தெனோம் மக்களவைத் தொகுதி

தெனோம் (P181)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Tenom (P181)
Federal Constituency in Sabah
தெனோம் மக்களவைத் தொகுதி
(P181 Tenom)
மாவட்டம்தெனோம் மாவட்டம்
உட்பகுதி பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை42,045 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகெனிங்காவ் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்தெனோம்; மெலாலாப், கெமாபோங்
பரப்பளவு2,451 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      சுயேச்சை
மக்களவை உறுப்பினர்ரிதுவான் ருபின்
(Riduan Rubin)
மக்கள் தொகை50,230 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தெனோம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tenom; ஆங்கிலம்: Tenom Federal Constituency; சீனம்: 丹南联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; தெனோம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P181) ஆகும்.[5]

தெனோம் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து தெனோம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

தெனோம் மாவட்டம்

தெனோம் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெனோம் நகரம். தெனோம் நிலப்பகுதி, முன்னர் காலத்தில் போர்ட் பர்ச் (Fort Birch) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் ஆளுநர் உட்போர்ட் பர்ச் (North Borneo Governor Woodford Birch) என்பவரின் பெயர் அந்த நகருக்கு வைக்கப்பட்டது.

1904-ஆம் ஆண்டில் தெனோம் தொடருந்து நிலையத்தில் இருந்து பியூபோர்ட் தொடருந்து நிலையம் , மெலாலாப் தொடருந்து நிலையம்; ஆகிய நிலயங்களுக்கு வடக்கு போர்னியோ தொடருந்து பாதை (North Borneo Railway Line) முடிந்ததைத் தொடர்ந்து, போர்ட் பர்ச் என்பது "தெனோம்" என மறுபெயரிடப்பட்டது.[7]

தெனோம் நகரம்

தெனோம் நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே 176 கி.மீ. தொலைவிலும்; சபாவின் பிரபலமான இடங்களில் ஒன்றான லோங் பாசியா (Long Pasia) நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தெனோம் மக்களவைத் தொகுதி




தெனோம் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (12.8%)
  சீனர் (11.9%)
  இதர இனத்தவர் (2.9%)





தெனோம் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.95%)
  பெண் (50.05%)

தெனோம் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.64%)
  21-29 (22.33%)
  30-39 (23.74%)
  40-49 (16.85%)
  50-59 (13.88%)
  60-69 (9.22%)
  70-79 (3.36%)
  80-89 (1.68%)
  + 90 (1.31%)
தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தெனோம் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P158 1995-1999 ராதன் மாலே
(Raden Malleh)
ஐக்கிய சபா கட்சி (PBS)
10-ஆவது மக்களவை 1999-2004 ரிசால்மான் அப்துல்லா
(Rizalman Abdullah)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
11-ஆவது மக்களவை P181 2004-2008 ரயிமி உங்கி
(Raime Unggi)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018-2022 நூரித்தா சுவால்
(Noorita Sual)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் ரிதுவான் ருபின்
(Riduan Rubin)
சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ரிதுவான் ருபின்
(Riduan Rubin)
சுயேச்சை (Independent)10,02735.0035.00 Increase
நூரித்தா சுவால்
(Noorita Sual)
பாக்காத்தான் (PH)8,91931.1331.13 Increase
ஜமாவி ஜபார்
(Jamawi Ja’afar)
பாரிசான் நேசனல் (BN)8,62530.1115.89
உக்கிம் புவான்டி
(Ukim Buandi)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)9923.463.46Increase
பெகி சாவ் சி திங்
(Peggy Chaw Zhi Ting)
சுயேச்சை (Independent)860.300.30 Increase
மொத்தம்28,649100.00
செல்லுபடியான வாக்குகள்28,64998.52
செல்லாத/வெற்று வாக்குகள்4291.48
மொத்த வாக்குகள்29,078100.00
பதிவான வாக்குகள்42,04568.1410.77
Majority1,1083.871.22
      சுயேச்சை கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2024. {cite web}: Check date values in: |access-date= (help)
  7. "Tenom is a small town with a main street that cuts through the town centre, and everything you need is within walking distance". MySabah.com. 1 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்