ரூபி கௌர்
ரூபி கௌர் | |
---|---|
ரூபி கௌர் 2017 இல் | |
பிறப்பு | 4 அக்டோபர் 1992 பஞ்சாப், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், கவிஞர் |
மொழி | ஆங்கிலம் |
குடியுரிமை | கன்னடியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மில்க் அன்டு ஹனி, தி சன் அன்டு ஹர் ஃப்ளவர்ஸ் |
ரூபி கௌர் (Rupi Kaur) (பிறப்பு அக்டோபர் 4, 1992) (பஞ்சாபி: ਰੂਪੀ ਕੌਰ) இந்தியாவில் பிறந்து கனடாவில் வாழும் கவிஞர், மற்றும் எழுத்தாளர். இவர் சிறு வயதிலேயே கனடாவிற்கு புலம்பெயர்ந்து அங்குள்ள தொராண்டோ.வில் வசிக்கிறார். இவரது கவிதை மற்றும் உரைநடைகளின் தொகுப்பு "மில்க் அன்டு ஹனி" என்கிற தலைப்பில் 2014இல் வெளிவந்தது. இப் புத்தகம் உலகெங்கிலும் 2.5 மில்லியன் அளவிற்கு விற்பனையானது; மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக "தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இடம் பிடித்தது. இவரது இரண்டாவது புத்தகமான "தி சன் அன்டு ஹர் ஃப்ளவர்ஸ்" 2017இல் வெளியானது.
இளமைப் பருவம்
கௌர், பஞ்சாப் (இந்தியா). மாநிலத்தில் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார்.[1] அவருடைய நான்காம் வயதில் பெற்றோருடன் கனடாவிற்கு குடியேறினார். அவரது தாயின் மூலம் ஓவியம் வரையவும், வர்ணம் பூசவும் கற்றுக்கொண்டார்.[2] பள்ளியில் படிக்கும் போதே சக மாணவர்களின் பிறந்த நாள் வாழ்த்தாக கவிதைகள் மற்றும் குறுந்தகவல்கள் எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது.[3] அவர் "டர்னர் ஃபென்டன் மேல்நிலைப்பள்ளியில் கலந்துகொண்டார்.[4]
கௌர், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் சொல்லாட்சி மற்றும் தொழில்முறை எழுத்து பிரிவில் சேர்ந்து படித்தார்.[3] பின்னர், அவரது குடும்பம் பிராம்ப்டன் நகருக்கு நகர்ந்தது.[5] தற்போது தொராண்டோ,ஆண்டாரியோவில் வசித்து வருகிறார்.[5]
தொழில்
கவுரின் முதல் நிகழ்ச்சி 2009 ல் மால்தோனில் உள்ள பஞ்சாபி சமூக சுகாதார மையத்தின் அடித்தளத்தில் நடைபெற்றது.[2] அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மத்தியில் அவரது மாதவிடாய் குறித்து புகைப்படத்துடன் எழுதிய கட்டுரை காட்சி கவிதையாக சமூகத்தின் உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது.[6]
உயர்நிலைப் பள்ளியில் படித்தவரை தனது படைப்புகளுக்கு தனது பெயரை அநாமதேயமாக பகிர்ந்து கொண்டார். 2013 ஆம் ஆண்டில், "தும்பிர்" இல் தனது பெயரின் கீழ் அவரது பணியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். 2014இல் இருந்து எளிய எடுத்துக்காட்டுகளுடன் கூடிய தனது கட்டுரைகளை இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றினார்.[7]
கௌரின் முதல் புத்தகமான "மில்க் அன்டு ஹனி" நவம்பர் 4, 2014இல் வெளியிடப்பட்டது..[8] இந்த புத்தகத்தின் தலைப்பு, இவர் எழுதிய கவிதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அதில் பெண்களின் நிலைப்பாடு பாலைப் போன்று மிருதுவாகவும், தேனைப் போன்று கடினமாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்."[9] இவரது கவிதை, உரைநடை, மற்றும் இவர் கைப்பட வரைந்த ஓவியங்களின் தொகுப்பாக இப் புத்தகம் உள்ளது. இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டுள்ளது.[3][10]
