பன்வேல் மாநகராட்சி

பன்வேல் மாநகராட்சி
வகை
வகை
உருவாக்கம்அக்டோபர் 2016
தலைமை
Mayor
கவிதா சௌத்மோல் (பிஜெபி)[1]
நகராட்சி ஆணையாளர்
சுதாகர் தேஷ்முக்
துணை மேயர்
ஜெகதீஷ் கெய்வாட்
மாமன்ற எதிர்கட்சி தலைவர்
பிரிதம் மாத்திரி (விவசாயிகள் & தொழிலாளர்கள் கட்சி [2]
கட்டமைப்பு
உறுப்பினர்கள்78
அரசியல் குழுக்கள்
  தொழிலாளர்கள் & விவசாயிகள் கட்சி: 23
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2017[3]
வலைத்தளம்
http://www.panvelcorporation.com

பன்வேல் மாநகராட்சி (Municipal Corporation of The City of Panvel) வளர்ந்து வரும் மும்பை பெருநகரப் பகுதியின் ராய்கட் மாவட்டத்தின் நவி மும்பை பகுதியில் உள்ளது.[4][5][6]ராய்கட் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியாக பன்வேல் புதிய மாநகராட்சி அக்டோபர் 2016-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இது மும்பை பெருநகரப் பகுதியின் 9-வது மற்றும் மகாராட்டிரா மாநிலத்தின் 27வது மாநகராட்சியாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பன்வேல் நகரம் ஆகும்.

110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பன்வேல் மாநகராட்சி, பன்வேல் தாலுகாவின் 29 வருவாய் கிராமங்களும், தலோஜா, கார்கர், கலம்போலி, காமோதி, பன்வேல், புது பன்வேல் போன்ற நகரப் பகுதிகளையும் கொண்டது.

2017 பன்வேல் மாநகராட்சி தேர்தல்

24 மே 2017 அன்று பன்வேல் மாநகராட்சி முதன் முறையாக தேர்தல் நடைபெற்றது.[7]

2017 தேர்தல் முடிவுகள்
அரசியல் கட்சிகள் உறுப்பினர்கள்
பாரதிய ஜனதா கட்சி+ 51
விவசாயிகள் & தொழிலாளர்கள் கட்சி 23
இந்திய தேசிய காங்கிரசு 2
என்சிபி 2
சிவ சேனா 0
சுயோட்சைகள் 0

மேற்கோள்கள்