வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)

வேளச்சேரி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில், வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 26. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்[1].

வாக்குச் சாவடி எண் 92-க்கு மறு தேர்தல்

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, இத்தொகுதியின் வாக்குச் சாவடி எண் 92-க்கான தேர்தல் முடிந்த பிறகு, வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்கள் தன்னிச்சையாக வாக்களிக்கும் இயந்திரங்களை இருசக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றதால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, இந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் 17 ஏப்ரல் 2021 அன்று மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. [2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 எம். கே. அசோக் அதிமுக 82,146 53.91 ஜெயராமன் பாமக 50,425 33.10
2016 வாகை சந்திரசேகர் திமுக 70,139 40.95 நீலாங்கரை எம். சி. முனுசாமி அதிமுக 61,267 35.77
2021[3] ஜே. எம். எச். அசன் மவுலானா இ.தே.காங்கிரசு 68,493 38.76 எம். கே. அசோக் அதிமுக 64,141 36.30

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்