வட ஆள்புலம்

வட ஆள்புலம்
Northern Territory
Flag of வட ஆள்புலம் Northern Territory
கொடி
அதிகாரப்பூர்வ முத்திரை வட ஆள்புலம் Northern Territory
சின்னம்
QLD
NSW
ACT
WA
NT
SA
VIC
TAS
States and territories of Australia
ஆத்திரேலியாவில் வட ஆள்புலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°S 133°E / 20°S 133°E / -20; 133
நாடுஆத்திரேலியா
நியூ சவுத் வேல்சால் நிறுவப்படல்1825
தெற்கு ஆத்திரேலியாவிற்கு மாற்றம்1863
பொதுநலவாயத்திற்கு மாற்றம்1911
பொறுப்புள்ள அரசு1 சூலை 1978
தலைநகர்டார்வின்
12°26′17″S 130°50′28″E / 12.43806°S 130.84111°E / -12.43806; 130.84111
நிருவாகம்17 உள்ளாட்சி அமைப்புகள்
பெரிய நகரம்தலைநகர்
Common languages
  • ஆங்கிலம்
  • பழங்குடி மொழிகள்
  • ஆத்திரேலியக் கிரியீல்
இடப்பெயரர்
  • டெரிட்டோரியன்
  • டாப் என்டர்[1][2]
அரசு
• மன்னர்
மூன்றாம் சார்லசு
• நிர்வாகி
ஹியூ ஹெகி
• முதலமைச்சர்
லியா பினச்சியாரோ (தாராளவாதக் கட்சி)
சட்டமன்றம்வட ஆள்புல சட்டப்பேரவை
நீதித்துறைமீஉயர் நீதிமன்றம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
2 உறுப்பினர்கள் (மொத்தம் 76)
2 இருக்கைகள் (மொத்தம் 151)
பரப்பளவு
• நிலம்
1,347,791 km2 (520,385 sq mi)
உயர் ஏற்றம்
(சீல் மலை)
1,531 m (5,023 ft)
மக்கள்தொகை
• திசம்பர் 2021 மதிப்பு
249,345[3] (8-ஆவது)
• அடர்த்தி
0.19/km2 (0.5/sq mi) (8-ஆவது)
மொத்த மாநில உற்பத்தி2020 மதிப்பு
• மொத்தம்
AU$26.153 பில்.[4] (8-ஆவது)
• தலைக்கு
AU$106,851 (2-ஆவது)
ம.மே.சு (2021)Increase 0.940[5]
very high · 6-ஆவது
நேர வலயம்UTC+09:30 (ஆ.நே.வ)
அஞ்சல் குறியீடு
NT
ISO 3166 குறியீடுAU–NT
சின்னங்கள்
பறவைஆப்பு-வால் கழுகு
(Aquila audax)
மலர்பாலைவன ரோசா
(Gossypium sturtianum)[6]
நிறம்கருப்பு, வெள்ளை, காவி[7]
இணையதளம்nt.gov.au

வட ஆள்புலம் (Northern Territory, சுருக்கமாக NT), முறையாக ஆத்திரேலியாவின் வடக்கு ஆள்புலம் [8][9] என்பது ஆத்திரேலியாவின் மத்திய, மத்திய-வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் உள்ளக ஆள்புலம் ஆகும். வட ஆள்புலத்தின் எல்லைகளாக, மேற்கே மேற்கு ஆத்திரேலியா, தெற்கே தெற்கு ஆத்திரேலியா, கிழக்கே குயின்சுலாந்து ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. வடக்கே, திமோர் கடல், அரஃபூரா கடல், கார்பெண்டாரியா வளைகுடா, மேற்கு நியூ கினி மற்றும் பல இந்தோனேசியத் தீவுகளும் அமைந்துள்ளன.

வட ஆள்புலம் 1,347,791 சதுர கிலோமீட்டர் (520,385 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது,[10] இது மூன்றாவது பெரிய ஆத்திரேலியக் கூட்டாட்சிப் பிரிவாக உள்ளது. திசம்பர் 2021 நிலவரப்படி இது 249,000 மக்கள்தொகையுடன் ஆத்திரேலியாவிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[3] டார்வின் இதன் தலைநகரும், மிகப்பெரிய மக்கள்தொகை மையமும் ஆகும், இது முழு ஆள்புலத்தின் மக்கள்தொகையில் 52.6% ஆகும். ஏறத்தாழ 25,000 மக்கள் வசிக்கும் மிகப்பெரிய உள்நாட்டு குடியேற்றம் ஆலிசு இசுபிரிங்சு ஆகும்.

