கலக எதிர்ப்பு மற்றும் வன போர்ப் பயிற்சிப் பள்ளி

பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி Counter-Insurgency and Jungle Warfare School
குறிக்கோளுரைகொரில்லாக்களுடன் கொரில்லாப் போன்று சண்டையிடுக
Fight the guerrilla like a guerrilla
வகைஇந்திய இராணுவ அகாதமிகள்
உருவாக்கம்1967[1]
அமைவிடம், ,

பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி (Counter-Insurgency and Jungle Warfare School (CIJWS), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கோலாசிப் மாவட்டத்தின் வடக்கில் அசாம் மாநில எல்லையை ஒட்டி, வைரேங்டே நகரத்தில் உள்ளது. இப்போர் பயிற்சிப் பள்ளி 1970-இல் நிறுவப்பட்டது. இந்திய இராணுவத்தின் தரைப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் முறைகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் சிறப்பு கொரில்லாப் போர் முறைகளை இந்தப் பள்ளி கற்றுத் தருகிறது.[2]

வரலாறு

இப்பள்ளியானது முதன்முதலில் மேகாலயா மாநிலத்தின் மைங்க்கரே நகரத்தில் 1967-இல் துவக்கப்பட்டது. 1 மே 1970 அன்று இப்பள்ளியானது மிசோரம் மாநிலத்தின் வடக்கில் உள்ள வைரேங்டே நகரத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Counter Insurgency and Jungle Warfare School". Indian Army. பார்க்கப்பட்ட நாள் 2011-11-16.
  2. "India takes the fight to guerrillas". Asia Times Online. 2004-11-20 இம் மூலத்தில் இருந்து 2016-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161021194816/http://www.atimes.com/atimes/South_Asia/FK20Df02.html. பார்த்த நாள்: 2011-11-16. 

வெளி இணைப்புகள்