வலாச்சியா

வலாச்சியா வேள்பகுதி
Țara Românească
1330–1859
கொடி of வலாச்சியா
கொடி
சின்னம் of வலாச்சியா
சின்னம்
14ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் வலாச்சியா
14ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் வலாச்சியா
நிலை உதுமானியப் பேரரசுக்கு கப்பம் செலுத்தும் நாடு (1417–1859)
(உருசியப் பாதுகாப்பில் 1774–1856)
தலைநகரம்
  • கேம்புலங், கர்ட்டீ டெ ஆர்செசு (1330–1418)
  • டார்கோவிஸ்தெ (1418–1659)[1]
  • புக்கரெஸ்ட் (from 1659)
பேசப்படும் மொழிகள்உருமானியம்[2][3] (தொல் உருமானியம்), பண்டைத் திருச்சபை இசுலோவானியம் (துவக்க அலுவல் பயன்பாடு)
சமயம்
கிழக்கு மரபுவழி
அரசாங்கம்முழுமையான முடியாட்சி
இளவரசர் 
• அண். 1290 – அண். 1310
ராடு நெக்ரு (முதல்)
• 1859–62
அலெக்சாண்ரு லோன் கூசா (கடைசி)
வரலாறு 
• முதல் அலுவல்முறை தகவுரை
1330
• வழமையான நாள் விடுதலை
1290
• உதுமானிய மேலாட்சி
1417[4]
• உதுமானிய, மோல்டோவியப் போர்கள்
1593–1621
• உடன்படிக்கைகள்:
  • கூகுக் கேனார்சா
  • எதிர்னே
  • 21 சூலை [யூ.நா. 10 சூலை] 1774
  • 14 செப்டம்பர் [யூ.நா. 2 செப்டம்பர்] 1829
• பரிணாமச் சீரமைப்பு
1834–1835
• மோல்டோவாவுடன் இணைப்பு
5 பெப்ரவரி [யூ.நா. 24 சனவரி] 1859
முந்தையது
பின்னையது
அங்கேரிய இராச்சியம் (1301–1526)
ஒன்றிணைந்த வேள்பகுதிகள்

வலாச்சியா அல்லது வல்லாச்சியா ( Walachia, Wallachia ) உருமேனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் புவியியல் பகுதியுமாகும். இது கீழ் தன்யூபிற்கு வடக்கிலும் தெற்கு கார்பத்தியனுக்கு தெற்கிலும் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். வலாச்சியா வழமையாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பெரிய வலாச்சியா முந்தேனியா என்றும் சிறிய வலாச்சியா ஓல்தேனியா என்றும் அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் முழுமையான வலாச்சியாவுமே முந்தேனியா எனப்படுகின்றது.

வரலாறு

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் வலாச்சியா (பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது)

வலாச்சியா அங்கேரியின் முதலாம் சார்லசுக்கு எதிராக, முதலாம் பாசரபால் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வேள்பகுதியாக நிறுவப்பட்டது. 1246இலேயே ஓல்ட் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதி வலாச்சா என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1417இல் வலாச்சா உதுமானியப் பேரரசின் கப்பம் கட்டும் நாடானது;[4] இந்த ஏற்பாடு, இடையில் 1768 முதல் 1859 வரை சிறு இடைவெளிகளில் உருசிய ஆக்கிரமிப்பில் இருந்தபோதும், 19ஆம் நூற்றாண்டு வரை இது நீடித்தது. 1859இல் மோல்டாவியாவுடன் இணைந்து ஐக்கிய வேள்பகுதிகள் உருவானது. இந்த புதிய நாடு 1866இல் ரோமானியா என அழைக்கப்படலாயிற்று. 1881இல் அலுவல்முறையாக உருமேனியா இராச்சியமானது. பின்னர் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் கலைப்பைத் தொடர்ந்து 1918இல் மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானப்படி புகோவினா, டிரான்சில்வேனியா மற்றும் பனத், கிரிசனா,மராமுரெசின் சில பகுதிகளும் உருமேனிய இராச்சியத்திற்கு வழங்கப்பட்டன. இதுவே தற்கால உருமேனிய நாடாக உருவானது.

மேற்கோள்கள்

  1. Reid, Robert; Pettersen, Leif (11 November 2017). "Romania & Moldova". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017 – via Google Books.
  2. Ștefan Pascu, Documente străine despre români, ed. Arhivelor statului, București 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 973-95711-2-3
  3. "Tout ce pays: la Wallachie, la Moldavie et la plus part de la Transylvanie, a esté peuplé des colonies romaines du temps de Trajan l'empereur… Ceux du pays se disent vrais successeurs des Romains et nomment leur parler romanechte, c'est-à-dire romain … " în Voyage fait par moy, Pierre Lescalopier l'an 1574 de Venise a Constantinople, în: Paul Cernovodeanu, Studii și materiale de istorie medievală, IV, 1960, p. 444
  4. 4.0 4.1 Giurescu, Istoria Românilor, p.481