தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
பின்புலம்
- 1989ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன.
- இத்தேர்தலில் ஆளும் திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் மத்தியில் ஜனதா தளம் தலைமையில் உருவான தேசிய முன்னணி என்ற கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கித்திருந்தபோதிலும் வட மாநிலங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்று ஜனதா தளம் சார்பில் வி. பி. சிங் இந்திய பிரதமராக பதவியேற்றார். அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது.
- இத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக தலைமையிலான தேசிய முன்னணி சார்பில் அனைத்து தமிழக மக்களவை தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. என்றாலும் அக்கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
- திமுக தோல்விக்கு காரணம் என்றால் நடப்பு ஆட்சி காலத்தில் முதல்வர் மு. கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த அதிமுக தலைவி ஜெயலலிதா இடையே சட்டமன்றத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் மற்றும் அப்பிரச்சனையில் ஜெயலலிதா சக திமுக அமைச்சர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் திமுக தலைவர் மு. கருணாநிதி மற்றும் அக்கட்சி அமைச்சர்கள் மீது தவறான தோற்றங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால்.
- இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீதான அனுதாபத்தால் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்றாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீதான போபர்ஸ் ஊழல் போன்ற தவறான ஊழல் குற்றச்சாட்டால் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணி அங்கம் வகித்தது.
முடிவுகள்
அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 27 | திமுக | 0 | சுயேட்சைகள் | 0 |
அதிமுக | 11 | ஜனதா தளம் | 0 | ||
சிபிஐ | 1 | ||||
சிபிஎம் | 0 | ||||
மொத்தம் (1989) | 37 | மொத்தம் (1989) | 1 | மொத்தம் (1989) | 0 |
மொத்தம் (1984) | - | மொத்தம் (1984) | - | மொத்தம் (1984) | 0 |
தமிழக அமைச்சர்கள்
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
இலாக்கா அமைச்சர்கள்
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
முரசொலி மாறன் | திராவிட முன்னேற்றக் கழகம் | மாநிலங்களவை உறுப்பினர் | நகர்ப்புற வளர்ச்சி |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்