உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்
இக்கட்டுரை, GSM எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
GSM (உலகளாவிய மொபைல் தகவல் தொடர்புகள் திட்டம் ஆனது: குழுச் சிறப்பு மொபைல் ) என்பதிலிருந்து உருவானது, இது உலகத்திலுள்ள அனைத்து மொபைல் தொலைபேசிகளிலும் மிகப்பிரபலமான தரத்திட்டமாக விளங்குகிறது. இதை வழங்கியவர்களான, GSM கூட்டமைப்பு, உலகின் 80% மொபைல் சந்தைகள் இந்தத் தரத்திட்டத்தைப் பயன்படுத்துவதாக கணக்கிட்டுள்ளது.[1] 212 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள, சுமார் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் GSM ஐப் பயன்படுத்துகின்றனர்.[2][3] இதன் உலகெங்கும் பரவியுள்ளத்தன்மையின் காரணமாக, மொபைல் தொலைபேசி ஆப்பரேட்டர்களிடையே சர்வதேச ரோமிங்கைச் சாதாரணமாக்கிவிட்டது, இதனால் சந்தாதாரர்கள் உலகின் பல பகுதிகளில் தொலைபேசியைப் பயன்படுத்த முடிகிறது. GSM தரத்திட்டமானது, அதற்கு முன்பு இருந்தவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது, இதில் சமிக்ஞைகளும் பேச்சுச் சேனல்களும் டிஜிட்டலில் உள்ளன, இதனால் இது இரண்டாம் தலைமுறை (2G) மொபைல் தொலைபேசி முறைமை எனக் கருதப்படுகிறது. இது, இந்த முறைமையில் தரவுத் தகவல்தொடர்பை எளிதில் கட்டமைக்க முடியும் என்பதையும் குறிக்கும்.
GSM தரத்திட்டத்தின் எங்கும் பரவியுள்ளத்தன்மை, (எங்கும் ரோமிங் செய்ய முடிவதாலும் தொலைபேசியை மாற்றாமல், கேரியரை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியைப் பெறுவதாலும்) வாடிக்கையாளர்களுக்கும் (GSM தரத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல்வேறு விற்பனையாளர்களின் எந்த உபகரணத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியைப் பெறுவதால்[4]) நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுக்கும் என இரு சாராருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் GSM தரத்திட்டம், குரல் அழைப்பிற்கு மாற்றான (நெட்வொர்க் கேரியருக்கு) குறைந்த கட்டணத்திலான குருஞ்செய்திச் சேவையிலும் ("உரைச் செய்தி" என்றும் அழைக்கப்படுகின்ற SMS) முன்னோடியாகத் திகழ்ந்தது, இப்போது இது மற்ற மொபைல் தரத்திட்டத்திலும் ஆதரிக்கப்படுகிறது. இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், இத்தரத்திட்டமானது உலகளாவிய ஒரு அவசர தொலைபேசி எண் 112 ஐ வழங்குகிறது.[5] இது சர்வதேசப் பயணிகளுக்கு, உள்ளூர் அவசர எண் தெரியாதபட்சத்தில், அவசர சேவையை எளிதில் தொடர்புகொள்ள உதவுகிறது.
இத்தரத்திட்டத்தின் புதிய வெளியீடுகள், முந்தைய GSM தொலைபேசிகளோடும் இணக்கமுள்ளவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, இத்தரத்திட்டத்தின் வெளியீடு '97 இல், பொதுத் தொகுப்பு ரேடியோ சேவை (GPRS) என்னும் சேவையின் மூலம் தொகுப்புத் தரவு வசதியையும் கொண்டிருந்தது. வெளியீடு '99 தரத்திட்டம், GSM பரிணாமத்திற்கான மேம்படுத்தப்பட்ட தரவு வீதத்தைப் (EDGE) பயன்படுத்தி, மிக வேகமான தரவு பரப்புதலை அறிமுகப்படுத்தியது.
