ஜாதகர்மா

ஜாதகர்மா (Jatakarma (சமசுகிருதம்:जातकर्मसंस्कारः), பிறப்பு முதல் இறப்பு வரை இந்து சமயத்தினர் செய்ய 16 சடங்குளில் ஒன்றாகும். இது நான்காவது சடங்காகும். குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்மா சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை, தாயிடமிருந்து வெட்டும் போது இது சடங்கு செய்யப்படுகிறது.[1]இந்த சடங்கின் போது, குழந்தையின் உடல், மன மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக ஆசீர்வதிக்க வேண்டி பாலில் குளிப்பாட்டப்படுகிறது. நெய் மற்றும் தேன் அல்லது சர்க்கரை கலந்த 6 துளி நீர் குழந்தையின் வாயில் ஊற்றப்படும். பிறகு குழந்தைக்கு தாய் பாலூட்டுவார். குழந்தையின் நாக்கில் தங்கக் குச்சியால் ஓம் என எழுதப்படுகிறது. பின் குழந்தைக்கான ஜாதகம் புரோகிதரால் எழுதப்படுகிறது.

குழந்தை பிறந்த 11வது அல்லது 16வது நாளில் மகப்பேறு தீட்டு கழிக்கவும், குழந்தைக்கு பெயர் சூட்டவும், புரோகிதரால் வேத மந்திரங்களுடன் சிறிய அளவில் யாகம் வளர்க்கப்படுகிறது. நெல்லில் குழந்தைக்கான பெயர் எழுதப்படுகிறது. இதனை நாமகரணம் என்பர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்