பரிவிராஜக வம்சம்
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
பரிவிராஜக வம்சம் (Parivrājaka dynasty) பரத கண்டத்தின் தற்கால மத்தியப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிகளை, கி பி ஐந்து முதல் ஆறாம் நூற்றாண்டு முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும். பரிவிராஜக வம்ச மன்னர்கள் குப்தப் பேரரசில் குறுநில மன்னர்களாக விளங்கியவர்கள். [1]
கி பி 475 முதல் கி பி 518 முடிய இப்பகுதியை ஆண்ட பரிவிராஜக வம்சத்தின் இறுதி இரண்டு மன்னர்களான ஹஸ்தின் மற்றும் சம்க்சோபன் பெயர்கள் சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. [2]
பெயர்க் காரணம்
பரிவிராஜக எனும் சமசுகிருத சொல்லிற்கு துறவிகள் எனப்படும். பாரத்துவாசர் முனிவரின் கோத்திரத்தில் தோன்றிய இவ்வம்சத்தினரின் சில முன்னோர்கள் துறவிகளாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [3] [4]
பரிவிராஜக வம்ச ஆட்சியாளர்கள்
பரிவிராஜக வம்சத்தின் ஆட்சியாளர்கள் பின்வருமாறு::[5]
- சுசர்மன்
- தேவாத்தியன்
- பிரபஞ்சனன்
- தாமோதரன்
- ஹஸ்தின் கி பி 475-517
- சம்க்சோபன் கி பி 518-528
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Moirangthem Pramod 2013, ப. 95.
- ↑ Moirangthem Pramod 2013, ப. 91.
- ↑ Moirangthem Pramod 2013, ப. 93.
- ↑ Moirangthem Pramod 2013, ப. 94.
- ↑ Moirangthem Pramod 2013, ப. 91-93.
ஆதார நூற்பட்டியல்
- Ashvini Agrawal (1989). Rise and Fall of the Imperial Guptas. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0592-7.
{cite book}
: Invalid|ref=harv
(help) - D. C. Sircar (1996). Studies in the Political and Administrative Systems in Ancient and Medieval India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120812505.
{cite book}
: Invalid|ref=harv
(help) - Moirangthem Pramod (2013). "The Parivrajaka Maharaja". Asian Journal of Multidimensional Research 2 (4). பன்னாட்டுத் தர தொடர் எண்:2278-4853. http://www.tarj.in/images/download/ajmr/AJMR%20APRIL%202013%20COMPETE%20PDF/4.10,%20Dr.%20Moirangthem%20Pramod.pdf. பார்த்த நாள்: 2017-03-20.
வெளி இணைப்புகள்
- Siddham - the South Asia Inscriptions Database: Hastin[தொடர்பிழந்த இணைப்பு] and Samkshobha[தொடர்பிழந்த இணைப்பு]
- Parivrаjaka inscriptions by D.N Lielukhine, Oriental Institute