பீட்டா தலைமுறை
பீட்டா தலைமுறை (Generation Beta) (சுருக்கமாக:ஜென் பீட்டா ( Gen Beta) என்பது பரிந்துரைகக்ப்பட்ட மக்கள் தொகையியலின் ஒரு தலைமுறையினர் ஆவார். ஒரு தலைமுறை என்பது 15 முதல் 20 ஆண்டுகள் கொண்டிருக்கும்.
01 சனவரி 2025 முதல் 31 டிசம்பர் 2039 வரை பிறப்பவர்களை பீட்டா தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர். பீட்டா தலைமுறையினர் பெரும்பாலும் (1980-1995களில் பிறந்தவர்கள்) ஒய் தலைமுறையினருக்கும் மற்றும் (1990களின் பிற்பகுதி முதல் 2010களின் துவக்கத்தில் பிறந்தவர்கள்) Z தலைமுறையினருக்கும் (Gen Z). பிறந்தவர்களாக இருப்பர்.[1] [2]அடுத்த பத்தாண்டுகளில் உலகின் மக்கள்தொகையில் 16% பேர் பீட்டா தலைமுறையினராக இருப்பர். இத்தலைமுறையினரில் பலர் 22ஆம் நூற்றாண்டிலும் வாழ்வார்கள்.
சமூக ஆய்வுக்காகவும், தலைமுறை மாற்றம் பற்றிய கருத்துகளுக்காகவும் தலைசிறந்த எதிர்காலவாதியான (Futurist) ஆஸ்திரேலியா அறிஞர் மார்க் மெக்கிரிண்டில் என்பவர் பீட்டா தலைமுறை எனும் சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[3]
பீட்டா தலைமுறையினரின் குணநலன்கள்
பீட்டா தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு வசதியை முழுமையாகப் பயன்படுத்தப் போகும் தலைமுறையினர் ஆவார். பீட்டா தலைமுறையினர் தமக்கு முந்தைய ஆல்பா தலைமுறையினருக்கு சவால் விடும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி), மெட்டா வெர்ஸ் போன்ற திறன்மிகு தொழில்நுடபங்களில் உச்சபட்ச வளர்ச்சியை காண்பார்கள். இத்தலைமுறையினரின் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வாழ்க்கை முற்றிலும் செயற்கை நுண்ணறிவு கொண்டதாக இருக்கும் என அறிஞர் மார்க் மெக்கிரிண்டில்.கூறுகிறார்.
பீட்டா தலைமுறையினரின் விரல் நுனியில் எல்லாம் இருந்தும், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகைப்பெருக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.
ஆர்வம் மற்றும் உள்ளடக்கிய தன்மை கொண்ட இத்தலைமுறையினரின் தனியுரிமை (பிரைவசி) என்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். இதனால் நிம்மதி இழந்து மனநல ஆலோசனை தேடுவது அதிகரிக்கும்.
சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வில், தங்களின் முந்தைய தலைமுறையினரான ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினரை விட பன்மடங்கு பொறுப்புணர்வுடன் இருப்பர்.
இதனையும் காண்க
- தலைமுறை
- பேபி பூமர்கள் - (1946-1964)
- எக்ஸ் தலைமுறை - (பிறப்பு 1965- 1979)
- தலைமுறை ஒய் -(1980-1994)
- இசட் தலைமுறை - (1995-2009)
- ஆல்பா தலைமுறை - (2010-2024)
- பீட்டா தலைமுறை - (2025-2039)