இந்தோனேசிய இந்து கோயில்களின் பட்டியல்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |

இந்தோனேசிய இந்து கோயில்களின் பட்டியல் ஆங்கிலம்: List of Hindu temples in Indonesia; இந்தி: इंडोनेशिया में हिंदू मंदिरों की सूची) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திரா, ஜாவா, பாலி, கலிமந்தான் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களைக் குறிப்பிடுவதாகும். அதே வேளையில், இந்தோனேசியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்கள் பாலினிய மக்கள், ஜாவானிய் மக்கள், இந்திய இனக் குழுக்கள்; மற்றும் பல்வேறு இந்தோனேசிய இனக் குழுக்களைச் சார்ந்த பல்லினச் சமூகத்தினர் ஆவார்கள்.[1]
இந்து மதம், இந்தோனேசிய பண்பாட்டு வளர்ச்சியிலும் அதன் வரலாற்றிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. பூர்வீக ஆஸ்திரோனேசிய மூதாதையர் (Austronesian Ancestrals); மற்றும் இயற்கை வழிபாட்டைக் கடைப்பிடிக்கும் இந்தோனேசிய பூர்வீகவாசிகளையும் இந்துக்களாக வகைப்படுத்தலாம்.
பொது
தயாக்கு மக்கள் (Dayak people), பாத்தோக் காரோ மக்கள் (Batak Karo), ஜாவானிய மக்கள் (சாவகத் தொன்னெறி), மற்றும் படூய் மக்கள் (Baduy people); (Sunda Wiwitan) போன்றவர்களும் பூர்வீகவாசிகளின் வகையில் சேர்கிறார்கள். இந்து தயாக்கு மக்கள் மற்றும் ககாரிங்கான் இந்து சமயக் குழுக்கள் (Kaharingan); மத்திய கலிமந்தான் பகுதியில் மையம் கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் கிபி 130-ஆம் ஆண்டுகளில் பரவத் தொடங்கிய இந்து நாகரிகம், இந்தோனேசிய பிராந்திய அரசியலின் சமூகக் கட்டமைப்பையும்; மாநிலங்களின் பண்பாட்டுக் கூறுகளையும் மாற்றி அமைத்தது. சமசுகிருத மயமாக்கல் காலத்திலும், தென்கிழக்கு ஆசியாவில் இந்துமதம் பரவியிருந்த காலத்திலும், இந்தோனேசியாவில் இந்து சமயம் பரவத் தொடங்கியது என்றும் கூறலாம்.[2][3]
கலிமந்தான் இந்துக்கள்
2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களினபடி, இந்தோனேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.7% விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றப்பற்றுகின்றனர். 2023 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாலி மக்கள் தொகையில் 92.29% மற்றும் மத்திய கலிமந்தானின் மக்கள் தொகையில் 15.75% இந்துக்களாக உள்ளனர்.
இருப்பினும், 4-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை, இந்து மதமும் பௌத்தமும் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்பட்டன. மேலும், இயற்கை வழிபாடு; மற்றும் மூதாதையர் ஆவிகளை வணங்கிய பூர்வீக ஆன்ம வாதம்; மற்றும் பிற மத நம்பிக்கைகளும் இருந்தன.
