காராகும் பாலைவனம்

காரகும் பாலைவனம், நாசாவின் செய்மதி புகைப்படம்

காராகும் பாலைவனம் (Karakum Desert), கருமணல் கொண்டதால் இப்பாலைவனத்திற்கு துருக்கி மொழியில் காரகும் பாலைவனம் எனப் பெயராயிற்று. நடு ஆசியா நாடான துருக்மெனிஸ்தானின் மொத்த பரப்பளவில் எழுபது விழுக்காடு (35,000 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவை காராகும் பாலைவனம் அடைத்துள்ளது.

இப்பாலைவனத்தில் மக்கள் தொகை அடர்த்தி 6.5 சதுர கிலோ மீட்டரில் ஒரு நபர் விகிதத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 70 முதல் 150 மில்லி மீட்டராக உள்ளது.[1]

அமைவிடம்

காஸ்பியன் கடலுக்கு கிழக்கே, ஏரல் கடலுக்கு வடக்கே, ஆமூ தாரியா ஆறு மற்றும் கிசுல்கும் பாலைவனத்திற்கும் வடகிழக்கில் துருக்மெனிஸ்தானில் காராகும் பாலவனம் அமைந்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் ஆதாரங்கள்

பாலைவனச் சோலைகள் மற்றும் சிறிதளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தற்போது இங்கு கணிசமாக பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நரகத்திற்கான கதவு

காராகும் பாலைவனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க 70 மீட்டர்கள் (130 அடிகள்)[2] விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலமும், சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) ஆழத்தில் தோண்டிய மிகப் பெரிய பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் மீத்தென் எரிவாயு தீச்சுவாலை தொடர்ந்து உமிழ்ந்தபடி இருப்பதால் இப்பகுதியை நரகத்திற்கான கதவு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.[3]

போக்குவரத்து

டிரான்ஸ்-காஸ்பியன் தொடருந்து சேவை உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்