சாகுஜி

சாகுஜி
சாகுஜி
5வது மராட்டிய சத்திரபதி
ஆட்சிக்காலம்12 ஜனவரி 1708 – 15 டிசம்பர் 1749
முடிசூட்டுதல்12 ஜனவரி 1708 சாத்தாரா நகரம்
முன்னையவர்இரண்டாம் சிவாஜி
பின்னையவர்இரண்டாம் இராஜாராம்
பிறப்பு18 மே 1682
கங்குலி கோட்டை, மங்கோன்
இறப்பு15 டிசம்பர் 1749
ரங்கமகால் அரண்மனை, சாத்தாரா
துணைவர்சாவித்திரிபாய்
அம்பிகாபாய்
மரபுபோன்சலே
தந்தைசம்பாஜி
தாய்யேசுபாய்
மதம்இந்து

சத்ரபதி சாகுஜி போன்சலே (Shahuji Bhosle) (1682–1749) மராட்டியப் பேரரசின் நிறுவனரும், போன்சலே குல சத்ரபதி சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனும் 5வது மராட்டியப் பேரரசரும் ஆவார். 1689ல் தன் சிறு வயதில் சாகுஜி தன் தாயுடன் தில்லி முகலாயர்களின் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

பின் இளைஞராக வளர்ந்த சாகுஜி 1708ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து சாத்தாராவிற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த சத்திரபதி இராஜாராம்தாராபாய் இணையரின் மகனுமான இரண்டாம் சிவாஜியை, பெரும் பிணக்குகளுடன் பதவியிலிருந்து அகற்றி விட்டு தான் மராத்திய அரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [2][3]

சத்திரபதி சாகுஜி தனது ஆலோசனை கூறவும், மராத்தியப் படைகளை வழிநடத்தவும் பேஷ்வாக்களை நியமித்துக் கொண்டார்.

பேரரசின் விரிவாக்கம்

மராத்தியப் பேரரசின் முதல் பேஷ்வாவாக நியமிக்கப்பட்ட பாலாஜி விஸ்வநாத் மற்றும் மராத்திய கூட்டமைப்பின் இடைவிடாத முயற்சியால், வட இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[4]

சாகுஜியின் காலத்தில் அவரது படைத்தலைவர்களான ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா வம்சத்தவர்கள் குவாலியர் அரசு, இந்தூர் அரசு, பரோடா அரசுகளின் சிற்றரசர்களாக இருந்தனர்.[5]

பேஷ்வாக்களின் ஆதிக்கம்

சத்திரபதி சாகுஜியின் மறைவிற்குப் பின் வந்தவர்கள் பெயரளவிற்கு மராட்டிய சத்திரபதிகளாக இருந்தனர். அரசின் அனைத்து அதிகாரங்களும் சத்திரபதியின் பெயரில் பேஷ்வாக்களின் கையில் சென்றது.

முன்னர் சத்திரபதி
1707 - 1749
பின்னர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://archive.org/stream/rukaatialamgirio00aurarich#page/152/mode/2up%7C Rukaat-i-Alamgiri page 153
  2. A. Vijaya Kumari; Sepuri Bhaskar. "Social change among Balijas: majority community of Andhra Pradesh". MD. பார்க்கப்பட்ட நாள் 2011-06-24.
  3. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-34-4.
  4. Stein, B. (2010). A history of India (Vol. 10). John Wiley & Sons page= 187
  5. Gordon, S. (1993). The Marathas 1600–1818 (Vol. 4). Cambridge University Press, pages 121–130.

வெளி இணைப்புகள்