மணிப்புறா

மணிப்புறா
S. chinensis suratensis (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Spilopelia
இனம்:
S. chinensis
இருசொற் பெயரீடு
Spilopelia chinensis
(Scopoli, 1768)
துணையினம்
  • chinensis Scopoli, 1768
  • ceylonensis Reichenbach, 1862
  • hainana Hartert, 1910
  • suratensis JF Gmelin, 1789
  • tigrina Temminck, 1811
வேறு பெயர்கள்
  • Streptopelia chinensis
  • Stigmatopelia chinensis

மணிப்புறா என்பது ஆங்கிலத்தில் (Spotted Dove) (உயிரியல் பெயர்: streptopelia chinensis) என்று அறியப்படுகிறது இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது, சிறிய நீண்ட வாலை கொண்ட சிற்றினம் ஆகும். இப்பறவை மாடப்புறாவைவிடச் சிறியது, மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், கருநிற பின்கழுத்து உடையது. இவை இணைகளாய் அல்லது சிறு கூட்டமாக பசுமையான புன்செய் நிலங்களில் மேயும்.

வகைபிரித்தல்

இதில் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • இந்திய மணிப்புறா Spilopelia chinensis suratensis (Gmelin, JF, 1789) – பாக்கித்தான், இந்தியா, நேபாளம், பூட்டான்
  • Spilopelia chinensis ceylonensis (Reichenbach, 1851) – இலங்கை (சுரடென்சிசை (suratensis) விட குறுகிய இறக்கைகள் கொண்டது [3])
  • Spilopelia chinensis tigrina (Temminck, 1809) – வங்கதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியா இந்தோசீனா வழியாக பிலிப்பீன்சு மற்றும் சுந்தா தீவுகள் வரை
  • Spilopelia chinensis chinensis (Scopoli, 1786) – வடகிழக்கு மியான்மர் முதல் நடு மற்றும் கிழக்கு சீனா, தைவான்
  • Spilopelia chinensis hainana (ஆர்டெர்ட், 1910) – ஆய்னான் (தென்கிழக்கு சீனாவில்)

உடலமைப்பு

30 செ.மீ. - கருப்பும் வௌ்ளையுமான சதுரங்கப் பலகையை ஒத்த புள்ளிகளைப் பின் கழுத்தில் கொண்ட இதன் உடலின் மேற்பகுதி இளஞ்சிவப்புக் கலந்த பழுப்பாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். மார்பு இளஞ்சிவப்பாகவும் வயிறு, வாலடி, வால் கீழ் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்.

இறகுகளை இலகுவாக பலநிலைகளில் வைக்கும் புள்ளிப் புறா

காணப்படும் பகுதிகள்

நீர் வளமிக்க காடுகளையும் விளைநிலங்களையும் ஈரமிக்க இலையுதிர் காடுகளையும் சார்ந்து இணையாகவோ சிறு கூட்டமாகவோ திரியும்.

கொல்கத்தாவில் காணப்பட்ட புள்ளிப் புறா

உணவு

காட்டுப்பாதைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும் தானியங்களையும் புல் விதைகளையும் உணவாகப் பொறுக்கித் தின்னும். இனப்பெருக்கப் பருவம் நெருங்கும் போது உயர இருந்து இறக்கை மடக்கிக் கீழே குப்புற விழும் பழக்கம் கொண்டது. க்ரூக்ரூக் எனக் குரல் கொடுக்கும். இக்குரல் ஒலி வட்டாரத்திற்கு வட்டாரம் மக்களின் வட்டார மொழி போலச் சிறிதளவு வேறுபடுவது உண்டு.

இனப்பெருக்கம்

ஆண்டு முழுவதும் மரங்களில் தாழ்வான கிளைகளிடையே தட்டுப் போல கூடமைத்து 2 முட்டைகள் இடும். மக்கள் வாழும் பங்களாக்களின் மாடிச்சுவர் பிதுக்கம். இறவாரம், கோப்பு ஆகியவற்றிலும் கூடும் அமைக்கும்.

கூடும் முட்டைகளும்

[4]

மேற்கோள்கள்

  1. "Spilopelia chinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2015. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013. {cite web}: Invalid |ref=harv (help)
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  3. Ali, S.; Ripley, S.D. (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3. Stone Curlews to Owls (2 ed.). New Delhi: Oxford University Press. pp. 151–155.
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:63

வெளி இணைப்புகள்