காபுல் ஆறு

காபுல் ஆறு
ஆப்கானித்தானின் காபுலுக்கு கிழக்கே பாயும் காபுல் ஆற்றின் வெள்ளப்பெருக்கின் புகைப்படம்
காபுல் ஆறு is located in ஆப்கானித்தான்
காபுல் ஆறு
Mouth of the Kabul River in Pakistan
அமைவு
நாடுகள்ஆப்கானித்தான், பாக்கித்தான்
நகரங்கள்காபுல், சுரோபி, ஜலாலாபாத் (ஆப்கானித்தான்);
பெசாவர், சார்சாதா, சவ்சேரா ,கைபர் பக்துன்வா (பாக்கித்தான்)
சிறப்புக்கூறுகள்
மூலம்இந்து குஃசு மலைத்தொடர்கள்
 ⁃ அமைவுவர்தகு மாகாணம், ஆப்கானித்தான்
 ⁃ ஆள்கூறுகள்34°21′25″N 68°50′21″E / 34.357°N 68.8392°E / 34.357; 68.8392
 ⁃ ஏற்றம்2,400 m (7,900 அடி)
முகத்துவாரம்சிந்து ஆறு
 ⁃ அமைவு
அட்டோக், பஞ்சாப், பாக்கித்தான்
 ⁃ ஆள்கூறுகள்
33°55′0″N 72°13′56″E / 33.91667°N 72.23222°E / 33.91667; 72.23222
நீளம்700 km (430 mi)
வடிநில அளவு70,500 km2 (27,200 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுபன்சிர் ஆறு, அலிங்கர் ஆறு, குனார் ஆறு, சுவாத் ஆறு
 ⁃ வலதுலோகர் ஆறு, சுர்காப் ஆறு, பாரா ஆறு

காபுல் ஆறு ( Kabul River ) என்பது ஆப்கானித்தானின் வர்தகு மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்து குஃசு மலைகளின் சங்கலாக் மலைத்தொடரில் உருவாகி 700-கிலோமீட்டர் (430 மைல்) பாயும் ஆறாகும். இது எல்மாந்து ஆற்றின் நீர்ப்பிடிப்பில் இருந்து உனாய் கணவாய் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. காபூல் ஆறு பாக்கித்தானின் அட்டோக் அருகே சிந்து ஆற்றில் கலக்கிறது. இது கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் முக்கிய நதியாகும்.

நதியோட்டம்

700 கிலோமீட்டர் நீளம் கொண்ட காபுல் ஆறு, ஆப்கானித்தானின் காபுல் மற்றும் ஜலாலாபாத் நகரங்கள் வழியாக செல்கிறது. பாக்கித்தானில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் பாய்வதற்கு முன், தோர்காமில் உள்ள துராந்து எல்லைக்கோட்டிற்கு வடக்கே 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் கிழக்கு மாகாணங்களான நங்கர்கார், குனார், லாத்மான், லோகர், காபூல், கபிசா, பர்வான், பன்சிர் போன்ற பகுதிகளில் ஒரு பெரிய வடிகாலை அமைக்கிறது.[1] கைபர் பக்துன்க்வாவில், இந்த ஆறு பெசாவர், சார்சாதா மற்றும் நவ்சேரா நகரங்கள் வழியாக செல்கிறது. அதன் மேல் பகுதியில் இது சர்சாஷ்மா என்று அழைக்கப்படுகிறது. காபுல் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளான லோகர், பஞ்ச்சிர், அலிங்கர், சுர்காப், குனார், பாரா மற்றும் சுவாத் போன்றவை இதன் முக்கிய துணை ஆறுகள் ஆகும். [2]

இரண்டாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் போது (1879-1880) காபுல் ஆற்றில் கட்டப்பட்ட ஐந்து பாலங்களில் ஒன்று.

