2017 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
நாட்கள் | 1 சூன் – 18 சூன் 2017 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | சுழல்முறை, ஒற்றை வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | இங்கிலாந்து வேல்சு |
வாகையாளர் | பாக்கித்தான் (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 15 |
தொடர் நாயகன் | அசன் அலி |
அதிக ஓட்டங்கள் | ஷிகர் தவான் (338) |
அதிக வீழ்த்தல்கள் | அசன் அலி (13) |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி வாகையாளர் கோப்பை |
2017 ஐசிசி வாகையாளர் கோப்பை (2017 ICC Champions Trophy, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள அரங்குகளில் 2017 சூன் 1 முதல் 18 வரை 8 துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் பாக்கித்தான் அணி முதற்தடவையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இவ்வணி இந்திய அணியை 180-ஓட்டங்களால் வென்றது.[2][3]
இவ்வகையிலான போட்டிகளில் இது எட்டாவது போட்டியாகும். ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் 2015 செப்டம்பர் 30 இல் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இதில் பங்குபெற்றியிருந்தன். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் விளையாடின. வங்காளதேசம் இந்த முறை மேற்கிந்திய அணிக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. வங்காளதேச அணி 1006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக இத்தொடரில் விளையாட வாய்ப்புப் பெற்றது. அதேசமயம் மேற்கிந்திய அணி முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பை இழந்தது.
மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அங்கு மிகப்பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4][5]
தகுதி
இங்கிலாந்து நாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுவதால் அந்த அணி தானாக தகுதி பெற்றுவிட்டது. மற்றைய ஏழு அணிகள் ஐசிசி தரவரிசையின் செப்டம்பர் 30, 2015 அடிப்படையில் தகுதிபெற்றன.[6]
தகுதி | நாடு |
---|---|
நடத்துபவர் | இங்கிலாந்து |
முழு உறுப்பு நாடுகள் | ஆத்திரேலியா |
இந்தியா | |
தென்னாப்பிரிக்கா | |
நியூசிலாந்து | |
இலங்கை | |
வங்காளதேசம் | |
பாக்கித்தான் |
நடைபெறும் இடங்கள்
2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, ஓவல், எட்சுபாசுடன், சோபியா கார்டன் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என 2016 சூன் 1 அன்று அறிவிக்கப்பட்டது[7]
இலண்டன் | பர்மிங்காம் | கார்டிஃப் |
---|---|---|
ஓவல் | எட்சுபாசுடன் துடுப்பாட்ட மைதானம் | சோபியா கார்டன் |
கொள்ளளவு: 26,000 | கொள்ளளவு: 23,500 | கொள்ளளவு: 15,643 |
தயார்படுத்துதல் போட்டிகள்
தயார்ப்படுத்தல் போட்டிகளில் ஒவ்வோர் அணியும் 15 வீரர்களைக் களத்தில் இறக்க முடியும், ஆனாலும் ஒவ்வோர் ஆட்டப்பகுதியிலும் 11 பேர் மட்டுமே துடுப்பாடவோ, அல்லது பந்து வீச்சிலோ ஈடுபடலாம்.
எ
|
||
அஞ்செலோ மத்தியூஸ் 95 (106)
மொய்சேசு என்றிக்கெசு 3/46 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
சோயிப் மாலிக் 72 (66)
மெகதி அசன் மிராசு 2/30 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
லூக் ரோஞ்சி 66 (63)
புவனேசுவர் குமார் 3/28 (6.4 ஓவர்கள்) |
விராட் கோலி 52
ஜேம்சு நீசம் 1/11 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
மெகதி அசன் 24 (34)
புவனேசுவர் குமார் 3/13 (5 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குழு நிலை
குழுநிலைப் போட்டிகள் பற்றிய விபரங்கள் 2016 சூன் 1 இல் அறிவிக்கப்பட்டன.[8][9]
குழு A
அணி | ஆ | வெ | தோ | மு.இ | புள். | நி.ஓ.வி |
---|---|---|---|---|---|---|
இங்கிலாந்து | 3 | 3 | 0 | 0 | 6 | +1.045 |
வங்காளதேசம் | 3 | 1 | 1 | 1 | 3 | 0.000 |
ஆத்திரேலியா | 3 | 0 | 1 | 2 | 2 | –0.992 |
நியூசிலாந்து | 3 | 0 | 2 | 1 | 1 | –1.058 |
வெளியேறும் நிலைக்குத் தகுதி
எ
|
||
ஜோ ரூட் 133* (129)
சபீர் ரகுமான் 1/13 (1 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி வாகையாளர் போட்டி ஒன்றில் முதற் தடவையாக 300+ ஓட்ட இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டது.[10]
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, வங்காளதேசம் 0.
எ
|
||
மொய்சேசு என்றிக்கசு 18 (14)
ஆடம் மில்னி 2/9 (2 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் முடிவு எதுவும் அறிவிக்கப்படாம நிறுத்தப்பட்டது.