வரலாறு
1982 ஆம் ஆண்டில், அஞ்சல் மற்றும் தொலைதொடர்புகள் நிர்வாகங்களுக்கான ஐரோப்பிய மாநாடு (CEPT), ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயன்படுத்தக்கூடிய வகையிலான மொபைல் தொலைபேசி முறைமைக்கான ஒரு தரத்திட்டத்தை உருவாக்க ஒரு கூட்டுச் சிறப்பு மொபைல்(GSM) என்பதை உருவாக்கியது.[11] 1987 ஆம் ஆண்டில், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பொதுவான செல்லுலார் தொலைபேசி முறைமையை உருவாக்குவதற்காக, 13 நாடுகளால் ஒரு புரிந்துகொள்ளுதலின் குறிப்பாணை கையெழுத்திடப்பட்டது.[13][15] இறுதியாக, டோர்லீவ் மாசங் தலைமையிலான SINTEF உருவாக்கிய முறைமை இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[17]
1989 ஆம் ஆண்டில், GSM இன் மொத்தப் பொறுப்பும் ஐரோப்பியத் தொலைத்தொடர்பு தரத்திட்ட நிறுவனத்திற்கு (ETSI) மாற்றப்பட்டது மற்றும் GSM இன் முதல் கட்ட விவரக்குறிப்புகள் 1990 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. முதல் GSM நெட்வொர்க்கானது, 1991 ஆம் ஆண்டில், பின்லாந்தில், ரேடியோலிஞ்ஜாவால், எரிக்சனின் இணைத் தொழில்நுட்ப அகக்கட்டமைப்புப் பராமரிப்பின் உதவியுடன் தொடங்கப்பட்டது.[6] 1993 ஆம் ஆண்டின் இறுதிக்குள், 48 நாடுகளில் 70 கேரியர்களால் இயக்கப்பட்ட GSM தொலைபேசி நெட்வொர்க்குகள் ஒரு மில்லியன் சந்தாதாரர்களால் பயன்படுத்தப்பட்டது.[7]
தொழில்நுட்ப விவரங்கள்
செல்லுலார் ரேடியோ நெட்வொர்க்
GSM என்பது ஒரு செல்லுலார் நெட்வொர்க் ஆகும், அதாவது மொபைல் தொலைபேசிகள் மிக அருகிலுள்ள செல்களைத் தேடுவதன் மூலம் இணைகின்றன எனப் பொருள். GSM நெட்வொர்க்கில் ஐந்து வெவ்வேறு அளவிலான செல்கள் உள்ளன, அதாவது மேக்ரோ, மைக்ரோ, பைக்கோ, பெம்டோ மற்றும் அம்ப்ரல்லா செல்கள் ஆகியவை ஆகும். ஒவ்வொரு செல்லின் பரவல் எல்லையானது அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறுபடுகிறது. சராசரி கூரை உயரத்தை விட அதிகமான உயரமுள்ள கோபுரத்திலோ அல்லது கட்டடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும் பேஸ் ஸ்டேசன் ஆன்டென்னாவின் அருகில் இருக்கும் செல்களை மேக்ரோ செல்கள் எனக் கருதலாம். சராசரி கூரை மேற்பரப்பின் உயரத்தைவிடக் குறைவான உயரத்தில் உள்ள ஆன்டென்னாவின் செல்களை மைக்ரோ செல்கள் எனலாம்; குறிப்பாக இவை நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பைக்கோ செல்கள் என்பவை மிகச்சிறிய செல்கள், இவற்றின் பரவல் எல்லையானது ஒரு சில டசன் மீட்டருக்குள் இருப்பதால்; இவை மிகக்குறைந்த தொலைவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. பெம்டோ செல்கள், வீட்டிலோ அல்லது சிறிய வணிகச் சூழல்களிலோ பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் அகன்ற வரிசை இணைய இணைப்பின் மூலம் சேவை வழங்குநரின் நெட்வொர்க்குடன் தொடர்புகொள்கின்றன. அம்ப்ரல்லா செல்களானது, சிறிய செல்களின் ஐயப்பாடுள்ள சேவை பகுதிகளில் பரவல் எல்லையை வழங்கவும் அவ்விரண்டு செல்களின் பரவல் எல்லைக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்பவும் பயன்படுகின்றன. செல்லின் கிடைமட்ட ஆரமானது, ஆன்டென்னாவின் உயரம், ஆண்டென்னாவின் ஆதாயம் மற்றும் சில