ஸ்கேவா
ஸ்கேவா (கிரேக்கம்: Σκευᾶς - Skeuas) என்பவர் யூதத் தலைமைக் குருவாக இருந்தவர் என விவிலியத்தின் திருத்தூதர் பணிகள் 19:14 இல் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இப்பெயரில் எருசலேமில் யூதத் தலைமைக் குரு இருந்ததற்கு வேறு சான்றுகள் இல்லாததால், தற்கால அறிஞர் இக்கூற்றை ஏற்பதில்லை.[1] ஆயினும் செக்கோடி இனக்குழுவினர் (Zadokite clan) எவ்வகை அதிகாரமும் இல்லாமல் இத்தகைய பட்டங்களை தாமே ஏற்றுவந்ததால் இவர் அவ்வினத்தவராக இருந்திருக்கலாம்[2] விவிலியம் இவரை சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் எனக்குறிப்பிடுவது இக்கூற்றுக்கு வலுசேர்க்கின்றது.[3] இவர் தமது ஏழு மைந்தர்களோடு இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி பேயோட்ட முயன்றதாகவும் அபோது அந்த ஆவிகள் அவர்களிடம் "இயேசுவை எனக்குத் தெரியும்: பவுலையும் எனக்குத் தெரியும்: ஆனால் நீங்கள் யார்?" என்று கேட்டு அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே, அவர்கள் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடியதாகவும் விவிலியம் குறிக்கின்றது. இந்த நிகழ்வின் விளைவாய் பேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் மற்றும் மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும் மனம்மாறியதாக விவிலியம் குறிக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ Lake, Kirssop; Lake, Silva (ஏப்ரல் 1934), "The Acts of the Apostles", Journal of Biblical Literature, The Society of Biblical Literature, 53 (1): 34–45, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3259338, JSTOR 3259338
{citation}
: Check date values in:|date=
(help) - ↑ Jeremias, Joachim (1969), Jerusalem in the Time of Jesus: An Investigation Into Economic & Social Conditions During the New Testament Period, Minneapolis: Fortress Press, p. 193, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4514-1101-0, பார்க்கப்பட்ட நாள் 2013-03-01
- ↑ Arnold, Clinton (மார்ச் 2012), "Sceva, Solomon, and Shamanism: The Jewish Roots of the Problem at Colossae" (PDF), Journal of the Evangelical Theological Society, 55 (1): 7–26, பன்னாட்டுத் தர தொடர் எண் 0360-8808, பார்க்கப்பட்ட நாள் 2013-03-01
{citation}
: Check date values in:|date=
(help)