மணாலி, இமாச்சலப் பிரதேசம்
மணாலி | |
---|---|
ஆள்கூறுகள்: 32°14′35″N 77°11′21″E / 32.243177°N 77.189246°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | குல்லு |
பெயர்ச்சூட்டு | மனுதரும சாத்திரம் |
ஏற்றம் | 2,050 m (6,730 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,096[1] |
• தரவரிசை | 22 (மாநிலம்) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி, பஹாடி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 175131 |
தொலைபேசி குறியீடு | +911902 |
வாகனப் பதிவு | HP-58 |
மணாலி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பியாஸ் ஆற்றால் உருவான குல்லு பள்ளத்தாக்கின் வடக்கு முனையில் அமைந்துள்ளது. இந்த நகரம் குல்லு மாவட்டத்தில் மாநில தலைநகரான சிம்லாவிற்கு வடக்கே சுமார் 270 கிலோமீட்டர் (170 மைல்) தொலைவிலும், தேசிய தலைநகரான புது தில்லியிலிருந்து வடகிழக்கே 544 கிலோமீட்டர் (338 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மணாலியின் மக்கள் தொகை 8,096 ஆகும். இது லாஹெல் மற்றும் லடாக் வழியாக, காரகோரம் கணவாய் வழியாகவும், சீனாவின் தாரிம் வடிநிலத்தில் உள்ள யார்கண்ட் மற்றும் கோத்தன் வழியாகவும் சென்ற ஒரு பண்டைய வணிகப் பாதையின் தொடக்கமாக இருந்தது. மணாலி இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திற்கும், லடாக்கில் உள்ள லே நகரத்திற்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.
தொன்மம்
சானாதன சட்டமியற்றிய மனுவின் நினைவாக இந்நகருக்கு மணாலி என்று பெயரிடப்பட்டது ( மனுதரும சாத்திரத்தைப் பார்க்கவும்). மணாலி என்ற பெயர் மனு-அலயாவின் என்ற சொல்லின் மருவாகக் கருதப்படுகிறது ( பொருள். 'மனுவின் இருப்பிடம்' ). இந்து அண்டவியலில், ஒரு ஊழிவெள்ளம் உலகத்தை மூழ்கடித்த பிறகு மனித வாழ்க்கையை மீண்டும் உருவாக்க மனு மணாலியில் தனது பேழையிலிருந்து இறங்கியதாக நம்பப்படுகிறது. மணாலி அமைந்துள்ள குலு பள்ளத்தாக்கு பெரும்பாலும் "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்று குறிப்பிடப்படுகிறது. நகரத்தில் உள்ள ஒரு பழைய கிராமத்தில் மனு முனிவருக்கு கட்டபட்ட பழமையான கோயில் உள்ளது.
நிலவியல்
மணாலி புது தில்லிக்கு வடக்கே சுமார் 547 கிமீ (340 மைல்) தொலைவில், 32.2396 N, 77.1887 E, சுமார் 547 km (340 mi) இல் அமைந்துள்ளது.
மக்கள்தொகையியல்
மணாலி ஒரு வணிக சிற்றூராக இருந்து சிறிய நகரமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 8,096 ஆகும். 2001 இல், மணாலியின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை 6,265 ஆக இருந்தது. மக்கள் தொகையில் ஆண்களின் விகிதம் 64% என்றும், பெண்களின் விகிதம் 36% என்றும் உள்ளது. மணாலியின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80% என்றும், பெண்களின் கல்வியறிவு 63.9% என்றும் உள்ளது. மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் 9.5% ஆவர். [2]
வானிலை
மணாலி வெப்பமண்டல ஹைலேண்ட் காலநிலையை ( கோப்பென் காலநிலை ) கொண்டுள்ளது. இங்கு வெப்பமான கோடை காலம், ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் ஒரு நாளில் அதிகமான வெப்பநிலை மாறுபாடு போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆண்டில் வெப்பநிலை −7 °C (19 °F) முதல் 30 °C (86 °F) வரை இருக்கும். கோடைக்காலத்தில் வெப்பம் 30 °C (86 °F) ஐக் கடக்கிறது மற்றும் குளிர் காலத்தில் வெப்பம் −7 °C (19 °F) ஐ விட கீழே செல்கிறது. கோடையில் சராசரி வெப்பநிலை 10 °C (50 °F) முதல் 30 °C (86 °F) வரையிலும், குளிர் காலத்தில் வெப்பட் −7 °C (19 °F) முதல் 15 °C (59 °F) வரை இருக்கும்.
