மார்ச்சு 2
<< | மார்ச் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXV |
மார்ச்சு 2 (March 2) கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார்.
- 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார்.
- 1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார்.
- 1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது.
- 1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
- 1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டதை அடுத்து இலங்கை முழுவதும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[1] சிறை பிடிக்கப்பட்ட விக்கிரம ராசசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
- 1823 – தமிழ் நாடு, திருப்பெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1825 – கடைசிக் கரிபியன் கடல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1855 – இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.
- 1859 – இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது.
- 1882 – விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- 1903 – பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.
- 1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- 1919 – முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.
- 1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
- 1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
- 1939 – கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
- 1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1955 – கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.
- 1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1958 – தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1969 – பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
- 1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
- 1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
- 1978 – செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
- 1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
- 1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
- 1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
- 1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.
- 1992 – ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
- 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.
- 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
- 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.
- 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
பிறப்புகள்
- 480 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. 543)
- 1810 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1903)
- 1824 – பெட்ரிக் சிமேத்தானா, செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. 1884)
- 1876 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1958)
- 1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
- 1917 – லாரி பேக்கர், இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. 2007)
- 1918 – ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)
- 1920 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)
- 1923 – சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை
- 1926 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)
- 1931 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2022)
- 1931 – அழகிரி விசுவநாதன், தமிழக எழுத்தாளர்
- 1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
- 1940 – மம்நூன் ஹுசைன், பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்
- 1948 – ஆந்திரேய் இலிந்தே, உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்
- 1949 – தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி
- 1963 – வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- 1968 – டேனியல் கிரெய்க், அமெரிக்க நடிகர்
- 1972 – சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்
- 1980 – ரிபெல் வில்சன், ஆத்திரேலிய நடிகை
- 1981 – தர்சன் தர்மராஜ், இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2022)
- 1983 – ரவி கிருஷ்ணா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1989 – நத்தலி இமானுவேல், ஆங்கிலேய நடிகை
- 1990 – டைகர் ஷெராப், இந்தியத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
- 274 – மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216)
- 1835 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1768)
- 1840 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (பி. 1758)
- 1920 – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1854)
- 1930 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
- 1939 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)
- 1949 – சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)
- 1991 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931)
- 2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)
- 2009 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)
- 2016 – இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.