பிரசாந்தி நிலையம்

பிரசாந்தி நிலைய வளாகம், புட்டபர்த்தி, அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
பிரசாந்தி நிலையத்தின் நுழைவாயில்
சைதன்ய ஜோதி, உலக-சமயங்களின் அருங்காட்சியகம்
சத்திய சாய் இசைக் கல்லூரி, பிரசாந்தி நிலையம்

பிரசாந்தி நிலையம் (Prasanthi Nilayam) (14°9.91′N 77°48.70′E / 14.16517°N 77.81167°E / 14.16517; 77.81167, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தியில் அமைந்துள்ளது.[1]புட்டபர்த்தியில் பிறந்தவர் சத்திய சாயி பாபா ஆவார். இந்நிலையத்தை சத்திய சாயி பாபாவின் மைய அறக்கட்டளை நிறுவியது.[2]) பிரசாந்தி நிலையத்தில் சத்திய சாயி பாபா பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். தற்போது பிரசாந்தி நிலையத்தில் சத்திய சாயி பாபா சமாதி உள்ளது.

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தை அடைவதற்கு சத்திய சாய் பிரசாந்தி இரயில்வே நிலையம் உள்ளது.[3]இந்த இரயில்வே நிலையம் பிரசாந்தி நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பெங்களூருவிலிருந்து 154 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பிரசாந்தி நிலையம் உள்ள புட்டபர்த்தியில், சத்திய சாய் பல்கலைக்கழகம், உலகத் தரம் வாய்ந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, விளையாட்டு அரங்கங்கள், இந்து சமயக் கல்வி மையம் மற்றும் இசைக் கல்லூரி உள்ளது.

தட்ப வெப்பம்

கோடைக்காலத்தில் வெப்பம் 30 °C-40 °C, (86F - 104F) இருக்கும். குளிர்காலத்தில் 20 °C-27 °C (68F - 81F) வரை இருக்கும்[4]

போக்குவரத்து

சாலை

இது ஆந்திராவின் அனந்தபூர் நகரத்திலிருந்து (84 கிலோமீட்டர்கள் (52 mi)) தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 154 கிலோ மீட்டர் தொலைவிலும், ஐதராபாத்திலிருந்து (441 கிலோமீட்டர்கள் (274 mi)) தொலைவிலும், சென்னையிலிருந்து (375 கிலோமீட்டர்கள் (233 mi)) தொலைவிலும் உள்ளது.

பிரசாந்தி நிலையத் தொடருந்து நிலையம்

சத்திய சாய் பிரசாந்தி நிலையம் தொடருந்து நிலையம் [5], புட்டபர்த்தியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஐதராபாத், புது தில்லி செல்லும் தொடருந்துகள் புட்டபர்த்தி சத்திய சாய் பிரசாந்தி தொடருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்