மாதாந்திர மழைப்பொழிவு நவம்பரில் 31 மிமீ (1.2 அங்குலம்) மற்றும் சூலையில் 217 மிமீ (8.5 அங்குலம்) வரை மாறுபடும். சராசரியாக, குளிர்காலம் மற்றும் வசந்த கால மாதங்களில் சுமார் 45 மிமீ (1.8 அங்குலம்) மழைப்பொழிவு இருக்கும். இது பருவமழை நெருங்கும்போது கோடையில் 115 மிமீ (4.5 அங்குலம்) ஆக அதிகரிக்கும். ஆண்டின் சராசரி மொத்த மழைப்பொழிவு 1,363 மிமீ (53.7 அங்குலம்) ஆகும். மணாலியில் திசம்பர் முதல் மார்ச் தொடக்கம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், மணாலி (1981–2010, extremes 1968–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 19.5 (67.1) |
23.5 (74.3) |
27.0 (80.6) |
30.0 (86) |
35.0 (95) |
33.2 (91.8) |
32.6 (90.7) |
30.6 (87.1) |
29.2 (84.6) |
30.0 (86) |
25.6 (78.1) |
21.5 (70.7) |
35.0 (95) |
உயர் சராசரி °C (°F) | 10.8 (51.4) |
12.1 (53.8) |
16.7 (62.1) |
21.7 (71.1) |
24.9 (76.8) |
27.0 (80.6) |
26.9 (80.4) |
25.5 (77.9) |
24.7 (76.5) |
22.0 (71.6) |
17.7 (63.9) |
13.5 (56.3) |
20.2 (68.4) |
தாழ் சராசரி °C (°F) | -1.1 (30) |
0.2 (32.4) |
3.0 (37.4) |
6.4 (43.5) |
9.1 (48.4) |
12.8 (55) |
15.9 (60.6) |
16.0 (60.8) |
12.2 (54) |
6.1 (43) |
2.2 (36) |
0.2 (32.4) |
6.9 (44.4) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -11.6 (11.1) |
-11.0 (12.2) |
-6.0 (21.2) |
-1.0 (30.2) |
1.0 (33.8) |
4.4 (39.9) |
7.4 (45.3) |
7.0 (44.6) |
3.0 (37.4) |
-1.5 (29.3) |
-5.0 (23) |
-10.0 (14) |
−11.6 (11.1) |
மழைப்பொழிவுmm (inches) | 83.5 (3.287) |
110.4 (4.346) |
156.9 (6.177) |
84.7 (3.335) |
73.5 (2.894) |
73.9 (2.909) |
190.3 (7.492) |
192.1 (7.563) |
113.1 (4.453) |
35.9 (1.413) |
28.1 (1.106) |
55.0 (2.165) |
1,197.4 (47.142) |
% ஈரப்பதம் | 61 | 61 | 53 | 56 | 61 | 63 | 74 | 76 | 75 | 69 | 61 | 62 | 64 |
சராசரி மழை நாட்கள் | 5.2 | 7.4 | 8.0 | 5.5 | 5.8 | 6.4 | 12.1 | 13.6 | 7.7 | 2.3 | 1.7 | 2.9 | 78.6 |
ஆதாரம்: India Meteorological Department[3][4] |
போக்குவரத்து
வானூர்தி
அருகிலுள்ள வானூர்தி நிலையம் புந்தார் விமான நிலையம் (IATA குறியீடு KUU) இது குலுவில் உள்ள பூந்தர் நகரில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 3 சாலையானது இந்திய-பாக்கித்தான் எல்லையான அமிர்தசரஸ் அருகே உள்ள அடாரியில் இருந்து தொடங்கி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி வழியாக லடாக்கில் உள்ள லேயில் முடிவடைகிறது. இந்த வானூர்தி நிலையம் குலு-மணாலி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது. வானூர்தி நிலையத்தில் இருந்து புது தில்லிக்கு ஏர் இந்தியா நிறுவனம் வானூர்திகளை வழக்கமாக இயக்குகிறது.