நூறு மீட்டர்களிலிருந்து பல கிலோமீட்டர்கள் வரையிலான பரவல் நிலைகள் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடுகின்றது. GSM குறிப்பீட்டால் ஆதரிக்கப்படும் அதிகபட்ச நீண்ட தொலைவு 35 கிலோமீட்டர்கள் (22 mi) ஆகும். மேலும் நீட்டிக்கப்பட்ட செல் கருத்தியலின் பல செயல்படுத்தல்களும் உள்ளன[8], இதில் ஆன்டென்னா அமைப்பு, தள வகை மற்றும் அதன் நேர முன்னேற்றத்தைப் பொறுத்து, செல் ஆரமானது இரண்டு மடங்கோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்க முடியும். மிகக்குறைந்த தொலைவுகளுக்கான பரவல் எல்லையையும் GSM ஆதரிக்கிறது, இது இண்டோர் பைக்கோ செல் பேஸ் ஸ்டேசன் அல்லது அவுட்டோர் ஆண்டென்னாவிலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட இண்டோர் ஆண்டென்னா அமைப்புகளுக்கு ரேடியோ சமிக்ஞைகளை அனுப்புவதற்காக, ஆற்றல் பிரிப்பான்கள் வழியாக ஊட்டமளிக்கப்படும் பகிர்ந்தளிக்கப்பட்ட இண்டோர் ஆண்டென்னாக்களுடனான இண்டோர் ரிப்பீட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. மிக அதிக அளவு அழைப்புத்திறன் தேவைப்படும் ஷாப்பிங் செண்டர்கள் அல்லது விமான நிலையங்கள் போன்ற மிகக்குறைந்த தொலைவுள்ள இடங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இருப்பினும், மிகக்குறைந்த தொலைவுகளுக்கான பரவல் எல்லையும் அருகிலுள்ள ஏதேனும் ஒரு அருகாமைச் செல்லிலிருந்து நடைபெறும் ரேடியோ சமிக்ஞைகளின் ஊடுருவலால் வழங்கப்படுவதால் இது முன்னரே அமைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. GSM இல் பயன்படுத்தப்படும் பண்பேற்றமானது காஸியனின் குறைந்தபட்ச-மாற்ற பண்பேற்றம் (GMSK) ஆகும், இது ஒரு வகை தொடர்நிலை அதிர்வெண் மாற்றப் பண்பேற்றமாகும். GMSK இல், கேரியரின் மீது பண்பேற்றப்பட வேண்டிய சமிக்ஞையானது, அதிர்வெண் பண்பேற்றிக்குள் செலுத்தப்படும் முன்பு, காஸியனின் குறைந்தபட்ச-மாற்ற பண்பேற்றம் வடிப்பின் மூலம் மென்மையாக்கப்படுகிறது, இது அருகிலுள்ள பாதைகளில் குறுக்கீட்டை (அடுத்தடுத்துள்ள பாதைகளின் குறுக்கீடு) பெருமளவில் குறைக்கின்றது.
ஆடியோ சாதனங்களுடன் குறுக்கீடு
சில ஆடியோ சாதனங்கள் ரேடியோ அதிர்வெண் குறுக்கீட்டினால் (RFI) பாதிக்கப்படுபவை, கூடுதல் பாதுகாப்பு மற்றும்/அல்லது புறவழி மின்தேக்கிகளை அவ்வகைச் சாதனங்களில் பயன்படுத்தி இது போன்ற பாதிப்பை வலுவிழக்கச் செய்யலாம் அல்லது நீக்கலாம். இருப்பினும், இந்தப் பாதிப்பைத் தடுக்கத் தேவையான இந்தக் கூடுதல் அமைப்பைச் செய்வதற்கான செலவு அதிகமாவதால், உருவாக்குபவர்களால் அதைச் சமாளிப்பது கடினம்.[9] PAகள், கம்பியிலா மைக்ரோபோன்கள், ஹோம் ஸ்டீரியோ சிஸ்டம்கள், தொலைக்காட்சிகள், கணினிகள், கார்ட்லெஸ் தொலைபேசிகள் மற்றும் தனிப்பட்ட இசைச் சாதனங்கள் ஆகியவற்றின் அருகில் ஒரு GSM கைபேசி இருக்கும்போது, ஒரு "டிட், டிட் டி-டிட், டிட் டி-டிட், டிட் டி-டிட்" ஒலி ஒன்று உருவாவது வழக்கமான ஒரு நிகழ்வாகும். இந்த ஆடியோ சாதனங்கள் GSM கைபேசிகளின் அருகாமைப் புலத்தில் இருக்கும்போது, அதன் ரேடியோ சைகையானது ஆடியோ சுற்றில் உள்ள திட நிலை ஒலிப்பெருக்கியை ஒரு உணர்கருவியாக்கும் அளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. இந்த