காம்போஜ முனிவர்
காம்போஜ முனிவர் (Sage Kambhoja or Kumbhoja), இராமாயணக் காவியம் கூறும் அகத்திய முனிவரின் நெருங்கிய நண்பரும், முனிவரும் ஆவார். காம்போஜ முனிவர், வசிட்டரின் தம்பியான அகத்தியருடன் தெற்கு பரத கண்டத்தின் அடர்ந்த காட்டில் முனிக்கோலத்தில் வாழ்ந்து வந்தார்.[1] 14 ஆண்டு வனவாசத்தின் போது இராமன், இலக்குமணன் மற்றும் சீதை, காம்போஜ முனிவரை தரிசித்து, அவரது அறிவுரையின் படி, பஞ்சவடி சென்று வாழ்ந்தனர். பஞ்சவடியில் இருந்த போது சீதையை இராவணன், மாரீசனின் துணையுடன் இலங்கைக்கு கடத்திச் சென்றான்.
மேற்கோள்கள்
- ↑ "indiangyan.com". indiangyan.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.