சாகர்மாதா தேசியப் பூங்கா

சாகர்மாதா தேசியப் பூங்கா
சாகர்மாதா தேசியப் பூங்கா
Map showing the location of சாகர்மாதா தேசியப் பூங்கா
Map showing the location of சாகர்மாதா தேசியப் பூங்கா
அமைவிடம்நேபாளம்
ஆள்கூறுகள்27°56′N 86°44′E / 27.933°N 86.733°E / 27.933; 86.733
பரப்பளவு1148 சதுர கிலோ மீட்டர்
நிறுவப்பட்டதுசூலை 19, 1976
வகைஇயற்கை
வரன்முறைvii
தெரியப்பட்டது1979 (உலக பாரம்பரியக் குழுவின் 3வது அமர்வு)
உசாவு எண்120
State Party நேபாளம்
Regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
தேசியப் பூங்காவின் நுழைவிட கிராமம்

சாகர்மாதா தேசியப் பூங்கா (Sagarmāthā National Park) (sagaramāthā rāṣṭriya nikuñja), நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டிலிருந்து கிழக்கே இமயமலையின் எவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில் அமைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சாகர்மாதா தேசியப் பூங்கா உலகின் முக்கிய பறவைகளின் சரணாலயங்களின் ஒன்றாக உள்ளது.[1] நேபாளத்தின் சொலு கூம்பு மாவட்டத்தில் அமைந்துள்ள[2] இப்பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 7000 மீட்டர் உயரத்தில், 124,400 ஹெக்டேர் நிலப் பரப்பு கொண்டது.[3] யுனேஸ்கோவால் இயற்கையாக அமைந்த உலகப் பாரம்பரியக்களமாக ஏற்றுக் கொண்டுள்ளது.[4] சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு சான்போசி எனும் பெயருடைய சிறு விமான நிலையம் உள்ளது. பூங்காவின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் நடைமுறைப்படுத்த நேபாள இராணுவத்தின் ஒரு படைப் பிரிவு இப்பூங்காப் பகுதியில் உள்ளது.

அமைவிடம்

நேபாள நாட்டின் கூம்பு மாவட்டத்தில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்காவின் வடக்குப் பகுதி, சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியுடன், பன்னாட்டு எல்லையாக கொண்டுள்ளது. தெற்கில் தூத் கோசி ஆறும், கிழக்கில் மாகலு பாருன் தேசியப் பூங்காவும் எல்லைகளாக அமைந்துள்ளது.[5]

பெயர்க் காரணம்

சாகர்மாதா என்ற நேபாள மொழியின் சொல்லின், சாகர் என்பதற்கு வானம் என்றும், மாதா என்பதற்கு தலை என்று பொருள்படும். சாகர்மாதா என்பதற்கு வானத்தின் தலை என்று நேபாள மொழியில் பொருள் படுத்தப்படுகிறது.[6] மேலும் நேபாள மொழியில் எவரஸ்டு மலையை சாகர்மாதா என்றே அழைக்கின்றனர்.

பூங்கா நிர்வாகம்

நேபாள அரசின் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறையின் கீழ், தொழில்முறை ஊழியர்கள் ஒரு குழு ஒன்று சாகர்மாதா தேசியப் பூங்கா நிர்வகிக்கப்படுகிறது.

அமைவிடம்

நேபாளத்தின் கூம்பு மாவட்டத்தில், இமயலையின் எவரஸ்டு சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்காவின் வடக்குப் பகுதி, சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியுடன், பன்னாட்டு எல்லையாக கொண்டுள்ளது. தெற்கில் தூத் கோசி ஆறும், கிழக்கில் மாகலு பாருன் தேசியப் பூங்காவும் எல்லைகளாக அமைந்துள்ளது.[5]

போக்குவரத்து

காட்மாண்டு நகரத்திலிருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்காவை அடைய சாலை வழியாக பேருந்தில் 135 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். காத்மாண்டிலிருந்து இப்பூங்காவை அடைய அடிக்கடி சிறு விமான சேவைகள் உண்டு.

நிலப்பரப்பு

ஆறுகளும், உயர்ந்த கொடிமுடிகளும், இத்தேசிய பூங்கா உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பூங்காவின் மேற்புறம் தூத் கோசி ஆறும், கோக்யா ஏரிகளும் கொண்டுள்ளது. பூங்காவின் மொத்தப் பரப்பில் 69% விழுக்காடு வறண்ட நிலப்பரப்பும், 28% புல்வெளிகளும், 3% காடுகளும் கொண்டுள்ளது.