டிட் டிட் இரைச்சலே TDMA சமிக்ஞையைத் தாங்கிவரும் மின்னாற்றல் துடிப்பை உணர்த்துகிறது. இந்த சைகைகள் கார் ஸ்டீரியோக்கள் மற்றும் கொண்டு செல்லத்தக்க ஆடியோ பிளேயர்கள் போன்ற பிற மின்னணு சாதனங்களுடனும் குறுக்கிடுவது நாமறிந்ததே. இது கைபேசியின் வடிவமைப்பையும் சார்ந்தது, அதாவது FCC எனும் அமெரிக்க ஒன்றிய ஆணையத்தின் கண்டிப்பான விதிகள் மற்றும் ஒழுக்க முறைகளின் பிரிவு 15 இல் உள்ள விதிகளின் படி, அவை மின்னணு சாதனங்களுடன் குறுக்கிடுபவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
GSM அதிர்வெண்கள்
GSM நெட்வொர்க்குகள் பல்வேறு அதிர்வெண் வரம்புகளில் இயங்குகின்றன (2G க்கான GSM அதிர்வெண் வரம்புகள் மற்றும் 3G க்கான UMTS அதிர்வெண் பட்டைகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன). பெரும்பாலான 2G GSM நெட்வொர்க்குகள் 900 MHz அல்லது 1800 MHz பட்டைகளில் இயங்குகின்றன. 900 மற்றும் 1800 MHz அதிர்வெண் பட்டைகள் முன்பே ஒதுக்கப்பட்டிருந்ததால், (கனடா மற்றும் அமெரிக்க ஒன்றியம் உட்பட) அமெரிக்காவின் சில நாடுகள் 850 MHz மற்றும் 1900 MHz பட்டைகளையே பயன்படுத்துகின்றன. ஐரோப்பாவின் பெரும்பாலான 3G GSM நெட்வொர்க்குகள் 2100 MHz அதிர்வெண் பட்டையில் இயங்குகின்றன. அரிதான 400 மற்றும் 450 MHz அதிர்வெண் பட்டைகள் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன, காரணம் அங்கு முதல் தலைமுறை அமைப்புகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதே ஆகும். GSM-900, மொபைல் ஸ்டேசனில் இருந்து பேஸ் ஸ்டேசனுக்கு (ஏற்றுதல்) தகவலை அனுப்ப 890–915 MHz அதிர்வெண் பட்டையையும் எதிர்த் திசையில் தகவலை அனுப்ப (இறக்குதல்) 935–960 MHz அதிர்வெண் பட்டையையும் பயன்படுத்துகிறது, இது 125 RF சேனல்களை வழங்குகிறது (சேனல் எண்கள் 0 முதல் 124), இவை 200 kHz இடைவெளியில் உள்ளன. 45 MHz இன் ட்யூப்ளெக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் GSM-900 பட்டையானது பெரிய அதிர்வெண் வரம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 'நீட்டிக்கப்பட்ட GSM', அதாவது E-GSM, 880–915 MHz (ஏற்றுதல்) மற்றும் 925–960 MHz (இறக்குதல்) என்ற அதிர்வெண் பட்டைகளைப் பயன்படுத்துகிறது, இதில் வழக்கமான GSM-900 பட்டையின் சேனல்களுடன் கூடுதலாக 50 சேனல்களும் (சேனல் எண்கள் 975 முதல் 1023 வரை மற்றும் 0). நேரப்பிரிவு மல்டிபிளக்ஸிங் ஒவ்வொரு ரேடியோ அதிர்வெண் சேனலுக்கும் எட்டு முழு வீத அல்லது பதினாறு அரை வீத சேனல்களை அனுமதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. (எட்டு துடிப்பு இடைவெளியைக் கொடுக்கும்) எட்டு ரேடியோ நேரத் தொகுப்புகளை ஒன்றாகக் குறிப்பிடும் போது அது ஒரு TDMA சட்டகம் எனப்படுகிறது. அரை வீத சேனல்கள் ஒரே நேரத் தொகுப்பில் மாற்று சட்டகங்களைப் பயன்படுத்துகின்றன. அனைத்து 8 சேனல்களுக்குமான சேனல் தரவு வீதம் 270.833 கிலோபிட்/வினாடி ஆகும், மேலும் சட்டகக் கால அளவு 4.615 மில்லி செகண்ட் ஆகும். கைபேசியிலுள்ள பரவல் திறன் GSM850/900 இல் அதிகபட்சம் 2 வாட் எனவும் GSM1800/1900 இல் 1 வாட் எனவும் வரம்புக்குட்படுத்தப்பட்டுள்ளது.