வாடகை உலங்கு வானூர்தி சேவை
பவன் ஹான்ஸ் நிறுவனமானது சிம்லாவை சண்டிகர், குல்லு, காங்ரா, தரம்சாலா வரை இணைக்கும் ஹெலி-டாக்ஸி சேவையை வழங்குகிறது. [5]
சாலை
மணாலியை தில்லியில் இருந்து அம்பாலா வரை தேசிய நெடுஞ்சாலை 1 மற்றும் அங்கிருந்து சண்டிகர் வரை தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் அங்கிருந்து பிலாஸ்பூர், சுந்தர்நகர், மண்டி, குலு நகரங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 21 மூலம் அடையலாம். சண்டிகரில் இருந்து மணாலிக்கு சாலை வழியான தொலைவு 310 கிமீ (190 மைல்) ஆகும். மற்றும் தில்லியிலிருந்து மணாலிக்கு 570 கிமீ (350 மைல்) ஆகும். இமாச்சல் போக்குவரத்து கழகம், இமாச்சல் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சேவைகள் போக்குவரத்து சேவையை அளிக்கின்றன.
தொடருந்து
மணாலிக்கு அருகாமையில் தொடருந்து பாதை எதுவும் இல்லை. அருகிலுள்ள அகலப் பாதைகளான உனா 250 km (155 mi) தொலைவிலும், கிராத்பூர் சாஹிப் 268 km (167 mi) தொலைவிலும், கால்கா ( 275 km (171 mi) ) தொலைவிலும், சண்டிகர் ( 310 km (193 mi) ) தொலைவிலும், பதான்கோட் ( 325 km (202 mi) ) தொலைவிலும் உள்ளன. அருகிலுள்ள குறுகிய தொடருந்து பாதை ஜோகிந்தர் நகர் ( 175 கிலோமீட்டர்கள் (109 mi) ) தொலைவில் உள்ளது. கல்கா-சிம்லா இரயில் பாதையானது, மாநிலத் தலைநகரான சிம்லாவில் முடிவடையும் ஒரு குறுகிய தொடருந்து பாதையாகும். அங்கிருந்து மணாலிக்கு சாலை வழியாக பயணிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் கவலைகள்
மணாலி புனல்மின்சாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளால் சர்ச்சையைக் கண்டுள்ளது. திட்டமிடப்படாத மற்றும் அபரிமிதமான கட்டுமானங்களால் காடுகள் கடுமையாக அழிவுக்கு வழிவகுத்தது. இது ஆற்றுப் படுக்கைகள் மாசுபடுவதற்கும், மலைகளின் ஓரங்களில் குப்பைகள் குவிவதற்கு வழிவகுத்தது. இதனால் உத்தரகண்ட்ட மாநிலப் பறவையான இமயமலை மோனல் மட்டுமின்றி, பல்வேறு வகையான விலங்கினங்களின் வாழ்விட இழப்பு ஏற்பட்டுள்ளது. [6]
மேற்கோள்கள்
- ↑ "Manali (Kullu, Himachal Pradesh, India) - population statistics, map, and location". பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 1 November 2008.
- ↑ "Station: Manali Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 469–470. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M69. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020.
- ↑ "Shimla-Chandigarh helicopter service now operating six days a week". Himachal Tourism Official Website. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
- ↑ Azad, Shivani (18 November 2019). "Uttarakhand’s state bird monal to be conserved with help from Himachal" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/ukhands-state-bird-monal-to-be-conserved-with-help-from-himachal/articleshow/72099088.cms.