லக்சம்பர்க்
லக்சம்பர்க் பெரிய டச்சி Groussherzogtum Lëtzebuerg (லக்சம்பர்கிஷ்) Grand-Duché de Luxembourg (பிரெஞ்சு) Großherzogtum Luxemburg (செருமன் மொழி) | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Mir wëlle bleiwe wat mir sinn" (லக்சம்பர்கிய மொழி) "We want to remain what we are" | |
நாட்டுப்பண்: Ons Hémécht "நம்ம நாடு" அரச வணக்கம்: De Wilhelmus 1 | |
தலைநகரம் | லக்சம்பர்க் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, ஜெர்மன், லக்சம்பர்கியம் (1984 முதல் de jure) |
மக்கள் | லக்சம்பர்கர் |
அரசாங்கம் | நாடாளுமன்ற அரசியலமைப்புசட்ட பெரிய டச்சி |
• பிரதான டியுக் | பிரதான டியுக் ஹென்ரி |
• பிரதமர் | ஜான்-கிளாட் ஜங்கர் |
விடுதலை | |
• பிரெஞ்சு பேரரசு இடம் இருந்து (பாரிஸ் ஒப்பந்தம்) | ஜூன் 9 1815 |
• முதலாம் லண்டன் ஒப்பந்தம் | ஏப்ரல் 19 1839 |
• இரண்டாம் லண்டன் ஒப்பந்தம் | மே 11 1867 |
• ஒன்றியத்தின் முடிவு | நவம்பர் 23 1890 |
பரப்பு | |
• மொத்தம் | 2,586.4 km2 (998.6 sq mi) (175வது) |
• நீர் (%) | சிறியது |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 480,222 (171வது) |
• 2001 கணக்கெடுப்பு | 439,539 |
• அடர்த்தி | 186/km2 (481.7/sq mi) (59வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $32.6 பில்லியன் (97வது) |
• தலைவிகிதம் | $81,511(2006) (1வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $40.577 பில்லியன் (65வது) |
• தலைவிகிதம் | $87,995 (1வது) |
மமேசு (2004) | 0.945 அதியுயர் · 18வது |
நாணயம் | ஐரோ (€)2 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (நடு ஐரோப்பா) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (நடு ஐரோப்பா) |
அழைப்புக்குறி | 352 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | LU |
இணையக் குறி | .lu3 |
|
லக்சம்பர்க் (Luxembourg), மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. இங்கு 2,600 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஐந்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழ்கின்றனர்.
லக்சம்பர்கில், அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சியுடன் நாடாளுமன்ற மக்களாட்சி செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக லக்சம்பர்க் பங்கு வகித்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கான லக்சம்பர்க்கின் புரிந்துணர்வை அறியலாம். இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமுமான லக்சம்பர்க் நகரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைமை இடமாக விளங்குகிறது.
இங்கு, பிரெஞ்சு மற்றும் லக்சம்பர்கிய மொழியே அன்றாட வாழ்வில் மிகையாகப் பயன்பட்டாலும், ஜெர்மன் மொழியும் அலுவல்முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமய சார்பற்ற நாடாக இருந்த போதிலும், லக்சம்பர்கில் உரோமக் கத்தோலிக்கர்கள் மிகுந்த அளவில் உள்ளனர்.