கன்னட எழுத்துமுறை
கன்னட எழுத்துமுறை | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | தற்காலம் |
திசை | Left-to-right |
மொழிகள் | கன்னடம், கொங்கணி, துளு, கொடகு |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | பழைய கன்னடம்
|
நெருக்கமான முறைகள் | தெலுங்கு எழுத்துமுறை |
பிராமி |
---|
பிராமி எழுத்துமுறையும் அதன் வழித்தோன்றல்களும் |
கன்னட எழுத்துக்கள் என்பது கன்னட எழுத்துக்களை எழுத பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். கன்னட.எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. கன்னட எழுத்துக்களை கொங்கணி மொழியையும் துளு, கொடகு போன்ற திராவிட மொழிகளையும் எழுத பயன்படுத்துவர். கன்னட எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களிடம் இருந்து உதித்த பல்லவ கதம்ப எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும்.
தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும்.
உயிர் எழுத்துக்கள்
உயிர் எழுத்து | உயிரெழுத்து குறி | 'ப'கர உயிர்மெய் | ஒத்த தமிழ் எழுத்து | IPA | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
ಅ | ಪ | (pa) | அ | a | short 'a' | |
ಆ | ಾ | ಪಾ | (pā) | ஆ | aː | long 'a' |
ಇ | ಿ | ಪಿ | (pi) | இ | i | short 'i' |
ಈ | ೀ | ಪೀ | (pī) | ஈ | iː | long 'i' |
ಉ | ು | ಪು | (pu) | உ | u | short 'u' |
ಊ | ೂ | ಪೂ | (pu) | ஊ | uː | long 'u' |
ಋ | ೃ | ಪೃ | (pr) | 'ரு' | r< | தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல. |
ೠ | ೄ | ಪೄ | (pr) | 'ரு'வின் நெடில் | பொதுவழக்கில் இல்லை | |
ಌ | 'ரு'வின் லகர இணை | பொதுவழக்கில் இல்லை | ||||
ೡ | 'லு'வின் நெடில் | பொதுவழக்கில் இல்லை | ||||
ಎ | ೆ | ಪೆ | (pe) | எ | e | |
ಏ | ೇ | ಪೇ | (pē) | ஏ | eː | |
ಐ | ೈ | ಪೈ | (pai) | ஐ | ai | |
ಒ | ೊ | ಪೊ | (po) | ஒ | o | short 'o' |
ಓ | ೋ | ಪೋ | (pō) | ஓ | oː | long 'o' |
ಔ | ೌ | ಪೌ | (pau) | ஔ | au | |
ಅಂ | ಂ | ಪಂ | (pau) | அம் | aṃ | அனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு |
ಅಃ | ಃ | ಪಃ | (pau) | அஹ | aḥ | விஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது |
மெய்யெழுத்துக்கள்
கன்னடம் | யூனிகோட் பெயர் | ஒத்த தமிழ் எழுத்து | IPA |
---|---|---|---|
ಕ | KA | க | k |
ಖ | KHA | க்+ஹ | kh |
ಗ | GA | க - ம'க'ன் | g |
ಘ | GHA | 'க்' + ஹ | gɦ |
ಙ | NGA | ங | ŋ |
ಚ | CHA | ச | tʃ |
ಛ | CHHA | ச்+ஹ | tʃh |
ಜ | JA | ஜ | dʒ |
ಝ | JHA | ஜ்+ஹ | dʒɦ |
ಞ | NJA | ஞ | ɲ |
ಟ | TTA | ட | ʈ |
ಠ | TTHA | ட்+ஹ | ʈh |
ಡ | DDA | ட - ம'ட'ம் | ɖ |
ಢ | DDHA | 'ட்'+ஹ | ɖɦ |
ಣ | NNA | ண | ɳ |
ತ | THA | த | t |
ಥ | THHA | த்+ஹ | th |
ದ | DA | த - ம'த'ம் | d |
கன்னடம் | யூனிகோட் பெயர் | ஒத்த தமிழ் எழுத்து | IPA |
---|---|---|---|
ಧ | DHA | 'த்'+ஹ | dh |
ನ | NA | ந | n |
ಪ | PA | ப | p |
ಫ | PHA | ப்+ஹ | ph |
ಬ | BA | ப- க'ப'ம் | b |
ಭ | BHA | 'ப்'+ஹ | bɦ |
ಮ | MA | ம | m |
ಯ | YA | ய | j |
ರ | RA | ர | ɾ |
ಲ | LA | ல | l |
ವ | VA | வ | ʋ |
ಶ | SHA | ஸ மற்றும் ஷவிற்கு இடையில் உச்சரிக்க வேண்டும் | ɕ |
ಷ | SSA | ஷ | ʃ |
ಸ | SA | ஸ | s |
ಹ | HA | ஹ | ɦ |
ಳ | LLA | ள | ɭ |
ಱ | RRA | ற (தற்கால பயன்பாட்டில் இல்லை) | r |
ೞ | FA* | ழ (தற்கால பயன்பாட்டில் இல்லை) | r |
பிற குறியீடுகள்
குறியீடு | பெயர் | Function |
---|---|---|
್ | விராமம் | தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது |
ಂ | அனுஸ்வரம் | மூக்கொலிக்கு |
ಃ | விசார்க்கம் | எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்க்கும். |
எண்கள்
கன்னட எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன.
