வெண் குறுமீன்
வெண் குறுமீன் (white dwarf) அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த விண்மீன் எச்சம் ஆகும். இதில் பெரிதும் மின்னன்-அழிநிலைப் பொருண்மம் நிரம்பியிருக்கும். இது சூரியனை நிகர்த்த பொருண்மை அடர்த்தியும் ந்ம் புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். இதன் மங்கலான பொலிவு அல்லது ஒளிர்மை தேக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் கதிர்வீச்சு உமிழ்வால் விளைவதாகும்.[1] மிக அருகே உள்ள வெண்குறலி சீரியசு B ஆகும். இது 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இது சீரியசு இரும விண்மீனின் சிறிய பகுதியாகும். இப்போது சூரியனுக்கு அருகே உள்ள விண்மீன் அமைப்புகளில் எட்டு வெண்குறளிகள் அமைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.[2] என்றி நோரிசு இரசலும் எட்வார்டு சார்லெசு பிக்கெரிங்கும் வில்லியமினா பிளெமிங்கும் 1910 இல் வெண்குறளிகளின் இயல்புக்கு மாறான மங்கலான பொலிவைக் கண்டுபிடித்தனர்;[3], p. 1 வெண்குறளி என்ற சொல் வில்லியம் உலூட்டன் அவர்களால் 1922 இல் உருவாக்கப்பட்டது.[4]
நொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே.[5], §1. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும்.[6] எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண்மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.[7] மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்[8][9] இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.
வெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும்.[1][6] (SN 1006 is thought to be a famous example.)
தோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும்.[6] என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும்.[10] எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது.[1][5] மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.
கண்டுபிடிப்பு
சிறப்பியல்புகள்
- சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் ; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.[11]
வெண் குறுமீனின் வகைகள்
கலைச்சொற்கள்
- படிமலர்ச்சி முடிவுப்புள்ளி - evolutionary endpoint;
- உமிழ்வு ஒண்முகில் - emission nebula ;
- ஈர்ப்பெதிர்-நிலை மின்னன் அழுத்தம் - degenerate-electron pressure;
- சீனிப்படிகம் - sugar cube.
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 Johnson, J. (2007). "Extreme Stars: White Dwarfs & Neutron Stars". Lecture notes, Astronomy 162. Ohio State University. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
- ↑ Henry, T. J. (1 January 2009). "The One Hundred Nearest Star Systems". Research Consortium On Nearby Stars. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010.
- ↑ Evry L. Schatzman (1958). White Dwarfs. North-Holland Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-598-58212-6.
- ↑ Holberg, J. B.(2005). "How degenerate stars came to be known as 'white dwarfs'". {booktitle}.
- ↑ 5.0 5.1 Fontaine, G.; Brassard, P.; Bergeron, P. (2001). "The Potential of White Dwarf Cosmochronology". Publications of the Astronomical Society of the Pacific 113 (782): 409. doi:10.1086/319535. Bibcode: 2001PASP..113..409F.
- ↑ 6.0 6.1 6.2 Richmond, M. "Late stages of evolution for low-mass stars". Lecture notes, Physics 230. Rochester Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 3 May 2007.
- ↑ Werner, K.; Hammer, N. J.; Nagel, T.; Rauch, T.; Dreizler, S. (2005). "On Possible Oxygen/Neon White Dwarfs: H1504+65 and the White Dwarf Donors in Ultracompact X-ray Binaries". 14th European Workshop on White Dwarfs 334: 165. Bibcode: 2005ASPC..334..165W.
- ↑ Liebert, J.; Bergeron, P.; Eisenstein, D.; Harris, H. C.; Kleinman, S. J.; Nitta, A.; Krzesinski, J. (2004). "A Helium White Dwarf of Extremely Low Mass". The Astrophysical Journal 606 (2): L147. doi:10.1086/421462. Bibcode: 2004ApJ...606L.147L.
