அத்திரி

பிரம்மரிஷி அத்திரி
அத்திரி முனிவருடன் இராமனும் இலக்குமணனும் உரையாடுதல், சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்
தகவல்
துணைவர்(கள்)அனுசுயா
பிள்ளைகள்துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன்

அத்திரி (Atri) ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் மற்றும் தத்தாத்ரேயர் ஆவர். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

இராமாயணத்தில்

அத்திரி–அனுசுயா தம்பதியினர் மும்மூர்த்திகளைச் சந்திக்கும் கதையைக் கூறும் பாகவத புராண ஏடு ஒன்று (PhP 4.1.21–25) (காகிதம், 18-ம் நூற்றாண்டுன் கடைக்காலம், ஜெய்ப்பூர்)
அத்திரியின் சிலை, ஆத்ரேயபுரம் கிராமம், ஆந்திரப்பிரதேசம்.
இடமிருந்து வலமாக: அத்திரி, பிருகு, வைகானசர், மரீசி மற்றும் காசியபர்

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி–அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

தமிழில் பழமொழி

"அத்திரி பாச்சா வித்தைகள் எல்லாம் இங்கு பலிக்காது" என்ற பழமொழி தமிழகத்தில் இம்முனிவர் பெயரால் கேலியாக பேசபடுவது உண்டு.

மேற்கோள்கள்

  1. Antonio Rigopoulos (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. State University of New York Press. pp. 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3696-7.
  2. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  3. Alf Hiltebeitel (2016). Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra. Routledge. pp. 55–56, 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-23877-5.