"மில்க் அன்டு ஹனி" புத்தகத்தின் பிரதிகள் 2.5. மில்லியனுக்கும் மேலாக விற்பனையானது.[11] இப் புத்தகத்தின் பெயர் "தி நியூயார்க் டைம்ஸின்" சிறந்த விற்பனையாகும் புத்தகங்களின் பெயர் பட்டியலில் 77 வாரங்களுக்கும் மேலாக இருந்தது.[12] இப் புத்தகம் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[7]
அவரது இரண்டாவது புத்தகமான "தி சன் அன்டு ஹர் ஃப்ளவர்ஸ்" அக்டோபர் 3, 2017இல் வெளியிடப்பட்டது.[13][14] இந்தத் தொகுப்பிலுள்ள படைப்புகள் இழப்பு, அதிர்ச்சி, சிகிச்சைமுறை, பெண்ணியம், குடிபெயர்வு மற்றும் புரட்சி போன்ற பல்வேறு கருப்பொருள்களை ஆராய்கின்றன.[15]
2019இல் "கலீல் ஜிப்ரானின்" த புரபெட் என்கிற புத்தகத்திற்கு அறிமுக உரை எழுத 'பெங்குயின் கிளாசிக்ஸ்' பதிப்பகம் இவரை நியமித்தது. இது அமெரிக்காவில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது.[16]
கலைத்திறன்
குர்முகியைப் போலவே தானும் காலத்திற்கேற்றவாறு குறைந்த வரிகளில் தனது படைப்புகளை எழுதுவதாக கூறியுள்ளார். கௌர் தனது கலாச்சாரத்தை கௌரவப்படுத்த இந்த வழியில் எழுதுவதாகவும், மேலும் அவரின் கடிதங்கள் சமத்துவம் மற்றும் பாணி அவரது உலக கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார்[2] அவரின் எழுத்துப் பணி படிக்கும் வாசகர்களுக்கு ஒரு அனுபவமாகவும், பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.[17] மோசடி, பெண்ணியம், அன்பு, தற்காப்பு மற்றும் துயரம் போன்ற பொதுவான கருப்பொருள்கள் அவரது படைப்புகளில் காணப்படுகிறது.[18]
மார்ச்சு 2015இல் கௌர் பெண்களின் மாதவிடாய் தொடர்பாக ஆறு புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராம் வலைதளத்தில் "த பீரியட்" என்கிற தலைப்பில் பதிவேற்றினார். அதில் பல சமூகத்தினர் இன்றும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் வீட்டிற்குள் மற்றும் புனித தலங்களுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை எனக் கூறியுள்ளார். பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தைப் போக்கவே தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.”[19] பின்னர் அப் புகைப்படங்கள் இன்ஸ்ட்டாகிராமிலிருந்து நீக்கப்பட்டதாக கௌர் தெரிவித்தார்.[20]
தாக்கம்
ரூபி கௌர், கலீல் ஜிப்ரான், ஆலிஸ் வாக்கர், மற்றும் ஷெரோன் ஓல்ட்ஸ் ஆகியோரின் படைப்புகளால் உந்தப்பட்டு கவிஞரானார்.[21] மேலும் சீக்கிய வேத நூல்களும் அவருக்கு உத்வேகத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.[3][22] கனடா செல்வதற்காக ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டது தன் எழுத்துப் பணிக்கு வித்திட்டது என்று கூறியுள்ளார்.[8]
விருதுகள்
2017 இல் பிபிசி யின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ரூபி கௌரின் பெயர் இடம் பெற்றது.[23]
மேற்கோள்கள்
- ↑ Fischer, Molly (October 3, 2017). "Meet Rupi Kaur, author of ubiquitous Milk and Honey". www.thecut.com. பார்க்கப்பட்ட நாள் June 5, 2018.
- ↑ 2.0 2.1 2.2 "bio | rupi kaur" (in en-US). Rupi Kaur. 2016-11-17 இம் மூலத்தில் இருந்து 2017-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415202252/https://www.rupikaur.com/bio/.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Milk & Honey: A Poet Exposes Her Heart". Kaur Life. 2014-11-20. பார்க்கப்பட்ட நாள் 2016-10-08.
