அல்கு
அல்கு கான் | |
---|---|
அரிக் போகே அல்குவைத் தோற்கடித்தல். ரசீத்தல்தீனின் சமி அல் தவரிக். படம் மிசுகின். ஆண்டு 1596. இந்நிகழ்வு மங்கோலியாவில் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், இதிலுள்ள நபர்கள் 1596ஆம் ஆண்டின் முகலாய உடைகளை அணிந்துள்ளனர். | |
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1260–1265 |
முன்னையவர் | முபாரக் ஷா (பிரதிநிதி ஒர்கானா) |
பின்னையவர் | முபாரக் ஷா |
சாகிப்-இ திவான் | மசூத் பெக் |
இறப்பு | 1265 ஒல்மலிக், உசுபெக்கிசுத்தான் |
புதைத்த இடம் | அல்மலிக் |
துணைவர் | ஒர்கானா |
தந்தை | பைதர் |
அல்கு என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவர் பைதரின் மகன் மற்றும் சகதாயி கானின் பேரன் ஆவார்.
வாழ்க்கை
1260ஆம் ஆண்டு சகதாயி கானரசின் கானாக ககான் பதவிக்கு உரிமை கோரிய அரிக் போகேயால் குழந்தை கான் முபாரக் ஷா மற்றும் அவரது தாய் ஒர்கானாவுக்கு எதிராக இவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒர்கானவைத் திருமணம் செய்து கொண்டார்.[1] 1261ஆம் ஆண்டு இவர் நடு ஆசியாவுக்கு அனுப்பப்பட்டார். சீக்கிரமே சகதாயி கானரசின் பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இது தவிர நீல நாடோடிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முன்னாள் பகுதிகளையும் இவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மேலும் இவர் சமர்கந்து மற்றும் புகாரா ஆகிய நகரங்களையும் கைப்பற்றினார். இந்நகரங்கள் முன்னர் சகதாயி கான்கள் மற்றும் குபிலாயி கானால் இணைந்து ஆட்சி செய்யப்பட்டன. டொலுய் உள்நாட்டுப் போரில் குபிலாயி கானுக்கு எதிராக அரிக் போகேயை அல்கு ஆதரித்தார். எனினும் பிறகு அவரிடமிருந்து விலகி விட்டார்.[2] 1262ஆம் ஆண்டு இவர் அரிக் போகேவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். அவருக்கு எதிராக 1,50,000 வீரர்களுக்குத் தலைமை தாங்கினார். இப்பிரச்சனையால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வன்முறை நிறைந்த தொடர்ச்சியான சண்டைகள் நடைபெற்றன.[3] துருக்கிசுதானுக்கான ககானின் ஆளுநரான மசூத் பெக்கைத் தனது உயர் அதிகாரியாக நியமித்ததன் மூலம் அவரது ஆதரவை அல்கு பெற்றார். ஒர்கானவின் ஆதரவையும் பெற்றார். இந்தக் கிளர்ச்சியானது அரிக் போகேயை மிகவும் பலவீனப்படுத்தியது. இறுதியாகக் குபிலாயி கானிடம் அரிக் போகே தோல்வி அடைந்ததற்கு இது முக்கியக் காரணமாக அமைந்தது.
1263ஆம்ஆண்டு அல்கு தனது ஆதரவை குபிலாயி கானுக்கு அளிப்பதாக அறிவித்தார். பிறகு கய்டு அரிக் போகேவுக்கு ஆதரவு அளித்ததைக் காரணமாகக் கூறி அல்கு கய்டுவைத் தாக்கினார். கய்டுவின் நிலங்கள் அல்குவின் நாட்டிற்கு அருகில் அமைந்திருந்தன.[4] கய்டு உதவிக்காகப் பெர்கேயை நாடினார். நீல நாடோடிக் கூட்டத்தின் கானகிய பெர்கே கய்டுவுக்குப் பொருளுதவி மற்றும் இராணுவ உதவியை அளித்தார். அல்குவின் பகுதிகள் படையெடுப்புக்கு உள்ளாகின. யுத்தத்தில் கய்டுவால் அல்கு தோற்கடிக்கப்பட்டார். எனினும் அல்கு பதில் தாக்குதல் நடத்தினர். ஒற்றாருக்கு அருகில் நடந்த ஒரு புதிய யுத்தத்தில் அல்கு வெற்றி பெற்றார். அல்மலிக்கில் இவர் புதைக்கப்பட்டார்.
குடும்பம்
இவர் ஒர்கானா கதுனைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்குப் பல மனைவிகள் இருந்தனர். மூன்று மகன்கள் இருந்தனர்.
- கபன்
- சுபெயி — 1304ஆம்[5] ஆண்டில் வெய்வு (威武王) மற்றும் சினிங்கின் (西宁王) இளவரசன்
- தோக்தா
- எசவுர்
- துகுலேசு
- எசில் புகா
- நோம் குலி — சினிங்கின் (西宁王) 2ஆம் இளவரசன், காரா தெல் ஆட்சியாளர்களின் முன்னோர்
- அக் புகா
- சதி
- தவுத்
- கம்போ தோர்சி
- சிகின் தெமூர்
- சிர்குதை
- மிங்தசு
- கோன்சக் தோர்சி.
- தோக் தெமூர்
- எசன் போகே
- ஒக்ருக்சி
உசாத்துணை
- ↑ Boyle, John Andrew (1971). The Successors of Genghis Khan. Columbia University Press. p. 142.
{cite book}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Grousset, René (1970). The Empire of the Steppes: A History of Central Asia (in ஆங்கிலம்). Rutgers University Press. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-1304-1.
- ↑ Buell, Paul D.; Fiaschetti, Francesca (2018-04-06). Historical Dictionary of the Mongol World Empire (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-1137-6.
- ↑ Biran, Michal (1997). Qaidu and the rise of the independent Mongol state in Central Asia. Surrey: Curzon. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-0631-3. இணையக் கணினி நூலக மைய எண் 38533490.
- ↑ Shurany, Vered (2018-02-23). "Prince Manggala – The Forgotten Prince of Anxi" (in de). Asiatische Studien - Études Asiatiques 71 (4): 1169–1188. doi:10.1515/asia-2017-0012. பன்னாட்டுத் தர தொடர் எண்:2235-5871. https://www.degruyter.com/view/journals/asia/71/4/article-p1169.xml.