- புள்ளிகள்: ஆத்திரேலியா 1, நியூசிலாந்து 1.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆத்திரேலிய ஆட்டத்தின் போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- இது ஆத்திரேலியா விளையாடிய 900வது பன்னாட்டு ஒருநாள் போட்டியாகும்.[11]
- டேவிட் வார்னர் (ஆசி) ஒருநாள் போட்டிகளில் அதிவேகமான 4,000 ஓட்டங்களை எடுத்த ஆத்திரேலிய வீரர் என்ற சாதனையை எடுத்தார்.[12]
- புள்ளிகள்: ஆத்திரேலியா 1, வங்காளதேசம் 1.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, நியூசிலாந்து 0.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதிக்குத் தெரிவானது.[13]
எ
|
||
ரோஸ் டெய்லர் 63 (82)
மொசாதெக் ஒசைன் 3/13 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகுமுதுல்லா ரியாத், சகீப் அல் அசன் இருவரும் இணைந்து விளையாடி ஒருநாள் போட்டி ஒன்றில் வங்காளதேசத்துகாக அதிக ஓட்டங்களைப் (224) பெற்று சாதனை படைத்தனர்.[14]
- ஐசிசி வாகையாளர் போட்டி ஒன்றில் வங்காளதேசம் வெற்றி பெற்ற முதலாவது போட்டி இதுவாகும்.[15]
- புள்ளிகள்: வங்காளதேசம் 2, நியூசிலாந்து 0.
- இப்போட்டி முடிவை அடுத்து நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியது.[14]
எ
|
||
பென் ஸ்டோக்சு 102* (109)
ஜோசு ஆசில்வுட் 2/50 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
- புள்ளிகள்: இங்கிலாந்து 2, ஆத்திரேலியா 0.
- இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா போட்டித் தொடரில் இருந்து விலகியது. வங்காளதேசம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[16]
குழு B
அணி | ஆ | வெ | தோ | மு.இ | புள். | நி.ஓ.வி |
---|---|---|---|---|---|---|
இந்தியா | 3 | 2 | 1 | 0 | 4 | +1.370 |
பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | 4 | -0.680 |
தென்னாப்பிரிக்கா | 3 | 1 | 2 | 0 | 2 | +0.167 |
இலங்கை | 3 | 1 | 2 | 0 | 2 | –0.798 |
வெளியேறும் நிலைக்குத் தகுதி
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அசீம் ஆம்லா (தெஆ) ஒருநாள் போட்டிகளில் இன்னிங்க்சு வாரியாக விரைவான 25 நூறு ஓட்டங்களைப் பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.[17]
எ
|
||
ரோகித் சர்மா 91 (119)
சதாப் கான் 1/52 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக பாக்கித்தானின் வெற்றி இலக்கு 41 ஓவர்களுக்கு 289 ஓட்டங்களாகக் கணிக்கப்பட்டது.
- புள்ளிகள்: இந்தியா 2, பாக்கித்தான் 0.
எ
|
||
டேவிட் மில்லர் 75* (104)
அசன் அலி 3/24 (8 ஓவர்கள்) |
பக்கார் சமன் 31 (23)
மோர்னி மோர்க்கல் 3/18 (7 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பாக்கித்தானின் ஆட்டத்தின் பொது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- பக்கார் சமன் (பாக்) தன்து முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: பாக்கித்தான் 2, தென்னாப்பிரிக்கா 0.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்டம் இரு அணிகளுக்குமிடையில் நடந்த 150வது ஒருநாள் போட்டியாகும்.[18]
- ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான மிக அதிகமான ஓட்ட-இலக்கைப் பெற்றது இவ்வாட்டத்தில் ஆகும். அத்துடன் வாகையாளர் போட்டி ஒன்றில் மிக அதிகமான வெற்றிகரமான ஓட்ட இலக்கைப் பெற்ற முதலாவது அணியும் இலங்கை ஆகும்.[19][20]
- புள்ளிகள்: இலங்கை 2, இந்தியா 0.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- புள்ளிகள்: இந்தியா 2, தென்னாப்பிரிக்கா 0.