வட ஆள்புலத்தின் தொல்பொருள் வரலாறு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு சாகுல் கண்டத்தின் இந்தப் பகுதியில் மனிதர்கள் முதன்முதலில் குடியேறியபோது தொடங்கியிருக்கலாம். குறைந்தது 18 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கசான் வணிகர்கள் கடல் நத்தை வர்த்தகத்தைச் சுற்றி வட ஆள்புலத்தின் பழங்குடி மக்களுடன் உறவைத் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் இந்நிலத்தின் கரையோரப் பகுதி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[11] இதன் கரையோரப் பகுதிகளில் குடியேற முயன்ற முதல் ஐரோப்பியர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர். அவர்கள் இங்கு ஒரு குடியேற்றத்தை நிறுவுவதற்கான மூன்று (1824-1828, 1838-1849, 1864-1866) தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, 1869 இல் டார்வின் துறையில் ஒரு குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் வெற்றி அடைந்தனர்.

இதன் பொருளாதாரம் பெரும்பாலும் சுரங்கத் தொழிலையும், எண்ணெய் அகழ்வையும் அடிப்படையாகக் கொண்டது, இது 2018-2019 ஆம் ஆண்டில் மொத்த மாநில உற்பத்தியில் 23% பங்களித்தது, அல்லது $5.68 பில்லியன், இது ஏற்றுமதியில் 92.4% ஆகும்.[12][13]

வட ஆள்புலத்தின் மக்கள்தொகை கடலோரப் பகுதிகளிலும் இசுட்டூவர்ட் நெடுஞ்சாலை வழியேயும் குவிந்துள்ளது. டார்வின் தலைநகரைத் தவிர, முக்கிய குடியிருப்புகள் (அளவின்படி) பால்மர்ஸ்டன், ஆலிஸ் ஸ்பிரிங்ஸ், கேத்ரின், நுலுன்புய், டெனன்ட் கிரீக் ஆகியவை ஆகும். வட ஆள்புலத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் "ஆள்புலத்தோர்" (டெரிட்டோரியர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.[14]

ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், பிரதேசங்களின் வரைபடம்

மேற்கோள்கள்

  1. J. Baker, Sidney (1945). The Australian Language. Angus & Robertson. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-908-00106-1.
  2. "Magazine". The Canberra Times (Australian Capital Territory, Australia) 65 (20,385): p. 18. 3 February 1991. http://nla.gov.au/nla.news-article129093999. 
  3. 3.0 3.1 "National, state and territory population – December 2021". Australian Bureau of Statistics. 28 June 2022. Archived from the original on 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
  4. "5220.0 – Australian National Accounts: State Accounts, 2019–20". Australian Bureau of Statistics. 20 November 2020. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.
  5. "Sub-national HDI – Area Database – Global Data Lab". hdi.globaldatalab.org. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
  6. "Floral Emblem of the Northern Territory". Anbg.gov.auhi. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2008.
  7. "Northern Territory". Parliament.curriculum.edu.au. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2013.
  8. Northern Territory Acceptance Act 1910 (Cth) s 6. "The Northern Territory is by this Act declared to be accepted by the Commonwealth as a Territory under the authority of the Commonwealth, by the name of the Northern Territory of Australia."
  9. "The Territory, Australia". Archived from the original on 25 August 2023. பார்க்கப்பட்ட நாள் 25 August 2023.
  10. "Area of Australia – States and Territories". 27 June 2014. Archived from the original on 18 January 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  11. "Did the Spanish land in Australia before James Cook? | National Library of Australia". Archived from the original on 27 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14 – via National Library of Australia.
  12. "Industries". Northern Territory Economy. Department of Treasury and Finance, Northern Territory Government. 2019. Archived from the original on 19 April 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
  13. "International trade". Northern Territory Economy. Department of Treasury and Finance, Northern Territory Government. 2019. Archived from the original on 18 April 2023. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
  14. "Definition of Territorian". www.merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-17.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வட ஆள்புலம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.