இந்தோனேசிய தீவுகளில் இந்து மதம்
15-ஆம், 16-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் இசுலாம் பரவியதும் இந்து மதமும் பௌத்தமும் சிறுபான்மை மதங்களாக மாறின. இருப்பினும், இந்து மதத்தின் செல்வாக்கு அடையாளங்கள் பாலி, ஜாவா மற்றும் சுமாத்திரா கலாசாரங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. ஒரு காலத்தில் இந்து மதம் ஆழமாய் ஆதிக்கம் செலுத்திய பிராந்தியங்களின் கடைசி எச்சமாக, தற்போது பாலி தீவு மாறிவிட்டது.[4][5]
வரலாறு
இந்து சமயத்தின் வருகை

இந்தோனேசியாவின் இந்துநெறி என்பது, அந்த நாட்டின் தொல்குடிகளின் நீத்தார் வழிபாடு; இயற்கை மற்றும் விலங்கு வழிபாடுகள்; இந்திய மரபுகளின் கலப்பு; ஆகியவற்றின் விளைவாக வளர்ச்சி கண்டது. அதே வேளையில், இந்தோனேசிய இந்து சமயம் என்பது இந்தியாவின் சைவ நெறியை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன், தென் இந்தியாவில் இருந்து இந்து சமயம் பரவியிருக்கலாம் என்றும் அறியப்படுகின்றது.[6][7][8]
பெரும்பாலும் இந்து சமயம், முதலாம் நூற்றாண்டிலேயே தமிழக மற்றும் கலிங்க வணிகர்கள் மூலம் இந்தோனேசியாவை அடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[9][10][11][9][12]
மாதரம் இராச்சியம்
இந்தோனேசியாவில் காணப்படும் சண்டி எனப்படும் பழைமை வாய்ந்த இந்துக் கோயில்களும்; எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும்; சிவன், உமை, பிள்ளையார், திருமால் முதலியோரின் வழிபாடுகள்; போன்றவை கி.பி. 1000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே, அங்கு இநது சமயம் நிலவியதற்குச் சான்றுகளாகும்.[13] 414-இல் இலங்கையில் இருந்து சீனா திரும்பிய சீன நாட்டுப் பயணி பாகியன் என்பவர், ஜாவா தீவில் சைவத்தையும் பௌத்தத்தையும் கடைப்பிடித்த சஞ்சய வம்சாவளி; மற்றும் சைலேந்திர வம்ச அரசுகள் அங்கு ஒற்றுமையாக ஆட்சி புரிவதையும், சஞ்சய மன்னன் பெரும் செல்வவளத்துடன் திகழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.[14]
மாதரம் இராச்சியத்திற்கு முன்னும் பின்னும் இருந்த தருமநகரா இராச்சியம், கலிங்க இராச்சியம், கேடிரி அரசு, சிங்காசாரி அரசு, சிறீவிஜயம் முதலான இராச்சியங்களும்; அவற்றை அடுத்து 11-ஆம் நூற்றாண்டில் ஜாவா உருவான மயாபாகித்து பேரரசும் சைவ இராச்சியங்களாகவே இருந்துள்ளன. அத்துடன், மதச் சகிப்புத் தன்மையுடன், சைவத்துடன் பௌத்தத்தையும், ஜாவா தீவின் தொல்நெறிகளையும் கூடவே பின்பற்றி வந்திருக்கின்றன.
வகை
இந்தப் பட்டியலில் இந்தோனேசியாவின் முக்கியமான (ஒரு பகுதி) கோயில்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளன. (அனைத்துக் கோயில்களும் பின்னர் இற்றைப் படுத்தப்படும்)
சண்டி
- அசு ஆலயம்
- பாடுட் ஆலயம்
- பானோன்ஆலயம்
- பாரோங்ஆலயம்
- போஜோங்மெஞ்சே ஆலயம்
- பூமி ஆயூ ஆலயம்
- சங்குவாங் கோவில்
- செத்தோ ஆலயம்
- தியெங் ஆலயம்
- கெபாங் கோயில், யோக்யகர்த்தா
- கெடோங் சொங்கோ ஆலயம்
- குனோங் காங்சிர் ஆலயம்
- உக்கிர் கோவில்
- இச்சோ கோவில்
- ஜாகோ ஆலயம்
- ஜாவி கோயில், கிழக்கு ஜாவா
- கெடுலான் கோயில்
- கிடால் ஆலயம்
- கிம்புலான் கோயில், யோக்யகர்த்தா
- லியாங்கான் ஆலயம்
- மெராக் கோயில், மத்திய ஜாவா
- மோரோங்கான் ஆலயம்
- பாரி ஆலயம்
- பிரம்பானான் கோயில்
- பெனத்தாரான் கோவில்
- சம்பிசாரி ஆலயம்
- சிங்காசாரி கோயில், கிழக்கு ஜாவா
- சுகு கோயில்
- சுரவானா கோயில், கிழக்கு ஜாவா
- துரோவுலான் தொல்லியல் வளாகம்
- உம்பூல் கோயில், மத்திய ஜாவா
பாலி புரா ஆலயங்கள்
- புரா பெஜி சாங்சிட் ஆலயம்
