நேபா நாடு

மகாபாரத இதிகாச கால நாடுகள்

நேபா நாடு (Nepa Kingdom), மகாபாரத இதிகாசம் கூறும் பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். நேபா நாடு, இமயமலை நாடுகளில் ஒன்றான தற்கால நேபாளத்தை குறிக்கிறது.

மகாபாரதக் குறிப்புகள்

தருமனின் இராசசூய வேள்வியில்

தருமன் நடத்திய இராசசூய வேள்வியில், இமயமலை நாடுகளின் மன்னர்களுடன், நேபா நாட்டினரும் கலந்து கொண்டு, தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வந்த அரிய வகை பொருட்களை தருமருக்கு காணிக்கையாக செலுத்தினர். நேபா இன மக்களுடன் சித்திரகர்கள், குக்குரர்கள், கரஸ்கர்கள், சீனர்கள், யவனர்கள், சகர்கள், ஹர ஹூணர்கள், இமயமலை நாட்டவர்கள், உத்தரர்கள் மற்றும் இமயமலைக் காடுகளில் வாழும் இன மக்கள் தருமருக்கு காணிக்கை செலுத்த அரண்மனை வாயிலில் காத்திருந்தனர் என சபா பருவத்தில் விளக்கப்பட்டுள்ளது.[1][2]

பிற குறிப்புகள்

மகாபாரதம், பர்வம் 13, அத்தியாயம் 34-இல் நேபா நாட்டவர்களை நிப்பர்கள் என்றும் குறிப்பிடுகிறது. நேபா இன மக்களையும், ஹேஹேய நாட்டின் தலஜங்கர்களையும் முனிவர் அங்கிரஸ்சின் மகன் பிருகு வென்றதாகவும், ஐல இன மக்களை பாரத்துவாசர் வென்றதாகவும் குறிப்பிடுகிறது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்