- ↑ Nikita Brown (2018-04-29). "Poet Rupi Kaur Inducted Into Brampton’s Arts Walk of Fame". Bramptonist இம் மூலத்தில் இருந்து 2018-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180430182547/http://bramptonist.com/poet-rupi-kaur-inducted-into-bramptons-arts-walk-of-fame/. பார்த்த நாள்: 2018-09-19.
- ↑ 5.0 5.1 "How Rupi Kaur Became the Voice of Her Generation" (in en-US). Flare. 2016-11-11 இம் மூலத்தில் இருந்து 2017-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170512151936/http://www.flare.com/culture/rupi-kaur-milk-and-honey-the-voice-of-her-generation/.
- ↑ Briscoll, Drogan. "Feminist Artist Rupi Kaur, Whose Period Photograph Was Removed From Instagram: 'Men Need To See My Work Most'". Huffington Post. Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
- ↑ 7.0 7.1 "Rupi Kaur Is Kicking Down the Doors of Publishing" (in en-US). The New York Times. 2017-10-05. https://www.nytimes.com/2017/10/05/fashion/rupi-kaur-poetry-the-sun-and-her-flowers.html.
- ↑ 8.0 8.1 Wilson, Carl (15 Dec 2017). "Why Rupi Kaur and Her Peers Are the Most Popular Poets in the World". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/12/15/books/review/rupi-kaur-instapoets.html.
- ↑ "faq | rupi kaur". rupikaur.com (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ "Feminismo, violación y pérdida: así es la poesía de Rupi Kaur". La Vanguardia. http://www.lavanguardia.com/de-moda/20170321/421067168539/rupi-kaur-espasa-otras-maneras-de-usar-la-boca-poesia.html.
- ↑ Roy, Nilanjana (23 Feb 2018). "Voices of the new ‘Instagram poets’: Love them or hate them, thy hold the stage". பைனான்சியல் டைம்ஸ். https://www.ft.com/content/34433034-1651-11e8-9e9c-25c814761640.
- ↑ Mzezewa, Tariro (5 Oct 2017). "Rupi Kaur Is Kicking Down the Doors of Publishing". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/05/fashion/rupi-kaur-poetry-the-sun-and-her-flowers.html.
- ↑ The Sun and Her Flowers by Rupi Kaur, Andrews McMeel Publishing
- ↑ Kaur, Rupi (October 2017). the sun and her flowers (First ed.). London, New York, Sydney, Toronto, New Delhi: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4711-6582-5.
- ↑ "about | rupi kaur". rupikaur.com (in கனடிய ஆங்கிலம்). Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-10-13.
- ↑ Alter, Alexandra (29 Dec 2018). "New Life for Old Classics, as Their Copyrights Run Out". New York. https://www.nytimes.com/2018/12/29/books/copyright-extension-literature-public-domain.html.
- ↑ "thetimesofindia" (in en-US). Rupi Kaur. 2016-07-31 இம் மூலத்தில் இருந்து 2017-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415202640/https://www.rupikaur.com/thetimesofindia/.
- ↑ "milk and honey Themes - eNotes.com". eNotes. பார்க்கப்பட்ட நாள் 2017-06-07.
- ↑ "Student's final project goes viral and makes change happen - period". May 7, 2015.
- ↑ Sanghani, Radhika (2015-03-30). "Instagram deletes woman's period photos - but her response is amazing". The Telegraph. https://www.telegraph.co.uk/women/life/instagram-deletes-womans-period-photos-but-her-response-is-amazing/.
- ↑ Charleston, Erin Spencer Digital Marketer in; SC (2015-01-22). "Rupi Kaur: The Poet Every Woman Needs To Read". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
- ↑ Jain, Atishsa (2016-10-22). "A poet and rebel: How Insta-sensation Rupi Kaur forced her way to global fame". Hindustan Times. http://www.hindustantimes.com/brunch/a-poet-and-a-rebel-how-insta-sensation-rupi-kaur-forced-her-way-into-the-global-bestseller-lists/story-DCbkk7EBMxrSjdoFsxQmDM.html.
- ↑ "BBC 100 Women 2017: Who is on the list?".