குரல் கோடெக்குகள்
3.1 kHz ஆடியோவை 5.6 மற்றும் 13 கிலோபிட்/வினாடி அளவில் சுருக்க GSM பல வகையான குரல் கோடெக்குகளைப் பயன்படுத்துகிறது. உண்மையில், அரை வீத (5.6 கிலோபிட்/வினாடி) மற்றும் முழு வீத (13 கிலோபிட்/வினாடி) எனப்படும் இரண்டு கோடெக்குகள் பயன்படுத்தப்பட்டன, அவை வழங்கும் தரவு சேனலின் வகையின் அடிப்படையில் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன. இவை லீனியர் ப்ரிடிக்டிவ் கோடிங் (LPC) அடிப்படையிலான ஓர் அமைப்பைப் பயன்படுத்தின. இந்தக் கோடெக்குகள் பிட்வீத அடிப்படையில் செயல்திறமிக்கவையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆடியோவின் மிக முக்கியக் கூறுகளை அடையாளம் காண்பதை எளிதாக்கியது, மேலும் முன்னுரிமை வழங்குவதற்குப் பயன்படும் காற்று இடைமுக அடுக்கையும் வழங்கி சைகையின் இந்தக் கூறுகளைப் பாதுகாக்கவும் உதவியது. மேம்படுத்தப்பட்ட முழு வீத (EFR) கோடெக்கின் மூலம், 1997 ஆம் ஆண்டில் GSM மேலும் மேம்படுத்தப்பட்டது, அது முழு வீத சேனலைப் பயன்படுத்தும் ஒரு 12.2 கிலோபிட்/வினாடி கோடெக்காகும்.[10] இறுதியாக UMTS உருவாக்கியதன் மூலம் EFR ஐ AMR-நேரோபேண்ட் எனப்படும் ஒரு மாறுபடும் வீத கோடெக்காக மறு உருவாக்கம் செய்தனர், அது உயர் தரமுள்ளது மற்றும் முழு வீத சேனல்களுடன் பயன்படுத்தும்போது இடைமுகத்தில் மிக வலிமையுடையது, ஆனால் முழு வீத சேனல்களுடன் ஒப்பிடுகையில் அரை வீத சேனல்களில் சிறந்த ரேடியோ நிலைகளில் பயன்படுத்தும்போது குறைந்த வலுவுள்ளதாகவே உள்ளது.
நெட்வொர்க் கட்டமைப்பு
வாடிக்கையாளர் காணும் GSM இன் பின்புலத்திலுள்ள நெட்வொர்க் மிகப் பெரியதும் சிக்கலானதுமாகும், அவ்வாறு இருப்பதாலேயே தேவையான அனைத்துச் சேவைகளையும் அதனால் வழங்க முடிகிறது. அது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் தனித்தனிக் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
- பேஸ் ஸ்டேசன் துணையமைப்பு (பேஸ் ஸ்டேசன்களும் அவற்றின் கட்டுப்பாடுகளும்).
- நெட்வொர்க் மற்றும் மாற்றத் துணையமைப்பு (பெரும்பாலும் நிலையான நெட்வொர்க்கைப் போலவே இருக்கும் நெட்வொர்க்கின் ஒரு பகுதி). இதைச் சில நேரங்களில் பிரதான நெட்வொர்க் எனவும் அழைப்பர்.
- GPRS பிரதான நெட்வொர்க் (தொகுப்பு அடிப்படையிலான இணைய இணைப்புகளை வழங்கும் பகுதி, இது சில நேரம் இல்லாமலும் இருக்கலாம்).
- இந்த அமைப்பிலுள்ள அனைத்துக் கூறுகளும் ஒன்றிணைந்து குரல் அழைப்பு மற்றும் SMS போன்ற பல GSM சேவைகளை வழங்குகின்றன.
சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு (SIM)
GSM இன் முக்கிய அம்சங்களில் ஒன்று சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு, ஆகும் பொதுவாக SIM கார்டு என அழைக்கப்படுகிறது. SIM என்பது அகற்ற-பொருத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் கார்டு ஆகும், இதில் பயனரின் சந்தாத் தகவலும் தொலைபேசிப் புத்தகமும் இருக்கும். பயனர் தனது கைபேசியை மாற்றினாலும் தமது தகவல்களை இழக்காமல் வைத்திருக்க இது உதவுகிறது. மாற்றாக, SIM ஐ மாற்றுவதன் மூலம் பயனர்கள் ஆப்பரேட்டர்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். சில ஆப்பரேட்டர்கள் ஒரே SIM ஐ அல்லது தமது நிறுவனம் வழங்கும் SIM ஐ மட்டுமே பொருத்தக்கூடிய விதத்தில் தொலபேசியை உருவாக்கி இந்த வசதியைத் தடுத்துவிடுகின்றனர்; இதை SIM பூட்டுதல் என அழைக்கின்றனர், இது சில நாடுகளில் சட்ட விரோதமான செயலாகும். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல ஆப்பரேட்டர்கள் தாம் விற்கும் மொபைல்களைப் பூட்டியே விற்கின்றனர். மொபைல் தொலைபேசிகளின் விலையில் பொதுவாக சந்தாக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதனால் ஆப்பரேட்டர்கள் போட்டியாளர்களின் மொபைல்களின் தள்ளுபடியைத் தடுக்க முயற்சிக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாகும். ஒரு சந்தாதாரர் விரும்பினால், வழங்குநரைத் தொடர்புகொண்டு கட்டணம் செலுத்தி, பூட்டைத் திறக்குமாறு கேட்கலாம், பூட்டைத் திறக்க தனியார் சேவைகளைப் பயன்படுத்தலாம் அல்லது கைபேசிகளின் பூட்டைத் திறக்க வலையில் உள்ள ஏராளமான மென்பொருள் மற்றும் வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலான வலைத்தளங்கள் பூட்டைத் திறக்க கட்டணம் வசூலிக்கின்றன, ஆனால் சில இலவசமாகவும் செய்கின்றன. பூட்டுதல் என்பது சர்வதேச மொபைல் உபகரண அடையாள (IMEI) எண்ணின் மூலம் அறியப்படும் கைபேசியைப் பாதிக்குமே தவிர (SIM கார்டால் அறியப்படும்) கணக்கைப் பாதிக்காது. பங்களாதேஷ், பெல்ஜியம், கோஸ்டா ரிக்கா, இந்தோனேசியா, மலேசியா, ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில், எல்லாத் தொலைபேசிகளுமே பூட்டப்படாமலேயே விற்கப்படுகின்றன. இருப்பினும், பெல்ஜியத்தில் தொலைபேசியின் விலையில் ஆப்பரேட்டர்களின் தள்ளுபடி வழங்குவதென்பது சட்ட விரோதமாகும். கைபேசிளையும் கணக்குகளையும் ஒன்றாகத் தள்ளுபடி விலையில் விற்பது சட்டப்பூர்வமானபோது, பின்லாந்திலும், 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 வரை இவ்வாறே இருந்தது, இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் (அதிகபட்சம் 24 மாதங்களில்) ஆப்பரேட்டர்கள் இலவசமாக தொலைபேசியின் பூட்டைத் திறந்து விட வேண்டும்.
GSM பாதுகாப்பு
GSM மிதமான அளவு பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது. அந்த முறைமையானது சந்தாதாரரை முன்பகிரப்பட்ட கீ மற்றும் கேள்வி-பதில் ஆகியவற்றைப் பயன்படுத்தி அங்கீகரிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. சந்தாதாரருக்கும் பேஸ் ஸ்டேசனுக்குமான தகவல் தொடர்புகளானது குறியீடாக்கப்பட்டு இருக்கலாம். UMTS இன் மேம்பாடானது ஒரு USIM விருப்பத்தேர்வை அறிமுகப்படுத்தியது, அது சிறந்த பாதுகாப்பு வழங்க நீண்ட அங்கீகரிப்பு கீயைப் பயன்படுத்துகிறது, அதே போல் வாடிக்கையாளரும் நெட்வொர்க்கும் ஒருவரையொருவர் அங்கீகரித்தனர் - GSM இல் நெட்வொர்க்கால் பயனர் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறார் (ஒருவரையொருவர் அங்கீகரிக்க முடியாது). எனவே இந்தப் பாதுகாப்பு முறையானது ரகசியத்தன்மையையும் அங்கீகரிப்பையும் வழங்குகிறது, ஆனால் அங்கீகரிப்பு திறன்கள் வரம்புக்கு உட்படுத்தப்பட்டது, மேலும் மறுதலிப்பற்ற நிலை இல்லை. GSM, பாதுகாப்புக்காக பல கிரிப்டோகிராபிக் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. காற்றின் வழியே குரல் பரப்புவதன் தனியுரிமையை உறுதிப்படுத்த A5/1 மற்றும் A5/2 ஸ்ட்ரீம் சைபர்கள் பயன்படுத்தப்படுகின்றன. A5/1 முதலில் உருவாக்கப்பட்டது, அது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வலிமையான வழிமுறையாகும்; A5/2 என்பது மற்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வலிமையற்ற வழிமுறையாகும். இரண்டு வழிமுறைகளிலும், முக்கிய குறைபாடுகள் கண்டறிப்பட்டன: சைபர் உரையை மட்டுமே தாக்குதல் கொண்டு நிகழ்நேரத்தில் A5/2 ஐ தகர்க்க முடியும், மேலும் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பைகோ கம்ப்யூட்டிங் இங்க் நிறுவனம், வானவில் அட்டவணை தாக்குதலைக் கொண்டு A5/1 ஐ தகர்க்க உதவும் FPGAகளை வணிகப்படுத்தும் திறனையும் திட்டங்களையும் வெளியிட்டது.[11] இந்த அமைப்பானது பல்வேறுபட்ட வழிமுறைகளை ஆதரிப்பதால், ஆப்பரேட்டர்கள் சைபருக்குப் பதிலாக வேறு வலிமையான ஒன்றைப் பயன்படுத்தலாம்.
