பிரதாப்காட்
பிரதாப்கர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°02′N 74°47′E / 24.03°N 74.78°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | பிரதாப்கர் |
ஏற்றம் | 491 m (1,611 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 42,079 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 312605 |
தொலைபேசி குறியீடு | 01478 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-35 |
இணையதளம் | pratapgarh.rajasthan.gov.in |
பிரதாப்கர் (Pratapgarh), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் அமைந்த பிரதாப்காட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தெற்கே 418.4 கிலோ மீட்டர் தொலைவிலு; அகமதாபாத்த்திற்கு வடகிழக்கே 313.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகில் 32 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற மண்டோசோர் நகரம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 8,749 வீடுகளும் கொண்ட பிரதாப்கர் நகரத்தின் மக்கள் தொகை 42,079 ஆகும். அதில் ஆண்கள் 21,499 மற்றும் பெண்கள் 20,580 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 957 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,344 மற்றும் 3,459 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 70.9%, இசுலாமியர் 17.81% சமணர்கள் 10.87%, கிறித்தவர்கள் 0.32% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர். [2]
மேற்கோள்கள்
- ↑ "Census of India: Pratapgarh". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
- ↑ Pratapgarh Population, Religion, Caste, Working Data Pratapgarh, Rajasthan - Census 2011