- பெசாகி கோயில், பாலி
- புரா தாலெம் பாடாங் தெகாய் ஆலயம்
- புரா தலேம் சேகரா மது, வடக்கு பாலி
- புரா கெடே பெரஞ்சாக் ஆலயம்
- புரா கோவா லாவா, பாலி
- குனோங் காவி
- புரா கெகான், பாலி
- புரா லெம்புயாங் லூகூர் ஆலயம்
- புரா லூகூர் பத்துகாரு ஆலயம்
- புரா மாஸ்பகித், பாலி
- புரா மெதுவே காராங், வடக்கு பாலி
- புரா பாராயங்கான் அகோங் ஜகாட்கர்த்தா ஆலயம்
- புரா ரம்புட் சிவி ஆலயம்
- புரா தாமான் ஆயூன் ஆலயம்
- தானா லோட், பாலி
- எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி
- புரா உலுன் டானு பத்தூர் ஆலயம்
- புரா உலுன் டானு பிராத்தான் ஆலயம்
- உலுவாத்து கோவில்
கோயில்
- மாரியம்மன் கோயில், மேடான், வடக்கு சுமத்ரா
- செரி சனதான தர்ம ஆலயம்
- செரி சித்தி விநாயகர் ஆலயம்
- செரி சிவா ஆலயம்
- பழனி ஆண்டவர் ஆலயம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ McDaniel, June (2010). "Agama Hindu Dharma Indonesia as a New Religious Movement: Hinduism Recreated in the Image of Islam". Nova Religio 14 (1): 93–111. doi:10.1525/nr.2010.14.1.93. https://www.jstor.org/stable/10.1525/nr.2010.14.1.93.
- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
- ↑ Mark Juergensmeyer and Wade Clark Roof, 2012, Encyclopedia of Global Religion, Volume 1, Page 557.
- ↑ Shah, Dian A. H. (2017). Constitutions, Religion and Politics in Asia: Indonesia, Malaysia and Sri Lanka. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-18334-6. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
- ↑ Marshall, Paul (2018). "The Ambiguities of Religious Freedom in Indonesia". The Review of Faith & International Affairs 16 (1): 85–96. doi:10.1080/15570274.2018.1433588.
- ↑ Edward Quinn (2009) "Critical Companion to George Orwell: A Literary Reference to His Life and Work" P.195
- ↑ McDaniel, June (August 1, 2010). "Agama Hindu Dharma Indonesia as a New Religious Movement: Hinduism Recreated in the Image of Islam". Nova Religio 14 (1): 93–111. doi:10.1525/nr.2010.14.1.93.
- ↑ John Guy (2014), Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia, Metropolitan Museum of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300204377, pp. 130-135
- ↑ 9.0 9.1 Jan Gonda, "The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali", in Handbook of Oriental Studies. Section 3 Southeast Asia, Religions, p. 1, கூகுள் புத்தகங்களில், pp. 1-54
- ↑ Soedjatmoko (2006) "An Introduction to Indonesian Historiography" Page 309
- ↑ John Renard (1999)) "Responses to 101 Questions on Hinduism" Page 30
- ↑ [https://books.google.com/books?isbn=1136726403 Michel Picard, Rémy Madinier (2011) "The Politics of Religion in Indonesia: Syncretism, Orthodoxy, and Religious Contention in Java and Bali" P.19
- ↑ Kenneth Hall (2011), A History of Early Southeast Asia, Rowman & Littlefield, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0742567610, Chapter 4 and 5
- ↑ Kenneth Hall (2011), A History of Early Southeast Asia, Rowman & Littlefield, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0742567610, pp. 122-123