சாம்ரி அப்துல் காதர்

சாம்ரி அப்துல் காதர்
Yang Berhormat
YB Zambry Abdul Kadir
சாம்ரி அப்துல் காதர் (2023-ஆம் ஆண்டு)
மலேசிய உயர்க்கல்வி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 டிசம்பர் 2023
ஆட்சியாளர்பேரரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
Deputyமுசுதபா சக்முத்
முன்னையவர்முகம்மது காலித் நோர்டின்
தொகுதிசெனட்டர்
மலேசிய வெளியுறவு அமைச்சர்
பதவியில்
3 டிசம்பர் 2022 – 12 டிசம்பர் 2023
ஆட்சியாளர்பேரரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
Deputyமுகமது ஆலமின்
முன்னையவர்சைபுதீன் அப்துல்லா
பின்னவர்முகமது அசன்
தொகுதிசெனட்டர்
செனட்டர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2022
ஆட்சியாளர்பேரரசர் சுல்தான் அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
பொது செயலாளர் பாரிசான் நேசனல்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2021
முன்னையவர்அகமட் மசுலான்
எதிர்க்கட்சித் தலைவர் பேராக்
பதவியில்
3 சூலை 2018 – 1 ஆகஸ்டு 2018
ஆட்சியாளர்சுல்தான் நசுரின் சா
முன்னையவர்முகமது நிசார் ஜமாலுதீன்
பின்னவர்சராணி முகமது
தொகுதிபங்கோர் சட்டமன்ற தொகுதி
11-ஆவது பேராக் மந்திரி பெசார்
பதவியில்
12 மே 2009 – 12 மே 2018
ஆட்சியாளர்கள்சுல்தான் அசுலான் சா
(2009–2014)
நசுரின் சா
(2014–2018)
முன்னையவர்முகமது நிசார் ஜமாலுதீன்
பின்னவர்அகமத் பைசல் அசுமு
தொகுதிபங்கோர்
பேராக் மாநில ஆட்சிக்குழு
(கல்வி, மனித வளம், பல்லூடகம்:
31 மார்ச் 2004–28 செப்டம்பர் 2006)

(கல்வி, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:
28 செப்டம்பர் 2006–16 மர்ச் 2008)
பதவியில்
31 மார்ச் 2004 – 16 மார்ச் 2008
ஆட்சியாளர்அசுலான் சா
முன்னையவர்அப்துல் மாலேக் முகமது அனாபியா
(கல்வி)
ஜமால் நசீர் ரசுதி
(மனித வளம்)
ராம்லி சகாரி
(பல்லூடகம்)
பின்னவர்நிகா கோர் மிங்
(கல்வி)
சூ கியோங் சியோங்
(கல்வி, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)
தொகுதிபங்கோர்
சட்டமன்ற உறுப்பினர் Member
பங்கோர்
பதவியில்
21 மார்ச் 2004 – 19 நவம்பர் 2022
முன்னையவர்முகமது வசிதி இசாக்
(பாரிசான்அம்னோ)
பின்னவர்நார் அசிலிண்டா சகாரியா
(பெரிக்காத்தான்பெர்சத்து)
பெரும்பான்மை5,669 (2004)
5,785 (2008)
5,124 (2013)
1,626 (2018)
நிர்வாகமற்ற தலைவர்
மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
பதவியில்
12 ஆகஸ்டு 2020 – 15 டிசம்பர் 2022
அமைச்சர்வீ கா சியோங்
(2020–2022)
அந்தோனி லோக்
(2022)
முன்னையவர்சைனுன் அலி
2020–2022பாரிசான் BN
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாம்ரி அப்துல் காதர்

22 மார்ச்சு 1962 (1962-03-22) (அகவை 62)
பங்கோர் தீவு, பேராக், மலாயா கூட்டமைப்பு
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிதேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (UMNO)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் BN
துணைவர்சரிபா சுல்கிப்லி
பிள்ளைகள்5
வாழிடம்கம்போங் மசூதி, புலாவ் பாங்கோர், பேராக்
முன்னாள் மாணவர்மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (AB & MA)
டெம்பிள் பல்கலைக்கழகம் (MA & PhD.)
பணிஅரசியல்வாதி
இணையத்தளம்zambry.my
www.facebook.com/zambryabdkadir

டத்தோ ஸ்ரீ ராஜா சாம்ரி அப்துல் காதர் (ஆங்கிலம்; மலாய்: Zambry bin Abdul Kadir; சீனம்: 赞比里阿都卡迪; சாவி: زمبري بن عبدالقادر ; (பிறப்பு: 22 மார்ச் 1962) என்பவர்; 2023 டிசம்பர் மாதம் தொடங்கி பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் (Unity Government) கீழ் மலேசிய உயர்க்கல்வி அமைச்சராக (Minister of Higher Education) பொறுப்பு வகிக்கிறார். இவர் 2023 டிசம்பர் மாதம் மலேசியாவின் மேலவை செனட்டராக நியமிக்கப்பட்டவர்.[1]

இவர் டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரை பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் ஆகும்.

பொது

பதவிகள்

  • லூமுட் மக்களவை தொகுதியின் (Lumut Federal Constituency) தலைவர் (தற்போது);

தனிப்பட்ட வாழ்க்கை

சாம்ரி அப்துல் காதர் 22 மார்ச் 1963 அன்று மலேசியா பேராக், மாநிலத்தில் உள்ள சுற்றுலா மீனவர்களின் குடியேற்றத் தீவான புலாவ் பாங்கோர் தீவில் பிறந்தார். அவர் 6 பிப்ரவரி 2009 அன்று பேராக் மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் பேராக் மாநிலத்தின் 11-ஆவது முதல்வர் ஆவார்.

இவரின் மனைவியின் பெயர் சரிபா சுல்கிப்லி. இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள்; இரண்டு ஆண் பிள்ளைகள் - அசுனா, உதா, சைபா, முனீர் மற்றும் முக்லிசு.

கல்வி

சாம்ரி தன் தொடக்க நிலைக் கல்வியை பங்கோர் தீவு தொடக்க நிலைப் பள்ளியிலும்; இடைநிலைக் கல்வியை சித்தியவான் நகரில் உள்ள சித்தியவான் இடைநிலைப் பள்ளியிலும்; பாரிட் புந்தார் நகரில் உள்ள புக்கிட் கந்தாங் மேல்நிலைப் பள்ளியில் தன் மேல்நிலை கல்வியையும் பெற்றார்.

1991-ஆம் ஆண்டில் மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் தம் முதுகலை பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1995-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் (Temple University) முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009

பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 எனும் 2009-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் சாம்ரி அப்துல் காதர் மிக முக்கியமான பங்கு வகித்ததாக அறியப்படுகிறது.

அந்த நெருக்கடியின் இறுதிக் கட்டத்தில், பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாம்ரி அப்துல் காதர் பேராக் மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பின்னர், பேராக் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிச் சென்றனர்[3] அதனால், மாநில ஆட்சி உடைந்தது.

புதிய மாநில அரசாங்கம்

இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து மாலிம் நாவார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங் என்பவரும் கட்சி மாறினார். பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் பேராக் மந்திரி பெசார் முகமது நிசார் சமாலுதீன் கோரிக்கை வைத்தார்.

இதை பேராக் சுல்தான் பேராக் சுல்தான் அசுலான் சா நிராகரித்தார். அதற்குப் பதிலாக, கட்சி தாவல் செய்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய முன்னணி புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.[4]

விருதுகள்

மலேசிய விருதுகள்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்