.uk
அறிமுகப்படுத்தப்பட்டது | 1985 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | நோமினெட் யூகே |
வழங்கும் நிறுவனம் | நோமினெட் யூகே |
பயன்பாட்டு நோக்கம் | ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்/அமைப்புக்கள் |
உண்மை பயன்பாடு | பிரித்தானியாவில் மிகப் பரவலானது, குறிப்பாக .co.uk உள்ஆட்களம் |
பதிவு கட்டுப்பாடுகள் | நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர் .uk கீழ் நேரடியாக ஆட்களப் பெயரைப் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. .co.uk, .me.uk, மற்றும் .org.uk இவற்றிற்கு தடை இல்லை; பிற உள்ஆட்களப் பெயர்களுக்கு பலவாறு கட்டுப்பாடுகள் உள்ளன |
கட்டமைப்பு | இரண்டாம்நிலை பொதுவான ஆட்களத்திற்கு பின்னால் மூன்றாம் நிலையிலும் .sch.ukக்கு நான்காம் நிலையிலும் பதியப்படுகிறது; இரண்டாம்நிலை பதியப்படுவதில்லை (சில பழைய பதிவுகள் ஏற்கப்பட்டன) |
ஆவணங்கள் | |
பிணக்கு கொள்கைகள் | பிணக்குத்தீர்வுக் கொள்கை |
வலைத்தளம் | nic.uk |
.uk என்பது ஐக்கிய இராச்சியத்திற்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த ஆள்களப் பெயரை ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடைய அமைப்புகளே பெற முடியும்.
2012இன் படி, இது உலகளவில் நான்காவது (.கொம், .de, .நெட் அடுத்து) மிகவும் பரவலான உயர் ஆள்களப் பெயராகும்; பத்து மில்லியன் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [2][3]
சான்றுகோள்கள்
- ↑ .uk (ஆங்கில மொழியில்)
- ↑ BBC News - Landmark 10 millionth .uk site registered with Nominet (ஆங்கில மொழியில்)
- ↑ Domain Name Wire - .Uk domain hits 10 million milestone (ஆங்கில மொழியில்)