- ↑ வார்ப்புரு:Cite press
- ↑ Spergel, D. N.; Bean, R.; Doré, O.; Nolta, M. R.; Bennett, C. L.; Dunkley, J.; Hinshaw, G.; Jarosik, N. et al. (2007). "Wilkinson Microwave Anisotropy Probe (WMAP) Three Year Results: Implications for Cosmology". The Astrophysical Journal Supplement Series 170 (2): 377. doi:10.1086/513700. Bibcode: 2007ApJS..170..377S.
- ↑ டேவிட் டார்லிங்
மேலும் காண்க
- வெண்குறளிகள் பட்டியல்
- கோளாக்க ஒண்முகில்
- PG 1159 விண்மீன்
- விண்மீன் வகைபாடு
- கருப்புக் குறுமீன்
- நொதுமி விண்மீன்
மேற்கோள்கள்
வெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்
பொது
- Kawaler, S. D. (1997). "White Dwarf Stars". In Kawaler, S. D.; Novikov, I.; Srinivasan, G. (eds.). Stellar remnants. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61520-2.
இயற்பியல்
- Black holes, white dwarfs, and neutron stars: the physics of compact objects, Stuart L. Shapiro and Saul A. Teukolsky, New York: Wiley, 1983. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-87317-9.
- Koester, D; Chanmugam, G (1990). "Physics of white dwarf stars". Reports on Progress in Physics 53 (7): 837. doi:10.1088/0034-4885/53/7/001. Bibcode: 1990RPPh...53..837K.
- White dwarf stars and the Chandrasekhar limit, Dave Gentile, Master's thesis, DePaul University, 1995.
- Estimating Stellar Parameters from Energy Equipartition, sciencebits.com. Discusses how to find mass-radius relations and mass limits for white dwarfs using simple energy arguments.
உருவாக்கம்
- White Dwarf Stars Tamil Astronomy
மாறுதிறன்
- Winget, D E (1998). "Asteroseismology of white dwarf stars". Journal of Physics: Condensed Matter 10 (49): 11247. doi:10.1088/0953-8984/10/49/014. Bibcode: 1998JPCM...1011247W.
காந்தப் புலம்
- Wickramasinghe, D. T.; Ferrario, Lilia (2000). "Magnetism in Isolated and Binary White Dwarfs". Publications of the Astronomical Society of the Pacific 112 (773): 873. doi:10.1086/316593. Bibcode: 2000PASP..112..873W.
அலைவெண்
- Gibson, B. K.; Flynn, C (2001). "White Dwarfs and Dark Matter". Science 292 (5525): 2211a. doi:10.1126/science.292.5525.2211a. பப்மெட்:11423620.
நோக்கீடுகள்
- Provencal, J. L.; Shipman, H. L.; Hog, Erik; Thejll, P. (1998). "Testing the White Dwarf Mass‐Radius Relation withHipparcos". The Astrophysical Journal 494 (2): 759. doi:10.1086/305238. Bibcode: 1998ApJ...494..759P.
- Gates, Evalyn; Gyuk, Geza; Harris, Hugh C.; Subbarao, Mark; Anderson, Scott; Kleinman, S. J.; Liebert, James; Brewington, Howard et al. (2004). "Discovery of New Ultracool White Dwarfs in the Sloan Digital Sky Survey". The Astrophysical Journal 612 (2): L129. doi:10.1086/424568. Bibcode: 2004ApJ...612L.129G.
- Villanova University White Dwarf Catalogue WD, G. P. McCook and E. M. Sion.
- Dufour, P.; Liebert, J.; Fontaine, G.; Behara, N. (2007). "White dwarf stars with carbon atmospheres". Nature 450 (7169): 522–4. doi:10.1038/nature06318. பப்மெட்:18033290. Bibcode: 2007Natur.450..522D.
படிமங்கள்
- White Dwarf Stars உருவாக்கம் Tamil Astronomy
- Astronomy Picture of the Day
- NGC 2440: Cocoon of a New White Dwarf 2010 February 21
- Dust and the Helix Nebula 2009 December 31
- The Helix Nebula from La Silla Observatory 2009 March 3
- IC 4406: A Seemingly Square Nebula 2008 July 27
- A Nearby Supernova in Spiral Galaxy M100 2006 March 7
- Astronomy Picture of the Day: White Dwarf Star Spiral 2005 June 1