சித்தோர்கார் மாவட்டம்

சித்தோர்கார் கோட்டை

சித்தோர்கார் மாவட்டம் (Chittorgarh) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தோர்கார் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும்

அமைப்பு

இமாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,856 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட 640 மாவட்டங்களுள் இம்மாவட்டமும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைகள்

இம்மாவட்டத்தின் எல்லைகளாக கிழக்கே ராட்லம் மாவட்டமும், மேற்கே நீமுச் மற்றும் மாண்சவுர் மாவட்டமும், தெற்கே பிரதாப்கார் மாவட்டமும், வடக்கே பில்வாரா மாவட்டமும் அமைதுள்ளது.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,44,392 ஆகும்.[1] இது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 193 எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.51% ஆகும்.[1]

பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. Hawaii 1,360,301 {cite web}: line feed character in |quote= at position 7 (help)