தரநிலைகள் தகவல்
GSM முறைமைகள் மற்றும் சேவைகள் ETSI ஆல் நிர்வகிக்கப்படும் தரநிலைகள் தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளன, அங்கு முழுப் பட்டியலும் பராமரிக்கப்படுகின்றது.[12]
எடுத்துக்காட்டு விவரக்குறிப்புகள்
- GSM 07.07 "GSM மொபைல் உபகரணத்திற்கான AT கட்டளைத் தொகுப்பு (ME)" என்பது தொலைபேசியின் GSM துணையமைப்புடன் தொடர் இடைமுகம் வழியாக தொடர்புகொள்ளத் தேவைப்படும் முதன்மை AT கட்டளைகளை விவரிக்கிறது.[13] மேலும் காண்க, ஹேயஸ் கட்டளைத் தொகுப்பு.
- 3GPP TS 27.007 - பயனர் உபகரணத்திற்கான AT கட்டளைத் தொகுப்பு (UE).[14]
- GSM 07.05, SMS மற்றும் CBS ஆகியவற்றுக்கான கூடுதல் AT கட்டளைகளைக் கொண்டுள்ளது.[15][16]
'
மேலும் காண்க
- OpenBTS
- கம்பியிலா மின்னணு சாதனங்கள் மற்றும் உடல்நலம்
- மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்
- சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் (IMSI)
- மொபைல் சந்தாதாரர் ISDN எண் (MSISDN)
- ஒப்படைப்பு
- பார்வையாளர்கள் இருப்பிடப் பதிவேடு (VLR)
- Um இடைமுகம்
- GSM அதிர்வெண் வரம்புகள்
- GSM-R (GSM-ரயில்வே)
- GSM சேவைகள்
- GSM உள்ளூர்மயமாக்கல்
- மல்டிமீடியா செய்திச் சேவை (MMS)
- கம்பியிலாப் பயன்பாட்டு நெறிமுறை (WAP)
- செல் ஒலிபரப்பு
- நெட்வொர்க் அடையாளம் மற்றும் நேர மண்டலம் (NITZ)
- தரநிலைகள்
- மொபைல் தொலைபேசி தரநிலைகள் ஒப்பீடு
- GEO-மொபைல் ரேடியோ இடைமுகம்
- புத்திசாலி நெட்வொர்க்
- பார்லே
- RTP ஆடியோ வீடியோ சுயவிவரம்
குறிப்புகள்
- ↑ "GSM World statistics". GSM Association. 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-01-10.
- ↑ "About GSM Association". GSM Association. பார்க்கப்பட்ட நாள் 2007-01-08.
- ↑ "Two Billion GSM Customers Worldwide". 3G Americas. June 13, 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-01-08.
{cite web}
: Check date values in:|date=
(help) - ↑ "Texas Instruments Executive Meets with India Government Official to outline Benefits of Open Standards to drive mobile phone penetration". Texas Instruments. July 12, 2006. Archived from the original on 2006-10-21. பார்க்கப்பட்ட நாள் 2007-01-08.
{cite web}
: Check date values in:|date=
(help) - ↑ "ஆஸ்திரேலிய தகவல் தொடர்புகள் மற்றும் மீடியா ஆணையம் (ACMA)". Archived from the original on 2010-01-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
- ↑ "Nokia delivers first phase GPRS core network solution to Radiolinja, Finland". Nokia. January 24, 2000. Archived from the original on 2006-03-21. பார்க்கப்பட்ட நாள் 2006-01-08.
