வந்தனா சவான்
வந்தனா ஏமந்து சவான் Vandana Chavan | |
---|---|
வந்தனா சவான் | |
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2012 | |
தொகுதி | மகாராட்டிரம் |
துணைத் தலைவர் மாநிலங்களவை குழு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 செப்டம்பர் 2020 | |
குடியரசுத் தலைவர் | ராம்நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோடி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூலை 1961 பூனே, மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி |
துணைவர் | ஏமந்து சவான் |
பிள்ளைகள் | திவ்யா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள். |
வாழிடம் | நகரம் - பூனே, மாநிலம் - மகாராட்டிரம், நாடு - இந்தியா |
இணையத்தளம் | Official website |
வந்தனா ஏமந்து சவான் (Vandana Hemant Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞராவார். 1961 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வந்தனா இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபை எனப்படும் மாநிலங்களவையில் மகாராட்டிர மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வந்தனா 2012 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
வந்தனா சவான் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த புனே நகரத்தில் பிறந்தார். தனது குழந்தை பருவத்தை புனேவில் இவர் கழித்தார். வந்தனாவின் தந்தை மறைந்த விசயராவ் மோகிட்டு ஒரு மூத்த வழக்கறிஞராகவும், அவரது தாயார் செயசிறீ மோகிட்டு பகுதிநேர விரிவுரையாளராகப் பணீயாற்றி ஓய்வு பெற்றார். வந்தனா சவான் முக்கிய வழக்கறிஞரான ஏமந்து சவானை மணந்தார். இவரது சகோதரி வினிதா காம்தே 26/11 அன்று நடந்த மும்பை தாக்குதலில் மறைந்த தியாகியான அசோக் காம்தே என்பவரை மணந்தார்.
அரசியல் வாழ்க்கை
மார்ச் 1997 - 1998 காலகட்டத்தில் வந்தனா புனேவின் நகரத் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் இவர் அகில இந்திய நகரத் தந்தையர் மன்றத்தின் துணைத் தலைவராகவும், மகாராட்டிர மாநில நகரத் தந்தை, தலைவர் மற்றும் குழுவினர்கள் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.[2] நகரத் தாயாக தனது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த எதிர்ப்பின் மத்தியில், விளிம்பு நிலை கிராமங்களின் வளர்ச்சித் திட்டத்தில் உயிர் பன்முகத்தன்மை பூங்கா என்ற கருத்தை இவர் இணைத்தார். ஆரம்பத்தில் அவருக்கு வழிகாட்டிய மற்றும் அரசியலில் ஒரு இடைவெளி கொடுத்த சுரேசு கல்மாடி, வந்தனா சவானை தேசியவாத காங்கிரசு கட்சிக்கு மாற்ற விரும்பினார்.
புத்தகங்கள் வெளியீடு
- கொடுமை சட்டம், தற்கொலை மற்றும் வரதட்சணை இறப்பு (இணை ஆசிரியர்), 1993.
- பசுமை இந்தியா-சுத்தமான இந்தியா, ஸ்வப்னா உதாச்சி-சுந்தர் ஜகாச்சி (காலநிலை மாற்றம் குறித்த மராத்தியில் ஒரு குறிப்பு புத்தகம்), 2011.[3]
மேற்கோள்கள்
- ↑ https://archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2210[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ https://archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2210[தொடர்பிழந்த இணைப்பு]