மகா சிவராத்திரி

புனே கோவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000999999999999999999999999999999999999999999999999999999999999999999999999888888888888888888888888888888888888888888888888888888888888888889899999[1]

சிவராத்திரி விரத வகைகள்

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்

இரண்டாம் யாமம்

மூன்றாம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
  • அபிஷேகம் - தேன், பாலோதகம்
  • அலங்காரம் - கிளுவை, விளா
  • அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
  • நிவேதனம் - எள்அன்னம்
  • பழம் - மாதுளம்
  • பட்டு - வெண் பட்டு
  • தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
  • மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
  • புகை - மேகம், கருங் குங்கிலியம்
  • ஒளி- ஐதுமுக தீபம்

நான்காம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
  • அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
  • அலங்காரம் - கரு நொச்சி
  • அர்ச்சனை - நந்தியாவட்டை
  • நிவேதனம் - வெண்சாதம்
  • பழம் - நானாவித பழங்கள்
  • பட்டு - நீலப் பட்டு
  • தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
  • மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
  • புகை - கர்ப்பூரம், இலவங்கம்
  • ஒளி- மூன்று முக தீபம்

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

  • திருக்கேதீச்சரப் பதிகங்கள்
  • திருவண்ணாமலைப் பதிகங்கள்

உசாத்துணைகள்

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.[2]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. Goel, Swati; Anderson, Ashton; Zia, Leila (2019). "Thanks for Stopping By: A Study of “Thanks” Usage on Wikimedia". Companion Proceedings of The 2019 World Wide Web Conference on - WWW '19 (New York, New York, USA: ACM Press): 1208–1211. doi:10.1145/3308560.3316756. http://dx.doi.org/10.1145/3308560.3316756. 
  2. https://archive.org/details/Sivaratri