லீக்கின்ஸ்டைன்
லீக்கின்ஸ்டைன் சிற்றரசு Principality of Liechtenstein Fürstentum Liechtenstein (இடாய்ச்சு மொழி) | |
---|---|
குறிக்கோள்: "Für Gott, Fürst und Vaterland" "கடவுளுக்காக, இளவரசருக்காக, தந்தைநாட்டுக்காக" | |
நாட்டுப்பண்: ("இளம் ரைனுக்கு மேலே") | |
தலைநகரம் | வாதூசு |
பெரிய நகர் | இசுக்கான் |
ஆட்சி மொழி(கள்) | இடாய்ச்சு |
சமயம் | உரோமக் கத்தோலிக்கம் |
மக்கள் | லீக்கின்ஸ்டைனர் |
அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி |
• இளவரசர் | இரண்டாம் ஆன்சு-ஆடம் |
• ஆட்சியாளர் | அலோயிசு |
• பிரதமர் | ஏடிரியன் ஆசிலர் |
சட்டமன்றம் | சட்டமன்றம் |
விடுதலை | |
• பிரசுபர்கு உடன்பாடு | 12 சூலை 1806 |
• செருமனிக் கூட்டமைப்பில் இருந்து பிரிவு | 1866 |
பரப்பு | |
• மொத்தம் | 160 km2 (62 sq mi) (219வது) |
• நீர் (%) | 2.7[1] |
மக்கள் தொகை | |
• 2014 மதிப்பிடு | 37,340[2] (215வது) |
• அடர்த்தி | 227/km2 (587.9/sq mi) (57வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | $3.545 பில்லியன்[3][4] (163வது) |
• தலைவிகிதம் | $98,432[2][3][4] (2வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | $5.155 பில்லியன்[3][4] (147வது) |
• தலைவிகிதம் | $143,151[2][3][4] (2வது) |
மமேசு (2014) | 0.908[5] அதியுயர் · 13வது |
நாணயம் | சுவிசு பிராங்க் (CHF) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மஐநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +423 |
இணையக் குறி | .li |
லீக்கின்ஸ்டைன் (Liechtenstein, /ˈlɪktənstaɪn/ (ⓘ); LIK-tin-styn; இடாய்ச்சு: [ˈlɪçtn̩ʃtaɪn]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும்.[6] இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை 37,000. 11 மாநகரசபைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும்.
பொருளாதாரரீதியில், கொள்வனவு ஆற்றல் சமநிலை]யின் படி லீக்கின்ஸ்டைன் ஆள்வீத வருமான அடிப்படையில் உலகில் கத்தார் மற்றும் லக்சம்பர்க்கிற்கு அடுத்த படியாக மூன்றாவது நிலையில் உள்ளது.[7] வேலையின்மை அடிப்படையில் இது உலகின் 1.5% என்ற வீதத்தில் உலகின் மிகக்குறைந்த நிலையில் உளது.
ஆல்ப்சு காலநிலை கொண்ட லீக்கின்ஸ்டைன், குறிப்பாக மலைப்பாங்கான நாடாகும். குளிர்கால விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சிறிய பண்ணைகள் காணப்படுகின்றன. நாட்டின் பலமான நிதிச் சேவைகள் வாதூசு நகரில் அமைந்துள்ளன. லீக்கின்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய தடையற்ற வணிகக் கூட்டமைப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Raum, Umwelt und Energie பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம், Landesverwaltung Liechtenstein. Accessed on 2 October 2011.
- ↑ 2.0 2.1 2.2 [1], Amt für Statistik, Landesverwaltung Liechtenstein. Accessed on 26 May 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Key Figures for Liechtenstein பரணிடப்பட்டது 2009-09-17 at the வந்தவழி இயந்திரம், Landesverwaltung Liechtenstein. Accessed on 1 July 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 World Development Indicators, உலக வங்கி. Accessed on 1 July 2012. Note: "PPP conversion factor, GDP (LCU per international $)" and "Official exchange rate (LCU per US$, period average)" for Switzerland were used.
- ↑ "2015 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
{cite web}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "IGU regional conference on environment and quality of life in central Europe". GeoJournal 28 (4). 1992. doi:10.1007/BF00273120.
- ↑ CIA – The World Factbook – Country Comparison :: GDP – per capita (PPP) பரணிடப்பட்டது 2013-04-24 at the வந்தவழி இயந்திரம் Cia.gov. Retrieved on 2011-12-24.
வெளி இணைப்புகள்
- Official Portal of the Principality of Liechtenstein
- The Princely House of Liechtenstein
- Website of the Parliament of Liechtenstein
- Website of the Government of Liechtenstein
- Official tourism website of Liechtenstein
- Liechtenstein உலகத் தரவுநூலில் இருந்து
- Liechtenstein பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் from UCB Libraries GovPubs
- லீக்கின்ஸ்டைன் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Liechtenstein profile from the BBC News
- Wikimedia Atlas of Liechtenstein