தாவரங்கள்

இத்தேசிய பூங்காவின் கீழ்புறத்தின் காட்டுப் பகுதியில் பூர்ச்ச மரங்கள், (பிரம்பு), உதிரா ஊசியிலைக் கொண்ட புதர்ச்செடி வகைகள், தேவதாரு மரங்கள், மூங்கில் செடிகள், ஊசி இலை மரங்கள், பசுமை மாறச் செடியினங்களும் வளர்கிறது. தேசியப் பூங்காவின் மேற்புறத்தில் மூலிகைச் செடிகள் வளர்கிறது.

வன விலங்கினங்கள்

சாகர்மாதா தேசியப் பூங்காவில் உள்ள 118 வகையான பறவைகளில், நேபாள நாட்டின் தேசிய பறவையான இமயமலை மோனல்கள் மற்றும் காட்டுக் கோழிகள், அல்பைன் காக்கைகள், செம்மூக்கு காக்கைகள், இமயமலை கருப்புக் கரடிகள், பனிச் சிறுத்தைகள், லங்கூர் குரங்குகள், மான்கள், சிவப்பு பாண்டா கரடிகள், கீரிகள் காணப்படுகிறது.

வானிலை

இமயமலையின் எவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில், உயரமான மலைப் பகுதியில் அமைந்த சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் ஆக்சிசனும், கடுங்குளிரும் காணப்படுகிறது. எனவே இங்குள்ள விலங்குகள் அடர்ந்த முடிகளும், குறைந்த அளவு ஆக்சிசனை சுவாசித்து உயிர் வாழும் தகுதியும் கொண்டுள்ளது.

சாகர்மாதா மேலாண்மைத் திட்டம்

இத்தேசியப் பூங்காவின் சுற்றுச் சூழலை பாதுகாக்க உள்ளூர் தலைவர்கள், கிராமப் பெரியவர்கள், லாமாக்கள் ஒத்துழப்புடன் பூங்காவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் (ICDP) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை திட்டம் அடிப்படையில் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு பூங்கா வருவாயிலிருந்து 50% வழங்கி வருகிறது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இங்குள்ள சான்போசி விமான நிலைய விரிவாக்கம், கடை வீதிகள், பொழுது போக்கிடங்கள், தங்குமிடங்கள் மற்றும் உணவகங்கள், கழிவு நீர் ஓடைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், மின் உற்பத்தி செய்யும் சிறு நீர்த்தேக்கங்கள் ஆகியவைகள் இப்பூங்கா வளர்ச்சியின் முக்கியத் தடைகளாக யுனேஸ்கோ நிறுவனம் கருதுகிறது.[7]

மலையேற்றப் பயிற்சி

எவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில் சாகர்மாதா தேசியப் பூங்கா அமைந்துள்ளதால், மலையேற்றப் பிரியர்களுக்கு, செர்ப்பாக்களின் உதவியுடன் மலையேற்றப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Sacred Himalayan Landscape". Government of Nepal - Department of National Parks and Wildlife Conservation. Archived from the original on 12 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 February 2013. {cite web}: Check date values in: |archive-date= (help)
  2. Khumbu
  3. Sagarmatha National Park
  4. Properties inscribed on the World Heritage List (4)
  5. 5.0 5.1 Bhuju, U. R., Shakya, P. R., Basnet, T. B., Shrestha, S. (2007). Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். International Centre for Integrated Mountain Development, Ministry of Environment, Science and Technology, in cooperation with United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific. Kathmandu, Nepal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-9115-033-5
  6. Turner, R. L. (1931). सगर् sagar பரணிடப்பட்டது 2019-09-13 at the வந்தவழி இயந்திரம் and माथा matha பரணிடப்பட்டது 2019-09-13 at the வந்தவழி இயந்திரம் in: A comparative and etymological dictionary of the Nepali language. K. Paul, Trench, Trubner, London.
  7. Sagarmatha National Park

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

  • Jefferies, M. (1991). Mount Everest National Park Sagarmatha Mother of the Universe. Seattle, WA, USA: The Mountaineers: 192 pp.