கன்னியாதானம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
கன்னியாதானம் (Kanyadana) (சமக்கிருதம்: कन्यादान) என்பது இந்து சமய திருமணச் சடங்குகளில் ஒன்றாகும்.[1] இது மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் வலக்கையை மணமகனின் வலதுக்கையின் மேல் வைத்து, அவ்வேளையில் ஓதப்படும் மந்திரங்கள், அக்கினி சாட்சியாக, அவளை தானமாக மணமகனிடம் ஒப்படைப்பதாகும்...இதன்படி அந்தப்பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின்னர் ஒரு மகளுக்காக தான் ஆற்றவேண்டிய ஒரு சில கடமைகளைத் தவிர,அவள் மேலுள்ள உரிமைகளை மனமகளின் தந்தை இழக்கிறார்... அந்தப்பெண்ணிற்கு செய்யவேண்டிய பொறுப்புகள், கடமைகள் மற்றும் உரிமை முதலியன அவள் தந்தையிடமிருந்து அந்தப்பெண்ணின் கணவனான மணமகனுக்கு மாறுகிறது...இந்துச்சமயத்தில் திருமணத்தை மணப்பெண் தரப்பிலிருந்து கன்னிகாதானம்/கன்னியாதானம் என்றும், மணமகன் தரப்பிலிருந்து பாணிகிரகணம் என்றே குறிப்பிடுவர்.
தென்னிந்தியாவில் கன்னியாதானம் சடங்கு குறித்தான செய்திகள், விஜயநகரப் பேரரசின் 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[2]
சொற்பிறப்பியல்
கன்யாதானம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு கன்யா (கன்னி) மற்றும் தானம் (கொடுத்தல்) என்பதாகும்.இது ஒரு தந்தை தனது மகளை மணமகனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் பாரம்பரியத்தைக் குறிக்கிறது. ஒரு குடும்பத்தில் இருந்து மற்றொரு குடும்பத்திற்கு பொறுப்பு மற்றும் கவனிப்பு மாற்றப்படுவதை அடையாளப்படுத்துகிறது.[3]
கன்யாதானப் பாடல்கள்
திருமணத்தின் ஒரு பகுதியாக கன்யாதானம் செய்யப்படும் சமூகங்களில், கன்யாதானச் சடங்கு பல்வேறு கன்யாதான பாடல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பாடல்களில் பெற்றோர்கள் தங்கள் மகளை இழந்து புலம்புவதை உள்ளடக்கியிருக்கலாம். மற்ற பாடல்கள் மாப்பிள்ளையை மையமாக வைத்து, எடுத்துக்காட்டாக, காவியமான இராமாயணம் "ஆதர்ச மணமகன்" கடவுளான இராமர் உடன் ஒப்பிடப்படும் . முக்கியமாக, கன்யாதானம் சடங்கு மணமகளுக்கு நெற்றித் திலகம் இடும் சடங்கிற்கு முன்பே நிகழ்கிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ Enslin, Elizabeth. "Imagined Sisters: The Ambiguities of Women’s Poetics and Collective Actions". Selves in Time and Place: Identities, Experience, and History in Nepal. Ed. Debra Skinner, Alfred Pach III, and Dorothy Holland. Lanham; Boulder; New York; Oxford: Rowman & Littlefield Publishers, Inc., 1998 (269-299).
- ↑ Mahalingam, T.V (1940). Administration and Social Life under Vijayanagar. University of Madras. pp. 255-256.
- ↑ Hunt, Stephen (2017-05-15). (in ஆங்கிலம்). Routledge. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-90476-6 https://books.google.com/books?id=oFsPEAAAQBAJ&pg=PA213.
{cite book}
: Missing or empty|title=
(help); Unknown parameter|தலைப்பு=
ignored (help) - ↑ Henry, Edward O. "Folk Song Genres and Their Melodies in India: Music Use and Genre Process". Asian Music (Spring-Summer 2000). JSTOR. 20 February 2008.
மேலும் படிக்க
- Gutschow, Niels; Michaels, Axel; Bau, Christian (2008). The Girl's Hindu Marriage to the Bel Fruit: Ihi and The Girl's Buddhist Marriage to the Bel Fruit: Ihi in Growing up - Hindu and Buddhist Initiation Ritual among Newar Children in Bhaktapur, Nepal. Otto Harrassowitz Verlag, Germany. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-447-05752-1. pp. 93–173.