian Culture. George Allen and Unwin Ltd, London. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0498-8. {cite book}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5, pp.191–200
  4. "An English translation of the text of the Junagadh Rock Inscription of Skandagupta". Archived from the original on 2008-08-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  5. http://whc.unesco.org/en/list/1502/ Archaeological Site of Nalanda Mahavihara (Nalanda University) at Nalanda, Bihar
  6. 3 Indian Sites Make It To UNESCO's World Heritage List
  7. https://www.holidify.com/blog/world-heritage-sites-in-india/ 3 Indian Places Added To World Heritage Sites; Check-out Complete List of 35 World Heritage Sites in India

இணைப்புகள்

அரச பட்டங்கள்
முன்னர் குப்தப் பேரரசு
பொ.ஊ. 414–455
பின்னர்