1761
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1761 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1761 MDCCLXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1792 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2514 |
அர்மீனிய நாட்காட்டி | 1210 ԹՎ ՌՄԺ |
சீன நாட்காட்டி | 4457-4458 |
எபிரேய நாட்காட்டி | 5520-5521 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1816-1817 1683-1684 4862-4863 |
இரானிய நாட்காட்டி | 1139-1140 |
இசுலாமிய நாட்காட்டி | 1174 – 1175 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 11 (宝暦11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2011 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4094 |
1761 (MDCCLXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 14 - மராட்டியப் பேரரசுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் மூன்றாம் பானிப்பட் போர் இடம்பெற்றது.
- ஜனவரி 16 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- பெப்ரவரி 8 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- மார்ச் 8 - இரண்டாவது நிலநடுக்கம் வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிகழ்ந்தது.
- ஜூன் 6 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
- கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவனின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன.
- செஞ்சிக் கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்
- ஆகஸ்ட் 17 - வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)
இறப்புக்கள்
- ஜனவரி 10 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)