ஆதாரங்கள்

வருடத்தின் பெரும்பாலான காலத்தில் ஆற்றில் நீர் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்து குஷ் மலைத்தொடரில் பனி உருகுவதால் கோடையில் வெள்ளம் பெருகும். பாக்கித்தானின் சித்ராலில் உள்ள புருகில் பள்ளத்தாக்கில் உள்ள சியாந்தர் பனிப்பாறையிலிருந்து வெளியேறி, தெற்கே ஆப்கானித்தானில், மஸ்துஜ் ஆறாகத் தொடங்கும் குனார் நதி இதன் மிகப்பெரிய துணை நதியாகும். குனார் ஜலாலாபாத் அருகே காபுலில் சந்திக்கிறது. குனார், காபுலை விட அதிக தண்ணீரை சுமந்து சென்றாலும், இந்த ஆறு இந்த சங்கமத்திற்குப் பிறகு காபுல் ஆறாகத் தொடர்கிறது.

அணைகள்

காபுல் ஆறு 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல அணைகளால் தடுக்கப்பட்டது. ஆப்கானித்தானின் காபுல் மற்றும் நங்கர்கார் மாகாணங்களில் மூன்று அணைகள் அமைந்துள்ளன. இதில் சுரோபி அணை, ஜெர்மனியின் உதவியுடன் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காபூலுக்கு நீர்மின் ஆதாரமாகும். நக்லு அணை, தருந்தா அணை 1960களில் சோவியத் விஞ்ஞானிகளால் கட்டப்பட்டது. வார்சாக் அணை தோராயமாக பெசாவர் நகரின் வடமேற்கே சுமார் 20 கிமீ கி.மீ. [1] தொலைவிலுள்ள பெசாவர் பள்ளத்தாக்கில் உள்ளது,

வரலாறு

அலெக்சாண்டரின் ஆசியப் பயணம்

அர்ரியன் என்பவரால் இயற்றப்பட்ட அலெக்சாந்தரின் போர் பற்றிய நூலில், காபுல் ஆறு (இலத்தீனில் கோபென் ) பற்றி குறிப்பிடப்படுகிறது. [3] [4] [5] [6]

நவீன யுகம்

1990-களிலிருந்து, ஆறு கோடையில் கணிசமான வறட்சியை சந்தித்தது. [1] ஏறக்குறைய மார்ச் 2019 இல், மக்ரோயான் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பத்தாயிரம் கேலன்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஒவ்வொரு மாதமும் காபுல் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. [7]

சொற்பிறப்பியல்

சமசுகிருதத்திலும் அவெஸ்தானிலும்

ஆற்றின் பண்டைய பெயரான குபா என்ற சொல் சமசுகிருத மற்றும் அவெஸ்தான் வார்த்தையாகும். இந்த வார்த்தை பின்னர் காபுல் என மாறியது.

அல்-பிருனி

அல்-பிருனி இதை "கோர்வாண்ட் ஆறு" என்றும் அழைத்தார்.

காபுல் ஆறு பின்னர் அதன் பெயரை இப்பகுதிக்கும் காபுலின் குடியேற்றத்திற்கும் வழங்கியது. [8]

புகைப்படங்கள்

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 Wilde, A (April 19, 2012). "Kabul River".
  2. "One Land, Two Rules (9): Delivering public services in insurgency-affected Jalrez district of Wardak province". Afghan Analysts Network. 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  3. Arrian, John Rooke; Arrian (1813). "A brief account of all the authors who have touched upon the history of Alexander". Arrian's History of the expedition of Alexander the Great: and conquest of Persia (2nd ed.). J. Davis.
  4. Cawthorne (2004). Alexander the Great. Haus Publishing.
  5. Heckel. The wars of Alexander the Great, 336-323 B.C. Taylor & Francis.
  6. Arrian (2005). Alexander the Great: selections from Arrian, Diodorus, Plutarch, and Quintus Curtius. Hackett Publishing.
  7. Lawrence, J.P. (September 12, 2020). "Sewage from US Embassy, NATO headquarters dumped into Kabul River due to aging infrastructure". https://www.stripes.com/news/sewage-from-us-embassy-nato-headquarters-dumped-into-kabul-river-due-to-aging-infrastructure-1.644860. 
  8. . 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
காபுல் ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


33°55′0″N 72°13′56″E / 33.91667°N 72.23222°E / 33.91667; 72.23222