{cite web}
: Check date values in:|date=
(help) - ↑ "History and Timeline of GSM". Emory University. பார்க்கப்பட்ட நாள் 2006-01-09.
- ↑ "புதிய நீட்டிக்கப்பட்ட செல்லுடன் 300% அதிக பரவல் எல்லை கொண்டிருப்பதாக - நீண்ட எல்லை GSM கொள்ளளவு பற்றி Motorola செயல் முறை விளக்கம் அளிக்கிறது". Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
- ↑ "Managing Noise in Cell-Phone Handsets". Maxim Integrated Products. 2001-01-24. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22.
- ↑ "GSM 06.51 version 4.0.1" (ZIP). ETSI. December 1997. பார்க்கப்பட்ட நாள் 2007-09-05.
- ↑ http://blog.washingtonpost.com/securityfix/2008/02/research_may_spell_end_of_mobi.html
- ↑ இது ETSI தளம்
- ↑ TS 100 916 - V07.04.00 - டிஜிட்டல் செல்லுலார் தொலைதொடர்புகள் அமைப்பு (கட்டம் 2+); GSM மொபைல் உபகரணத்திற்கான AT கட்டளைத் தொகுப்பு (ME) (GSM 07.07 பதிப்பு 7.4.0 வெளியீடு 1998)
- ↑ 3GPP விவரக்குறிப்பு: 27.007
- ↑ GTS 07.05 - பதிப்பு 5.5.0 - டிஜிட்டல் செல்லுலார் தொலைதொடர்புகள் அமைப்பு (கட்டம் 2+); தரவு முனை உபகரணத்தின் பயன்பாடு - குருஞ்செய்தி சேவைக்கான தரவுச் சுற்று முடித்தல்; உபகரண (DTE - DCE) இடைமுகம் ...
- ↑ குருஞ்செய்திச் சேவை / SMS பயிற்சி
- சையேக்முந்த் எம். ரெட்ல், மத்தியாஸ் கே. வெபெர், மால்கம் டபள்யூ. ஓலிபன்ட் (மார்ச் 1995): "ஏன் இண்ட்ரடக்ஷன் டூ GSM", ஆர்டெக் ஹவுஸ், ISBN 978-0-89006-785-7
- சையேக்முந்த் எம். ரெட்ல், மத்தியாஸ் கே. வெபெர், மால்கம் டபள்யூ. ஓலிபன்ட் (மே 1998): "GSM அண்ட் பெர்சனல் கம்யூனிகேஷன்ஸ் ஹேண்ட்புக்", ஆர்டெக் ஹவுஸ், ISBN 978-0-89006-957-8
- ஃப்ரைடுஹெல்ம் ஹில்லேபிராண்டு, பதி. (2002): "GSM அண்ட் UMTS, தி கிரியேஷன் ஆஃப் குளோபல் மொபைல் கம்யூனிகேஷன்ஸ்", ஜான் விலே & சன்ஸ், ISBN 0470 84322 5
- மிச்சல் மௌலி, மேரி-பெர்னார்டெட்டே பௌடெட் (ஜூன் 1992): "தி GSM சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்ஸ்", ISBN 0-945592-15-9.
புற இணைப்புகள்
- GSM கூட்டமைப்பு – இந்தக் குழு GSM ஆப்பரேட்டர்களைக் குறிக்கின்றது (அதிகாரப்பூர்வத் தளம்) – இது அனைத்து உறுப்பினர்களுக்கான பரவல் எல்லை வரைபடங்களைக் கொண்டுள்ளது
- 3GPP - GSM க்கான தற்போதைய தர நிர்ணய அமைப்பு இலவச தரநிலைகளுடன் கிடைக்கிறது.
- கற்றை அதிர்வெண் அட்டவணை பரணிடப்பட்டது 2009-03-27 at the வந்தவழி இயந்திரம்
- GSM வழங்குநர் பட்டியல் பரணிடப்பட்டது 2008-09-22 at the வந்தவழி இயந்திரம்
- ஹாக்கர்ஸின் சாய்ஸ் GSM சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட் பரணிடப்பட்டது 2009-08-05 at the வந்தவழி இயந்திரம்
- GSM கட்டமைப்பு & செயல்பாடு பரணிடப்பட்டது 2009-08-13 at the வந்தவழி இயந்திரம்
- GSM பயிற்சிகள் பரணிடப்பட்டது 2016-04-30 at the வந்தவழி இயந்திரம்
வார்ப்புரு:Mobile telecommunications standards வார்ப்புரு:Wireless systems