- இவ்வாட்ட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்கா போட்டித் தொடரில் இருந்து விலகியது. இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[21]
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பாகிம் அச்ரப் (பாக்) தனது 1வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- புள்ளிகள்: பாக்கித்தான் 2, இலங்கை 0.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை போட்டித் தொடரில் இருந்து விலகியது. பாக்கித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[22]
வெளியேறும் நிலை
அரை-இறுதிகள் | இறுதி | |||||||
A1 | இங்கிலாந்து | 211 (49.5 ஓவர்கள்) | ||||||
B2 | பாக்கித்தான் | 215/2 (37.1 ஓவர்கள்) | ||||||
B2 | பாக்கித்தான் | 338/4 (50 ஓவர்கள்) | ||||||
B1 | இந்தியா | 158 (30.3 ஓவர்கள்) | ||||||
A2 | வங்காளதேசம் | 264/7 (50 ஓவர்கள்) | ||||||
B1 | இந்தியா | 265/1 (40.1 ஓவர்கள்) |
அரையிறுதிகள்
எ
|
||
ஜோ ரூட் 46 (56)
அசன் அலி 3/35 (10 ஓவர்கள்) |
அசார் அலி 76 (100)
ஜேக் பால் 1/37 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- [ரும்மான் ராயீசு (பாக்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
எ
|
||
தமீம் இக்பால் 70 (82)
கேதார் யாதவ் 2/22 (6 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி போட்டித் தொடர் ஒன்றில் வங்காளதேசம் முதற்தடவையாக அரையிறுதிப் போட்டியில் விளையாடியது.[23]
- யுவராஜ் சிங் (இந்) தனது 300வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[24]
இறுதி
எ
|
||
பக்கார் சமான் 114 (106)
கேதார் யாதவ் 1/27 (3 ஓவர்கள்) |
கார்திக் பாண்டியா 76 (43)
முகம்மது ஆமிர் 3/16 (6 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பக்கார் சமான் (பாக்) தனது 1வது ஒருநாள் நூறு ஓட்டங்களைப் பெற்றார்.
- பாக்கித்தானின் மொத்த ஓட்ட எண்ணிக்கை எந்த ஓர் அணியினதும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி ஒன்றின் அதி கூடிய ஓட்டங்களாகும்.[3]
சான்றுகள்
- ↑ "2017 ICC Champions Trophy Fixtures". June 1, 2016. பார்க்கப்பட்ட நாள் June 1, 2016.
- ↑ "New champions: Zaman, Amir and Pakistan raze India for title". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-champions-trophy-2017/content/story/1104414.html. பார்த்த நாள்: 18-06-2017.
- ↑ 3.0 3.1 "Openers' dominance, and a new high for Pakistan". ESPN Cricinfo. 18-06-2017. http://www.espncricinfo.com/icc-champions-trophy-2017/content/story/1104544.html. பார்த்த நாள்: 18-06-2017.
- ↑ "ICC to review security in wake of Manchester bombing". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/icc-champions-trophy-2017/content/story/1099103.html. பார்த்த நாள்: 24 மே 2017.
- ↑ "South Africa reassured by increased security". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/england-v-south-africa-2017/content/story/1099140.html. பார்த்த நாள்: 24-05-2017.
- ↑ "Teams confirmed for ICC Champions Trophy 2017". ICC cricket (International Cricket Council). 30 செப்டம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151004182631/http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2015.
- ↑ "India to start ICC Champions Trophy title defence against Pakistan as event schedule announced with one year to go". ICC Cricket.
- ↑ "India-Pakistan, Australia-England bouts in 2017 Champions Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் June 1, 2016.
- ↑ "India to start ICC Champions Trophy title defence against Pakistan". ICC. Archived from the original on December 24, 2018. பார்க்கப்பட்ட நாள் June 1, 2016.
- ↑ "Highest successful chase in Champions Trophy history". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் June 1, 2017.
- ↑ "Australia v Bangladesh: Everything you need to know". Yahoo7. June 4, 2017. பார்க்கப்பட்ட நாள் June 5, 2017.
- ↑ "Warner breaks 27-year-old Australian record". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் June 5, 2017.
- ↑ "Champions Trophy: England beat New Zealand to reach semi-finals". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 6, 2017.
- ↑ 14.0 14.1 "Champions Trophy: Bangladesh produce a record stand to knock New Zealand out". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 9, 2017.
- ↑ "Champions Trophy: Bangladesh produce a record stand to knock New Zealand out". Bleacher report. பார்க்கப்பட்ட நாள் June 9, 2017.
- ↑ "Champions Trophy: Ben Stokes hits century as England eliminate Australia". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 10, 2017.
- ↑ "Amla reasserts his 50-over greatness". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் June 3, 2017.
- ↑ "India eye semi-final spot by defeating Sri Lanka". Bennett, Coleman & Co. Ltd. Archived from the original on December 24, 2018. பார்க்கப்பட்ட நாள் June 8, 2017.
- ↑ "Champions Trophy: Sri Lanka stun India to throw Group B wide open". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 8, 2017.
- ↑ "Mendis, Gunathilaka anchor highest Champions Trophy chase to keep SL alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் June 8, 2017.
- ↑ "Champions Trophy: India crush South Africa to reach semi-finals". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
- ↑ "Champions Trophy: Pakistan beat Sri Lanka to set up England semi-final". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் June 12, 2017.
- ↑ "India vs South Africa, Champions Trophy 2017: Latest Points Table". Network 18. June 11, 2017. http://www.news18.com/cricketnext/news/india-vs-south-africa-champions-trophy-2017-latest-points-table-1429169.html. பார்த்த நாள்: June 15, 2017.
- ↑ "I wondered at one stage if I would play another game, says Yuvraj". The Hindu. June 14, 2017. http://www.thehindu.com/sport/cricket/i-wondered-at-one-stage-if-i-would-play-another-game-says-yuvraj/article19050266.ece. பார்த்த நாள்: June 15, 2017.