தெலுங்கு | இந்தோ-அரேபியம் |
---|---|
೦ | 0 |
೧ | 1 |
೨ | 2 |
೩ | 3 |
೪ | 4 |
೫ | 5 |
೬ | 6 |
೭ | 7 |
೮ | 8 |
೯ | 9 |
பயன்படுத்தும் விதம்
வழக்கொழிந்த எழுத்துக்கள்
கன்னடத்தில் ಱ(ற)வும் ೞ(ழ)வும் பழங்கன்னடத்தில் (ஹலே கன்னடா) இருந்த எழுத்துக்கள். இவ்வொலிகள் தற்கால கன்னடத்தில் (ஹொச கன்னடா) இருந்து மறைந்ததால் இவ்வெழுத்துக்கள் தற்காலத்தில் வழக்கிழந்தன. தெலுங்கு மொழியில் மட்டும் ఱ (ற) இப்பொழுதும் கூட வழக்கில் இருக்கிறது.
இதே போல் இறுதியில் 'ந'கர ஒற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வந்த சிறப்பெழுத்து (தெலுங்கில் இது 'ந'கர பொல்லு என அழைக்கப்படுகிறது) தற்கால வழக்கில் இருந்து மறைந்து விட்டது. இருப்பினும் இந்த சிறப்பெழுத்து 1980 வரை தட்சிண கன்னட மாவாட்டத்தில் வழக்கில் இருந்ததாக அறியப்படுகிறது
ஒத்து எழுத்து
கன்னடத்தில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது.
- ಸುಸ್ವಾಗತ(susvAgata - நல்வரவு) - இதில் ಸ(ஸ)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து(ಸ್ವಾ) எழுத்தாகும். இதை 'வ' ஒத்து என அழைப்பர். 'வ' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயன்படுகிறது.
- ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர் எழுத்தை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.
- ಸುಸ್ವಾಗತ(susvAgata) என்பதில் 'வ'கரத்து 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'வ' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான ಸ(ஸ) பெற்று ಸ್ವಾ(ஸ்வா) என ஆகிறது.
பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்:
- ರಾಸ್ತಾ (ராஸ்தா) - ಸ(ஸ)வுக்கு கீழே இருப்பது ತ(த)வின் ஒத்து(ಸ್ತಾ)
- ತತ್ನ (ratna - ரத்தினம்) - ತ(த)வுக்கு அடுத்து இருப்பது ನ(ந)வின் ஒத்து(ತ್ನ)
- ಅಮ್ಮ(ammA - அம்மா) - ಮ(ம)வுக்கு அடுத்து இருப்பது ಮ(ம)வின் ஒத்து(ಮ್ಮ)
- ವ್ಯಾಕರಣ (vyAkaraNa - இலக்கணம்) - ವ(வ)வுக்கு அடுத்து இருப்பது ಯ(ய)வின் ஒத்து(ವ್ಯಾ)
- ಸ್ಪಷ್ಟ (SpaShTa - தெளிவு) - ಸ(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ಪ(ப)வின் ஒத்து(ಸ್ಪ)
- ಗ್ಲಾಸ್ (glAs) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ಗ್ಲಾ)
- ಗ್ರಾಮ (grAma - கிராமம்) - ಗ(ga)வுக்கு கீழே இருப்பது ರ(ர)வின் ஒத்து(ಗ್ರಾ).
- ಕ್ಷ - க்ஷ
மற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம்
- ದುಡ್ಡು (duDDu), ಶಬ್ದ(shabda) என்பதில் ಡ,ದ ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ಡ್ಡು,ಬ್ದ)
அனுஸ்வர பயன்பாடு
அனுஸ்வரம் என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது. மெய் ஒலி கொண்டது.
- ಪ,ಫ,ಬ,ಭ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்'
- ಕ,ಖ,ಗ,ಘ - க வரிசையின் முன் 'ங்' ஒலி
- ಚ,ಛ,ಜ,ಝ - ச வரிசையின் முன் ஞ் ஒலி
- ತ,ಥ,ದ,ಧ - த வரிசையின் முன் 'ந்' ஒலி
- ಟ,ಠ,ಡ,ಢ - ட வரிசையின் முன் 'ண்' ஒலி
- சொல் இறுதியில் 'ம்' ஒலி
யூனிகோடில் கன்னடம்
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | A | B | C | D | E | F | |
U+0C8x | ಀ | ಁ | ಂ | ಃ | ಄ | ಅ | ಆ | ಇ | ಈ | ಉ | ಊ | ಋ | ಌ | | ಎ | ಏ |
U+0C9x | ಐ | | ಒ | ಓ | ಔ | ಕ | ಖ | ಗ | ಘ | ಙ | ಚ | ಛ | ಜ | ಝ | ಞ | ಟ |
U+0CAx | ಠ | ಡ | ಢ | ಣ | ತ | ಥ | ದ | ಧ | ನ | | ಪ | ಫ | ಬ | ಭ | ಮ | ಯ |
U+0CBx | ರ | ಱ | ಲ | ಳ | | ವ | ಶ | ಷ | ಸ | ಹ | | | ಼ | ಽ | ಾ | ಿ |
U+0CCx | ೀ | ು | ೂ | ೃ | ೄ | | ೆ | ೇ | ೈ | | ೊ | ೋ | ೌ | ್ | | |
U+0CDx | | | | | | ೕ | ೖ | | | | | | | ೝ | ೞ | |
U+0CEx | ೠ | ೡ | ೢ | ೣ | | | ೦ | ೧ | ೨ | ೩ | ೪ | ೫ | ೬ | ೭ | ೮ | ೯ |
U+0CFx | | ೱ | ೲ | ೳ | | | | | | | | | | | | |